புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

24 அக்., 2012

கே.பியின் விடுதலை சர்வதேச சட்ட மீறல்
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சர்வதேசக் குற்றவாளியாகக் கூறப்படும் கே.பி. எனப்படும் குமரன் பத்மநாதனுக்கு நாட்டில் சுதந்திரமாகச் செயற்படுவதற்கு இடம் வழங்கியமையானது சர்வதேசச் சட்டத்தை மீறும் செயல்.

 
ஆயிரக்கணக்கான எமது இராணுவத்தினரைக் கொல்ல ஆயுதம் வழங்கியவரை எந்தவித குற்றச்சாட்டுக்களும் இன்றி விடுவித்திருப்பதானது எமது நாட்டின் சட்டம் மற்றும் சர்வதேசச் சட்டம் ஆகியவற்றை அரசு முழுமையாக மீறியுள்ளதையே காட்டுகிறது. இவ்வாறு அரசைக் கடுமையாகச் சாடியுள்ளது ஐக்கிய தேசியக் கட்சி. 
 
விடுதலைப்புலிகளிடம் உள்ள 20 கோடி ரூபா நிதி, கப்பல்கள், எரிபொருள் நிரப்பு நிலையங்கள் இவை அனைத்தையும் அரச உடமையாக்குவதே தமது நோக்கம் என கே பி கைது செய்யப்பட்ட வேளையில் அரசு கூறியது.
 
அப்படியானால் அந்த 20 கோடிரூபா நிதி எங்கே? எனவும் அது அரசிடம் கேள்வி எழுப்பியுள்ளது. கட்சியின் பொது செயலாளர் திஸ்ஸ அத்தாநாயக்க, கொழும்பில் நேற்று இடம் பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே இதனைக் குறிப்பிட்டார்.
 
இது குறித்து அவர் மேலும் கூறியதாவது:
 
குமரன் பத்மநாதனுக்கு சுதந்திரம் வழங்கியமை எந்த அடிப்படையில் எனவும் அவர் அரசிடம் கேள்வி எழுப்பினார். கே.பி இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியின் கொலை வழக்கில் இந்திய நீதிமன்றத்தினால் சர்வதேச பிடியாணை பிறப்பிக்கப்பட்ட ஒரு குற்றவாளியாகக் காணப்படுகின்றார்.
 
இவ்வாறான பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்ட ஒருவர் இலங்கையில் சுதந்திரமாக நடமாட அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்று அரசே கூறுகிறது.
 
ஆயிரக்கணக்கான எமது இராணுவத்தினரைக் கொல்ல ஆயுதம் வழங்கியவரை எந்தவித குற்றச்சாட்டுக்களும் இன்றி விடுவித்திருப்பதானது எமது நாட்டின் சட்டம் மற்றும் சர்வதேசச் சட்டம் ஆகியவற்றை அரசு முழுமையாக மீறியுள்ளதையே காட்டுகிறது.
 
அது மட்டுமின்றி அவரைக் கைதுசெய்ய நடவடிக்கைகளை மேற்கொண்ட பாதுகாப்புப் படையினரையும் இது அவமதிக்கும் செயல்என்றார்.

ad

ad