புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 பிப்., 2014

 துரைமுருகன் மகன் கதிர்ஆனந்த் வேலூர் தொகுதியில் போட்டி?
தி.மு.க.வில் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட பணம் கட்டி விருப்ப மனு பெற்று வருகின்றனர். வேலூர் மாவட்டத்தில் உள்ள வேலூர், அரக்கோணம் 2 தொகுதிகளையும் தக்கவைக்க தி.மு.க. மும்முரமாக செயல்பட்டு வருகிறது.



தி.மு.க. கூட்டணியில் உள்ள யூனியன் முஸ்லிம்லீக், மனிதநேய மக்கள் கட்சி ஆகிய 2 கட்சிகளும் வேலூர் தொகுதியை குறி வைத்துள்ளன.    இதுவரை கூட்டணி கட்சிகளுக்கு வேலூர் தொகுதியை ஒதுக்கிய தி.மு.க. இந்த முறை நேரடியாக தி.மு.க. வேட்பாளரையே களத்தில் இறக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
முன்னாள் அமைச்சர் துரைமுருகன் மகன் கதிர்ஆனந்தை வேலூர் தொகுதியில் களத்தில் இறக்க தி.மு.க. முடிவு செய்துள்ளது என்று பேசப்படுகிறது.
காட்பாடியில் என்ஜினீயரிங் கல்லூரி நடத்தி வரும் கதிர்ஆனந்த் முதன் முதலாக போட்டியிடுவதன் மூலம் அரசியலில் கால்பதித்து தந்தையை போல் பெயர் வாங்குவார் என தி.மு.க.வினர் கூறுகின்றனர்.
கதிர்ஆனந்த் வேலூரில் போட்டியிட வேண்டும் என தி.மு.க.வினர் பலர் விருப்ப மனு செய்து பணம் கட்டி யுள்ளனர். வேலூர் தொகுதியில் போட்டியிட்டால் வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ளதாக கணித்து கதிர் ஆனந்தை களம் இறக்க திட்டமிட்டுள்ளனர்

ad

ad