புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 பிப்., 2014

காங்கிரஸை ஆட்சி பீடத்தில் இருந்து அகற்ற வேண்டும்: மதிமுக பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம்
இலங்கைக்கு சாதகமாகச் செயற்படும் காங்கிரஸ் கட்சியை  ஆட்சி பீடத்தில் இருந்து அகற்ற வேண்டும் என்று மதிமுக பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மதிமுகவின் பொதுக் குழுக் கூட்டம் சென்னை வானகரத்தில் இன்று நடைபெற்றது. இதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களாவன,

வரும் நாடாளுமன்றத் தேர்தலில், காங்கிரஸ் கட்சியை ஆட்சி பீடத்தில் இருந்து அகற்றும் குறிக்கோளோடு, பாரதிய ஜனதா கட்சியுடன் செய்து கொள்ளும் தொகுதி உடன்பாடு அடிப்படையில் தேர்தலில் போட்டியிடவும், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வெற்றியை இலக்காகக் கொண்டு மக்கள் சக்தியைத் திரட்டவும் இப்பொதுக்குழு தீர்மானிக்கிறது.
இலங்கையில் பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும், அந்த வாக்கெடுப்பில், ஈழத்தில் உள்ள தமிழர்களும், தமிழ்நாட்டின் சிறப்பு முகாம்களில் வசிக்கும் ஈழத்தமிழர்களும் உலகின் பல நாடுகளில் புலம்பெயர்ந்து வாழும் ஈழத்தமிழர்களும் வாக்கு அளிக்க உரிய ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும். அதற்கு ஐ.நா. மன்றம் முயற்சி எடுக்க வேண்டும் என்ற இலட்சிய நோக்கத்தை நிறைவேற்ற, மறுமலர்ச்சி தி.மு.க. பொதுக்குழு உறுதி மேற்கொள்கிறது.
இலங்கையின் அக்கிரமச் செயலுக்கும், அடாவடித்தனத்துக்கும் முடிவு கட்ட உறுதியான நடவடிக்கை எடுக்கக் கடமைப்பட்டுள்ள இந்திய அரசு, தமிழக மீனவர்கள் பிரச்சினையில் தொடர்ந்து மௌனம் சாதித்து வருவதற்கு கழகப்பொதுக்குழு கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கின்றது.
தமிழக மீனவர்களின் உயிரையும் உடைமையையும் பாதுகாக்க, கச்சதீவைத் திரும்பப் பெற வேண்டும் என்று தமிழக மக்கள் கோரி வரும் நிலையில், மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு இலங்கைக்குச் சாதகமான முறையில் செயல்பட்டு வருவதை, கழகப் பொதுக்குழு வன்மையாகக் கண்டிப்பதுடன், நீதிமன்றங்களில் தாக்கல் செய்து உள்ள பதில் மனுக்களைத் திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்துகின்றது.
என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ad

ad