புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 பிப்., 2014

அமெரிக்க இராணுவத்தை வன்னியில் நிலைநிறுத்த எடுத்த தீர்மானம் தோல்வி
அமெரிக்க இராணுவத்தை வன்னியில் நிலைநிறுத்த எடுத்தத் தீர்மானம் தோல்வியடைந்துள்ளது.ஹவாய் தீவுகளில் அமைந்துள்ள அமெரிக்க பிராந்திய இராணுவ முகாமின் ஒரு குழுவினை வன்னியில் நிலைநிறுத்த வட மாகாணசபை நிர்வாகம் முயற்சித்துள்ளது.
எனினும், இந்த முயற்சி தோல்வியடையச் செய்யப்பட்டுள்ளது.
பொறியியல் பிரிவு இராணுவக் குழுவைச் சேர்ந்தவர்களே இவ்வாறு வன்னிலையில் நிலைநிறுத்தப்படவிருந்தனர்.
இந்தத் திட்டத்தின் அடிப்படையில் வடக்கின் மன்னார், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு பாடசாலைகளை அமைப்பதற்கு திட்டமிடப்பட்டிருந்தது.
இது தொடர்பில் பாதுகாப்பு அமைச்சிற்கு அறிவிக்கப்படவில்லை.
வட மாகாணசபையின் கல்வி அமைச்சும், மாகாணசபை நிர்வாகமும் இந்தத் திட்டத்திற்கு இணங்கியிருந்தது.
வட மாகாணசபையின் இந்த்த் தீர்மானம் நாட்டின் தேசியப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ad

ad