புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 பிப்., 2014

 இலங்கை முதல் இனிங்ஸில் 587 ஓட்டங்கள் : சங்ககார முச்சதம் 
பங்களாதேஷ் மற்றும் இலங்கை அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட்  போட்டியில் தனது முதல் இனிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 587 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.


டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வரலாற்றில் தனது முதலாவது முச்சசதத்தைப் பூர்த்தி செய்த குமார் சங்கக்கார 319 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டுள்ளார்.

சிட்டக்கொங்கில் நடைபெற்றுவரும் இந்தப் போட்டியில் இலங்கை சார்பாக மஹேல ஜயவர்தன 72 ஓட்டங்களைப் பெற்றார்.

பங்களாதேஷ் பந்துவீச்சில் ஷகிப் அல் ஹசன் 5 விக்கெட்டுக்களை கைப்பேற்றியுள்ளார்.

ad

ad