புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 பிப்., 2014

பிரணாப்பை பிரதமர் ஆக்க மறுத்த சோனியா: மோடி

பாஜக பிரதமர்  வேட்பாளர் நரேந்திரமோடி கலந்து கொண்ட பிரம்மாண்ட பொதுக்கூட்டம் கொல்கத்தாவில் இன்று நடைபெற்றது. அதில் மோடி பேசியதாவது:

நான் பலமுறை கொல்கத்தாவிற்கு பிரசாரத்திற்காக வந்துள்ளேன் இப்போது தான்  பெரும் மக்கள் வெள்ளத்தை பார்க்கிறேன். மூன்றாவது அணியை பற்றி பேசுபவர்கள், இப்போதைய சூழ்நிலையில் ஆதரவு காற்று எந்த பக்கம் வீசிகிறது என்பதை கவனிக்க வேண்டும்.
தில்லியில் அமர்ந்து கொண்டு, மூன்றாவது அணியை பற்றி பேசிக் கொண்டிருப்பவர்கள், இங்கு (கொல்கத்தா) வந்து பார்க்க வேண்டும்; பாஜகவிறகு ஆதரவளிக்க நாட்டு மக்கள் முடிவெடுத்துவிட்டார்கள். குஜராத்திற்கும், மேற்குவங்கத்தற்கும் தொடர்பு இருக்கிறது.
ரவீந்தநாத் தாகூரின் சகோதரர் அகமதாபத்தில் நீண்ட காலம் தங்கியிருந்தார் தோஜி சுபாஸ் சந்திரபோசும் குஜராத்தின் ஹரிபுரா காங்கிரஸில் இருந்து  தலைவராக தேர்வுசெய்யப்பட்டார்.  விவேகானந்தர் கனவுப்படி இந்தியாவை உருவாக்க வேண்டும். பெஙகால் வளர்ச்சி பெற்றால் இந்தியா உலகின்முதன்மையான நாடாக திகழும்.
. இங்கு வந்தவுடன்  மாற்று அரசியலை உருவாக்க வேண்டும் என்று டாக்டர். சியாம பிரசாத் பேசியது நினைவுக்கு வந்தது. 2014 ஆம் ஆண்டு தேர்தல் மற்ற தேர்தலை போல் இல்லாமல் மறுபட்ட ஒரு வித்தியாசமான தேர்தல் ஆகும், வரும் தேர்தல் முடிவுகள் குறித்த கருத்து கணிப்புகளும், அரசியல் யூகங்களும் தவறாக போகப்போகின்றன. மக்கள், 60 ஆண்டுகால காங்கிரஸ் ஆட்சியை வெறுத்துவிட்டனர். நாடு தற்போது வளர்ச்சியை விரும்புகிறது.  மம்தாவிற்கு ஓட்டளித்து உங்களின் ஓட்டுக்களை வீணடித்து விடாதீர்கள்.
பா.ஜ.க,விற்கு வாக்களித்து உங்களின் உரிமைகளை நிலைநிறுத்த வேண்டும்; மேற்கு வங்கத்தின் அனைத்து தேவைகளையும் பா.ஜ., அரசு பூர்த்தி செய்யும். மேற்கு வங்கத்தை கடந்த 35 ஆண்டுகளாக ஆண்டு கொண்டிருப்பவர்களை வழியனுப்புங்கள். அதை செய்தால், இங்கு நீங்கள் எதிர்பார்க்கும் மாற்றம் வரும். நான் ஒரு உறுதியை அளிக்கிறேன்.
பெங்காலில் (மேற்கு வங்கத்தில்) பா.ஜ.க. வெற்றி பெற்றால், நாங்கள் இங்கு மக்களின் விருப்பங்களை நிறைவேற்றும் வகையில், தேவையான மாற்றங்களை கொண்டு வருவோம். பெங்காலின் மிக மூத்த அரசியல் தலைவர் பிரணாப் முகர்ஜி 2004 ஆம் ஆண்டு பிரதமர் ஆகியிருக்க வேண்டும். ஆனால் சோனியா அவரை பிரதமராக்க மறுத்ததுடன் மன்மோகன்சிங்கை பிரதமராக்கினார். இவ்வாறு மோடி பேசினார்.

ad

ad