புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 பிப்., 2014

ஜெனிவா பிரேரணையை இந்தியா நீர்த்துப் போகச் செய்யும்; வாசு­தேவ நாண­யக்­கார நம்பிக்கை 
news

இலங்­கைக்கு எதி­ரான அமெ­ரிக்­காவின் பிரே­ர­ணையை இந்­தியா ஆத­ரிக்கப் போவதும் இல்லை, எதிர்க்கப் போவ­து­மில்லை. மாறாக நீர்த்துப் போகச் செய்யும் என அமைச்சர் வாசு­தேவ நாண­யக்­கார நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.


இறுதிக்கட்ட யுத்தம் தொடர்­பான விசா­ர­ணை­களை நடத்த அமெ­ரிக்காவோ, தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­பினரோ குழுவை நிய­மிக்க முடி­யாது? இதனை சிங்­கள மக்கள் ஏற்­றுக்­கொள்­ள­  மாட்­டார்கள்

கடந்த பல மாதங்­க­ளாக எமக்கு எதி­ராக ஐ.நா. மனித உரிமைப் பேர­வையில் பிரே­ர­ணையை கொண்டு வரு­வ­தற்கு அமெ­ரிக்கா முயற்­சி­களை முன்­னெ­டுத்து வரு­கி­றது என அவர் சுட்டிக்காட்டியதுடன்,

இதனை முழு உல­கமே அறியும். அமெ­ரிக்­கா­வுக்கும் கூட்­ட­மைப்­புக்கும் திருப்­தி­ய­ளிக்­கக்­கூ­டிய விசா­ர­ணை­களே தேவை­யென்­கின்­றனர். இதற்­காக சர்­வ­தேச விசா­ர­ணையை கோரு­கின்­றனர்.

அவ்­வா­றானால் அவர்­க­ளது பிர­தி­நி­தி­க­ளையே விசா­ரணை குழுவில் நிய­மிக்க வேண்டும். இதனை சிங்­கள மக்கள் ஏற்­றுக்­கொள்ளப் போவ­தில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எமது பிரச்­சினை தொடர்­பாக உள்­நாட்டு விசா­ர­ணையே தேவை. அதற்­கான நிபு­ணர்கள் எம்­மிடம் உள்­ளனர்.

ஜனா­தி­பதி மகிந்த ராஜபக்ச திறந்த மன­துடன் நல்­லி­ணக்க ஆணைக்­கு­ழுவை நிய­மித்தார். அதற்­க­மைய தற்­போது அக்­கு­ழுவின் பரிந்­து­ரைகள் படிப்­ப­டி­யாக நிறை­வேற்­றப்­பட்டு வரு­கின்­றன.

30 வருட கால யுத்தம் இடம்­பெற்ற நாடு. எனவே, ஒரேநாளில் அல்­லது ஒரு வரு­டத்தில் அனைத்துப் பிரச்­சி­னை­க­ளுக்கும் தீர்வு கண்டு விட முடி­யாது என அவர் சுட்டிக்காட்டியதுடன்,

அத்துடன் ஐ. நா. மனித உரிமைப் பேர­வையில் அமெ­ரிக்கா இலங்­கைக்கு எதி­ராக கொண்டு வரும் பிரே­ர­ணையை இந்­தியா ஆத­ரிக்கப் போவதும் இல்லை, எதிர்க்கப் போவதுமில்லை.

ஆனால் கடந்த ஆண்டைப் போன்று எமக்கெதிரான பிரேரணையின் கடுமைத் தன்மையை நீர்த்துப் போகச் செய்வதற்கு முழுமையான ஆதரவை வழங்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ad

ad