புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 பிப்., 2014

சங்கக்கார, மஹேலவின் இணைப்பாட்டத்தால் இலங்கை அணி வலுவான நிலையில்

குமார் சங்கக்கார மற்றும் மஹேல ஜயவர்தனவின் இணைப்பாட்டத்தின் மூலம் பங்களாதே'{டனான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸை ஆடும் இலங்கை அணி வலுவான நிலையை எட்டியது.
சிட்டகொங்கில் நேற்று ஆரம்பமான போட்டியின் நாணய சுழற்சியல் வென்ற இலங்கை முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. இந்த டெஸ்டில் இலங்கை அணியில் இரு மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன. காயத்திற்கு உள்ளாகியிருக்கும் ரங்கன ஹேரத் மற்றும்
'மின்த எரங்க ஆகியோர் நீக்கப்பட்டு பதிலாக அஜந்த மெண்டிஸ், நுவன் பிரதீப் ஆகியோர் இணைக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய இலங்கை அணி 49 ஓட்டங்களை பெறுவதற்குள் ஆரம்ப விக்கெட்டுளை பறிகொடுத்தது. ஆரம்ப வீரர் திமுத் கருணாரத்ன 61 பந்துகளில் 31 ஓட்டங்களை பெற்ற நிலையில் வெளியேறினார். அதேபோன்று மறுமுனையில் ஆடிய கவ்'hல் சில்வா 11 ஓட்டங்களுடன் வெளியேறினார்.
எனினும் சிரேஷ்ட வீரர்களான மஹேல மற்றும் சங்கக்கார அணியை வலுவான நிலைக்கு கொண்டுவர கைகொடுத்தனர். இருவரும் இணைந்து மூன்றாவது விக்கெட்டுக்காக 178 ஓட்டங்களை இணைப்பாட்;டமாக பெற்றனர். இதன்மூலம் இலங்கை அணியின் மொத்த ஓட்டங்கள் 294 ஆக உயர்ந்தது.
அதில் சிறப்பாக ஆடிய மஹேல ஜயவர்தன 147 பந்துகளில் 6 பௌண்டரிகளுடன் 72 ஓட்டங்களை குவித்தார். இது மஹேலவின் 46 ஆவது டெஸ்ட் அரைச்சதமாகும். எனினும் அவர் முதல் நாள் ஆட்டத்தின் கடைசி தறுவாயில் மஹ்மூதுல்லாவின் பந்துக்கு எல்.பி.டபிள்யு முறையில் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த டினேஷ் சந்திமாலினால் 27 ஓட்டங்களையே எடுக்க முடிந்ததோடு அணித்தலைவர் அன்ஜலோ மத்தியு+ஸ் 5 ஓட்டங்களை மாத்திரமே பெற்றார்.
இதன்மூலம் இலங்கை அணி முதல் நாள் ஆட்டத்தின் தேநீர் இடைவேளைக்கு பின்னர் மூன்று விக்கெட்டுளை பறிகொடுத்து பின்னடைவை சந்தித்தது. எனினும் ஒருமுனையில் சிறப்பாக ஆடிய சங்கக்கார கடைசி வரை களத்தில் இருந்து தனது 34 ஆவது டெஸ்ட் சதத்தை பு+ர்த்தி செய்தார். 245 பந்துகளுக்கு முகம்கொடுத்த சங்கக்கார 19 பௌண்டரிகள் 3 சிகசர்கள் அடங்கலாக ஆட்டமிழக்காது 160 ஓட்டங்களைப் பெற்றார். சங்கக்கார டெஸ்ட் அரங்கில் 150 ஓட்டங்களை எட்டுவது இது 17 ஆவது தடவையாகும். அவர் இதுவரை 8 தவைகள் இரட்டை சதம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இறுதியில் இலங்கை அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவின்போது தனது முதல் இன்னிங்ஸ{க்காக 92 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 314 ஓட்;டங்களை பெற்றுள்ளது. சங்கக்காரவுடன் கித்ருவன் விதானகே ஓட்டம் இன்றி களத்தில் உள்ளார். பங்களாதேஷ் சார்பில் 7 வீரர்கள் பந்துவீச்சில் பயன்படுத்தப்பட்டனர். இதில் 'கிப் அல் ஹஸன் 70 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுளை வீழ்த்தியதோடு n'hஹக் காசி மற்றும் மஹ்முதுல்லா தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.
இன்று போட்டியின் இரண்டாவது நாளாகும்.

ad

ad