புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 பிப்., 2014

ராஜீவ் கொலை வழக்கு: மூவரின் தூக்குத் தண்டனையை குறைக்க மத்திய அரசு எதிர்ப்பு
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் மூன்று தமிழரின் தூக்கு தண்டனையை இரத்து செய்ய உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
ராஜீவ் வழக்கில் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூன்று தமிழருக்கும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இவர்கள் ஜனாதிபதிக்கு கருணை மனுவை அனுப்பி இருந்தனர்.

ஆனால் இந்த கருணை மனு 11 ஆண்டு கால தாமதத்துக்குப் பின்னர் ஜனாதிபதியால் நிராகரிக்கப்பட்டது. இதை எதிர்த்து மூவரும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனு மீது கடந்த 28-ந் திகதி விசாரணை நடைபெற்றது. அப்போது மத்திய அரசு சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சித்தார்த் லூத்ரா, தூக்கு தண்டனை குற்றவாளிகளின் கருணை மனு மீது முடிவு எடுக்க தாமதம் ஏற்பட்டால் அதன் அடிப்படையில் தண்டனையை குறைக்கலாம் என ஜனவரி 21ந் திகதி உச்ச நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரி மனு தாக்கல் செய்ய மத்திய அரசு பரிசீலிக்கிறது என்றார்.
இதையடுத்து கடந்த 29-ந் திகதி வழக்கின் விசாரணை நடைபெற்றது. அப்போது மூன்று தமிழர் சார்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.
பின்னர் இன்றைய திகதிக்கு விசாரணை ஒத்தி வைக்கப்பட்டது. இன்றைய விசாரணையின் போது மத்திய அரசு தரப்பில், மூவரது தூக்கு தண்டனையை இரத்து செய்யக் கூடாது. கருணை மனுவை தாமதம் செய்வதாலேயே தூக்கு தண்டனையை இரத்து செய்யக் கூடாது. இதுபோன்ற வழக்குகளில் தூக்கை இரத்து செய்யக் கோர முடியாது என்று வாதிடப்பட்டது.

ad

ad