புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 பிப்., 2014

சுதந்திரத்தை அனுபவிக்கும் வடக்கு மக்களை பலிக்கடாவாக்க சர்வதேச குழுக்கள் முயற்சி

நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி உரை
* வடக்கு மக்களின் மனித உரிமைகள் பயங்கரவாதத்தால் பறிக்கப்பட்ட போது அதனை மீளப்பெற்றுக் கொடுக்க எவரும் முன்வரவில்லை
* யுத்தக் குற்றச்சாட்டை முன்வைக்க முயல்வது மோசமான அநீதி
* பயங்கரவாத மோதலின் சிக்கலை சக்திமிக்க நாடுகள் புரிந்துகொள்ள வேண்டும்
* நாட்டின் துரோகிகளானவர்களுக்கும் நாம் இங்கு கதவைத் திறந்துள்ளோம்
* எனது மக்களுக்கும் இந்த நாட்டில் சுதந்திரமாக வாழும் உரிமை அவசியம்
* வடக்கில் பயங்கரவாதத்தால் உரிமை மறுக்கப்பட்ட தமிழ்மக்கள் சுதந்திரம் தேடி சிங்கள மக்களிடமே வந்தனர்
எத்தகைய சூழ்நிலையிலும் எத்தகைய அழுத்தங்களுக்கும் பயந்து வெற்றிகொண்ட சுதந்திரத்தை இழக்கத் தயாரில்லை என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார்.
எனது நாட்டின் மக்களுக்கு இந்த நாட்டில் சுதந்திரமாக வாழ்வதற்கான உரிமை அவசியம் எனத் தெரிவித்த ஜனாதிபதி; வெளியாரைவிட இந்த நாட்டில் பிறந்து இங்கு வாழும் எமக்கு எமது நாட்டின் அனுமதியையும் ஐக்கியத்தையும் பாதுகாப்பதில் அதிகமான அக்கறையுள்ளதெனவும் தெரிவித்தார். பிரிவினைவாதத்துக்குத் தம்மை அர்ப்பணித்துச் செயற்படுபவர்கள் வெளியிடும் தகவல்களை வைத்துக் கொண்டு இலங்கைக்கு எதிராக யுத்தக் குற்றச்சாட்டை முன்வைப்பது மோசமான அநீதியாகும் என குறிப்பிட்ட ஜனாதிபதி; சுதந்திரத்தை அனுபவிக்கும் வடக்கு மக்களை பலிக்கடாவாக்க சர்வதேச குழுக்கள் முயற்சிப்பதாகவும், அதனை அனைவரும் உணர்ந்து கொள்வது அவசியம் எனவும் தெரிவித்தார்.
அன்று வடக்கு மக்களின் மனித உரிமை அபகரிக்கப்பட்ட போது, அதனை அந்த மக்களுக்கு மீளப் பெற்றுக்கொடுக்க எவரும் முன்வரவில்லை எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி; பயங்கரவாதம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட 4 வருட குறுகிய காலத்தில் இது போன்று மீள் நிர்மாணிக்கப்பட்டு முன்னேறிய நாடு உலகிலேயே இருக்க முடியாது எனவும் தெரிவித்தார். இலங்கையின் 66வது சுதந்திர தினக் கொண்டாட்ட நிகழ்வுகள் நேற்றுக் காலை கேகாலை நகரில் கோலாகலமாக இடம்பெற்றன.
அமைச்சர்கள், உள்நாட்டு வெளிநாட்டு இராஜதந்திரிகள், முக்கியஸ்தர்களுடன் பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்ற இந்நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய ஜனாதிபதி; முழு இலங்கையும் சுதந்திரத்தை அனுபவிக்கும் இச் சந்தர்ப்பத்திலேயே இலங்கையின் 66வது சுதந்திர தினத்தில் நாம் தேசியக் கொடியை ஏற்றிவைத்துள்ளோம்.
சுதந்திரம் என்பது மிக முக்கியமானது. எனினும் பயங்கரவாதத்திலிருந்து நாட்டை விடுவிக்கவோ பொருளாதார வெற்றியை ஈட்டிக்கொள்வதற்கோ நாட்டைக் கட்டியெழுப்பவோ கடந்த அரசாங்கங்கள் முயற்சிக்கவில்லை.
நாட்டு மக்கள் இழந்த அரச வளங்களை நாம் அவர்களுக்கு மீள உரிமையாக்கியுள்ளோம். கேஸ் நிறுவனம், காப்புறுதி நிறுவனம் போன்றவற்றை நாம் தற்போது மக்களுக்கு மீள பெற்றுக் கொடுத்துள்ளோம்.
முதல் தடவையாக பொது நலவாய நாடுகள் மாநாட்டை இலங்கையில் நடத்தி நாட்டைக் கட்டியெழுப்பியுள்ள விதத்தையும் மக்களுக்குப் பெற்றுக் கொடுத்துள்ள நலன்களையும் அதன் மூலம் உலகிற்குக் காட்டியுள்ளோம். எமது நாட்டை மோசமாக விமர்சிப்பவர்களும் நாம் மேற்கொண்டுள்ள அபிவிருத்திகளை ஏற்றுக்கொள்வர்.
பயங்கரவாதத்தை தோல்வியுறச் செய்து வெற்றியை தெற்கு மக்கள் பெற்றுக்கொண்ட போது அதை வடக்கு மக்களினதும் வெற்றியாக மாற்றும் பொறுப்பு எமக்குள்ளது என்பதையும் நாம் அன்றே கூறினோம்.
அன்று வடக்கு மக்களின் மனித உரிமை பறிக்கப்பட்ட போது அதனை மீளப்பெற்றுக்கொடுக்க எவரும் வரவில்லை. முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் அமிர்தலிங்கம், ஷாம் தம்பிமுத்து, லக்ஷ்மன் கதிர்காமர் போன்றோர் மட்டுமன்றி இந்தியப் பிரதமர் ராஜீப் காந்தி படுகொலை செய்யப்பட்ட போதும் எவரும் மனித உரிமையை ஞாபகப்படுத்தியதும் இல்லை.
வடக்கில் சகல குடும்பங்களிலிருந்தும் புலிகள் இளைஞர்களை படையில் சேர்த்தனர். பாடசாலை செல்லும் சிறுவர்களையும் பலாத்காரமாக படையில் சேர்த்தனர். கப்பம் பெற்றனர். அரசாங்க ஊழியர்களின் மாதாந்த சம்பளத்திலிருந்தும் ஒரு பகுதியை அவர்களுக்கு வழங்க வேண்டிய நிலையே அன்றிருந்தது.
இத்தகைய சூழ்நிலையில் தமிழ் மக்கள் தமக்கான சுதந்திரத்தைத் தேடி சிங்கள மக்களிடமே வந்தனர். கொள்ளுப்பிட்டி, பம்பலப்பிட்டி, மட்டக்குளி என சுதந்திரம் தேடி அம்மக்கள் இங்கு வந்தனர்.
2009ம் ஆண்டு நாம் பயங்கரவாதத்தை ஒழித்திருக்காவிட்டால் இன்றும் வடக்கில் பிள்ளைகள் பாடசாலைகளுக்கோ பல்கலைக்கழகங்களுக்கோ நிம்மதியாகச் சென்றிருக்க முடியாது. இன்று வடக்கு மக்கள் எந்தளவு சுதந்திரத்தை அனுபவிக்கின்றனர் என்பதை சகலரும் உணர வேண்டும். 2009ல் யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் எந்த குண்டு வெடிப்பும் துப்பாக்கி வேட்டும் இடம்பெற்றதில்லை.
எனினும் தற்போது சுதந்திரத்தை அனுபவிக்கும் வடக்கு மக்களை பலிக்கடாவாக்க சர்வதேச சக்திகள் முயற்சிப்பதை அனைவரும் உணர வேண்டும். எல்லாக் காலங்களிலும் ஆக்கிரமிப்பாளர்கள் முதலைக் கண்ணீர் வடித்துக் கொண்டு இங்கு வந்து மக்களை ஏமாற்றினர். மக்களைப் பாதுகாப்பதாகவும் மனித உரிமையைப் பெற்றுக் கொடுப்பதாகவும் ஜனநாயகத்தை நிலைநாட்டவும் எனக் கூறிக்கொண்டே உள் நாட்டு விவகாரங்களில் தலையிட்டனர்.
பயங்கரவாதத்தை ஒழிப்பதிலுள்ள கஷ்டத்தை சகல நாடுகளும் உணர வேண்டியது முக்கியம். பலம்வாய்ந்த நாடுகள் எதிர்நோக்கிய பிரச்சினை களைவிட மிக மிக மோசமான சவாலை நாம் எதிர்கொண்டுள்ளோம். எனினும் நாம் வேறு நாடுகளிலிருந்து இது விடயத்தில் வேறுபடுவது சிவில் மக்களின் பாதுகாப்புக்கு நாம் முதன்மையளித்ததாகும். மக்களின் பாதுகாப்புக்கு முதன்மையளித்தே செயற்பட வேண்டும் என நாம் படையினருக்கு உத்தரவிட்டிருந்தோம்.
பிரிவினை வாதத்துக்குத் தம்மை அர்ப்பணித்துச் செயற்படுபவர்கள் வழங்கும் தகவல்கள் தோல்வியடைந்தோர் வழங்கும் தகவல்களை பெற்றுக் கொண்டு இலங்கைக்கு எதிராக யுத்தக் குற்றச்சாட்டை முன்வைப்பது பெரும் அநீதியாகும் என்பதே எமது கருத்து.
இலங்கைக்கு எதிராக ஜெனீவாவில் முன்வைக்கப்படும் யுத்தக் குற்றச்சாட்டு சமாதானத்துக்கு எதிரானவர்களின் வெற்றி என்றே எம்மால் கூற முடியும். இது சமாதானத்துக்கும் சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்கும் அர்ப்பணித்துள்ள மக்களை பயப்படுத்துவதற்கான செயலாகும்.
எத்தகைய சூழ்நிலையிலும் பயத்துக்குள்ளாகி நாம் கஷ்டப்பட்டு பெற்றுக்கொண்ட சுதந்திரத்தை இழப்ப தற்கு நாம் தயாரில்லை என்பதைத் தெளிவாகக் கூறவிரும்புகின்றோம்.
நாட்டின் சமாதானத்தை ஐக்கியத் தைப் பாதுகாக்க வேண்டும் என்பதை நாம் நினைவிற் கொள்ள வேண்டும். அடிப்படை இல்லாத குற்றச்சாட்டுக்களை சுமத்தும் போது நாம் கசப்பான கடந்த காலத்தை நினைவு படுத்த தூண்டப் படுகிறோம்.
‘கசப்பான அனுபவங்களை கடல் நீரில் எழுத வேண்டும். அதே போன்று சிறந்த பயனுள்ள அனுபவங்களைக் கல்லில் பொறிக்க வேண்டும்” கடல் அலையில் எழுதியது விரைவில் அழிந்து போகும். அதே வேளை, கல்லில் பொறித்தவை நிலைத்து நிற்கும். இரண்டையும் நாம் உணர்ந்துள்ளோம்.
எம்மைக் கொலை செய்ய வந்த பயங்கரவாதிகளை மன்னித்து அவர்களை பொலிசிலும் படையிலும் சேர்த்து சிறந்த எதிர்காலத்தைப் பெற்றுக்கொடுத்தது, கடந்த கால கசப்பான அனுபவங்களை மறப்பதற்கே. எமது கலாசாரத்தில் ஒருபோதும் பழி வாங்கல் இருந்ததில்லை.
பயங்கரவாதத்தை ஒழித்தது போன்றே தெற்கில் பாதாள உலகக் குழுக்களையும் நாம் இல்லாதொழித்துள்ளோம். நீதியை நிலைநாட்டவே நாம் எப்போதும் செயற்பட்டுள்ளோம்.
புதிய சட்டங்களைக் கொண்டு வருவதற்குப் பதிலாக 30 வருடம் நடைமுறையிலிருந்த அவசரகால சட்டத்தை நாம் நீக்கியுள்ளோம். பயங்கரவாதத்துக்கு எதிராக யுத்தம் செய்த வேளையிலும் நாம் ஊடகங்களுக்கு பாதிப்பு ஏற்படும் சட்டங்களை பிரயோகித்ததில்லை.
வேறு நாடுகளில் கால்வைக்கக் கூட இடமளிக்காத சமாதானத்தின் துரோகிகளான, நாட்டின் துரோ கிகளானவர்களுக்கும் நாம் இங்கு கதவைத் திறந்துள்ளோம். அத்தகைய கொள்கையுடனேயே நாம் இன்னும் செயற்படுகின்றோம் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
சிட்டுக்குருவிக்குக் கூட அதன் கூட்டில் அதற்குத் தேவையான விதத்தில் சுதந்திரமாக வாழ்வதற்கு இடமிருக்க வேண்டும். எனது மக்களுக்கும் இந்த நாட்டில் சுதந்திரமாக வாழும் உரிமை அவசியம் எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார். 

ad

ad