புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 பிப்., 2014

இது கதிர்வேலன் காதல் படத்துக்கு வரி விலக்கு கேட்டுவழக்கு:  ஐகோர்ட் நோட்டீஸ்

‘ரெட்ஜெய்ண்ட் மூவிஸ்’ நிறுவனம் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில்,
’’நடிகர் உதயநிதி ஸ்டாலின்– நயன்தாரா உள்ளிட்ட நடிகர், நடிகைகள் நடித்த ‘இது கதிர்வேலன் காதல்’ படத்தை தயாரித்து உள்ளோம். இந்த
படத்துக்கு தமிழக அரசு வரிவிலக்கு அளிக்க மறுத்து விட்டது.


எனவே ஐகோர்ட் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் ஒரு கமிஷன் அமைத்து எங்களது திரைப்படத்தை பார்வையிட்டு இது வரிவிலக்கு பெற தகுதியானதா? என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
அறிக்கையின் அடிப்படையில் வரிவிலக்கு வழங்குவது குறித்து வணிக வரித்துறை கமிஷனர் தகுந்த முடிவு மேற்கொள்ள உத்தரவிட வேண்டும்’’என்று இருந்தது.
இந்த மனு நீதிபதி தனபாலன் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி வணிக வரித்துறை கமிஷனர் பதில் மனுதாக்கல் செய்ய நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டார். இந்த வழக்கு வருகிற வெள்ளிக் கிழமை மீண்டும் விசாரணைக்கு வருகிறது.

ad

ad