புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 பிப்., 2014

யாழ் மற்றும் வெலிக்கடை சிறையிலிருந்து 1242 கைதிகள் விடுதலை
இலங்கையின் 66வது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ், யாழ். சிறைச்சாலையில் தண்டப்பணம் செலுத்த முடியாததால் சிறை தண்டனை அனுபவித்து வந்த 9 பேர் இன்று காலை விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
சிறு குற்றங்கள் புரிந்து தண்டப்பணத்தை கட்ட முடியாததனால் சிறைத்தண்டனை பெற்ற ஒரு பெண் கைதி உட்பட 9 கைதிகளை
விடுதலை செய்ததாக யாழ். சிறைச்சாலை அத்தியட்சகர் எச்.எம். பெரேரா தெரிவித்தார்
இதேவேளை, கொழும்பு வெலிக்கடை சிறைச்சாலையில் வைத்து 1233 கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களில் 1194 ஆண்களும் 39 பெண்களும் அடங்குகின்றனர். நாடாளாவிய ரீதியிலுள்ள சிறைச்சாலைகளில் 36 சிறைச்சாலைகளிலிருந்தே இந்த கைதிகள் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்கள ஊடகப்பேச்சாளர் கே.பீ.குலதுங்க தெரிவித்தார்.

ad

ad