புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 பிப்., 2014

மதுபோதையில்  மணமகன்: அட்சதை போட வந்தவர் மணமகனாகி மணப்பெண்ணை  கைப்பற்றினார் 

சேலம் மாவட்டத்தில் குடிகார மாப்பிள்ளையை தூக்கி வீசிய மணமகளுக்கு திருமணத்திற்கு வந்திருந்த நபர் ஒருவரோடு திருமணம் நடந்துள்ளது.
சேலம் மாவட்டம் மேட்டூரில் வசிக்கும் மோகன் என்பவரின் மகள் ரேவதி(25), இவருக்கும், விஜயரத்தினம்( 27) என்ற நபருக்கும் திருமணம் பேசி முடிவு செய்தனர்.
மேட்டூரில் நேற்று திருமணம் நடப்பதாக இருந்தது. முதல் நாள் இரவே இரு வீட்டாரும் திருமண மண்டபத்திற்கு வந்து விட்டனர். அன்று இரவு மாப்பிள்ளை விஜய்ரத்னம், தனது நண்பர்களுடன் மது அருந்தியுள்ளார். அதிகமாக மது குடித்ததால் போதை தலைக்கேறி தாறுமாறாக செயல்பட ஆரம்பித்தார்.
மணமகள் வீட்டாருடன் சண்டைக்குப் போனார். இதையடுத்து அவரை உறவினர்கள் சமாதானப்படுத்தியுள்ளனர். அடுத்த நாள் காலையில் மாப்பிள்ளையால் எழுந்திருக்க முடியவில்லை. முதல் நாளில் கழுத்து வரைக்கும் குடித்திருந்ததால் அவரால் காலையில் நேரத்திற்கு எழுந்திருக்க முடியவில்லை. மயக்கமாகிக் கிடந்தார்.
இதனால் முகூர்த்த நேரம் தாண்டியும் மாப்பிள்ளை மணமேடைக்கு வரவில்லை. திருமணம் நின்று போனது. இதனால் ஆவேசமடைந்த மணமகளின் தந்தை பொலிசில் புகார் செய்தார். அதே நேரத்தில் மோகனின் உறவினர்கள், திருமணத்திற்கு வந்துள்ள உறவுப் பையன் யாரையாவது பேசி உடனடியாக ரேவதிக்குத் திருமணத்தை நடத்தி விடலாமே என்று யோசித்துள்ளனர்.
ரேவதியும், குடிகார மாப்பிள்ளை எனக்கு வேண்டாம் என்று திட்டவட்டமாக கூறி விட்டார். இதையடுத்து அங்கேயே தேடிப் பார்த்ததில் சுகுமாரன் என்ற நபருடன், ரேவதிக்கு திருமணம் நடந்து முடிந்தது.
மணமகள் வீட்டார் சந்தோஷமாக திரும்பிச் சென்றனர். பழைய மணமகன் வீட்டாரோ அவமானத்தில் கூனிக் குறுகிப் போய் சென்றனர்.

ad

ad