புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 பிப்., 2014

பஞ்சாப் பொற்கோயில் மீதான தாக்குதல் - பிரித்தானியாவுக்கு தொடர்பு

1984ஆம் ஆண்டு நடந்த பொற்கோயில் தாக்குதல் சம்பவமான ஆபரேஷன் புளூ ஸ்டார் தாக்குதலில் பிரிட்டனுக்கு தொடர்புள்ளதாக தகவல் வெளியானது.
இது தொடர்பான உண்மைகளை தெரிவிக்கும்படி பிரிட்டன் நாட்டின் சீக்கிய நாடாளுமன்ற உறுப்பினர், அந்நாட்டு பாராளுமன்ற உறுப்பினர்களிடம் வலியுறுத்தினார்.
காலிஸ்தான் பிரிவினைவாத தீவிரவாதிகளை பொற்கோயிலில் இருந்து வெளியேற்றுவது குறித்து அந்நாட்டு அரசிடம் ஆலோசனை வழங்குமாறு இந்தியா கேட்டுக்கொண்டதாக கூறப்படுகிறது.
இக்கடிதத்திற்கு அப்போதைய பிரதமர் மார்கரெட் தாட்செர் ஒப்புதல் கொடுத்த பின் சிறப்பு படை அதிகாரி ஒருவர் அந்த ஆண்டின் பெப்ரவரி மாதத்தில் 8ம் திகதிக்குமு்  19ம் திகதிக்கும் இடையே இந்தியாவிற்கு வந்தார்.
அவர் இந்திய ராணுவம் வரைவு செய்திருந்த தாக்குதல் திட்டத்தில் சில ஆலோசனை வழங்கியதாக அந்நாட்டின் வெளியுறவுத்துறை செயலாளர் வில்லியம் ஹேக் நேற்று அந்நாட்டு பாராளுமன்றத்தில் தெரிவித்தார். பின்னர் பிரதமர் இந்திராவின் ஒப்புதலுக்குப் பின் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் கூறப்பட்டது.
இது குறித்து விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்கும்படி அந்நாட்டு மூத்த அரசு ஊழியருக்கு பிரதமர் டேவிட் கேமரூன் உத்தரவிட்டதை தொடர்ந்து, இது தொடர்பாக விசாரித்து தனது அறிக்கையை சமர்ப்பித்துள்ளது.

ad

ad