புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 பிப்., 2014

    டெஸ்ட் அரங்கில் சங்ககரா 34-வது சதம் இலங்கை அபார தொடக்கம்

வங்கதேசத்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இலங்கை வீரர் சங்ககரா சதம் அடித்தார். டெஸ்ட் அரங்கில் அவர் அடிக்கும் 34-வது சதம் இதுவாகும். இதன் மூலம், சர்வதேச டெஸ்டில் 34 சதம் அடித்த சுனில் கவாஸ்கர்
மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் முன்னாள் வீரர் லாரா ஆகியோரது சாதனையை சமன் செய்தார்.
வங்கதேசம், இலங்கை அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. டாஸ் வென்ற இலங்கை பேட்டிங்கைத் தேர்வு செய்தது. முதல்நாள் ஆட்ட முடிவில் இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட் இழப்புக்கு 314 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் அனுபவ வீரர் சங்ககரா பொறுப்புடன் ஆடி 160 ரன்கள் குவித்தார். 19 பவுண்டரி 3 சிக்ஸர்களின் உதவியுடன் இந்த ரன்களை எட்டிய அவர் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளார். மற்றொரு வீரர் ஜெயவர்தனே 72 ரன்கள் அடித்தார்.
அதிக சதம் அடித்தவர்கள்: சச்சின் (51 சதம்), காலிஸ் (45 சதம்), ரிக்கி பாண்டிங் (41 சதம்), ராகுல் திராவிட் (36 சதம்) ஆகியோர் டெஸ்ட் அரங்கில் அதிக சதம் அடித்தவர்களின் பட்டியலில் முன்னிலையில் உள்ளனர். இதற்கு அடுத்த வீரராக கவாஸ்கர், லாராவுடன் சங்ககரா இணைந்துள்ளார். இந்தப் பட்டியலில் முன்னணியில் உள்ள வீரர்கள் அனைவரும் ஓய்வு பெற்று விட்டனர். சங்ககரா மட்டுமே ஆடி வருவது குறிப்பிடத்தக்கது.

ad

ad