புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

27 நவ., 2012


13வது திருத்தத்தை ரத்துச்செய்ய முயன்றால் தீர்க்கமான முடிவினை எடுக்கவேண்டி வரும்!- ஸ்ரீ.மு.கா. ஜனாதிபதிக்கு கடிதம்
அரசியலமைப்பிலிருந்து 13வது திருத்தச் சட்டத்தை ரத்துச் செய்யும் முயற்சியை அரசாங்கம் உடனடியாக கைவிட வேண்டும். அவ்வாறு இல்லையென்றால் தீர்க்கமான முடிவுகளை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எடுக்கும் என்று தெரிவித்து ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு கடிதம்

நாகப்பட்டணம் கடற்கரைக்கு மர்மமாக வந்து மறைந்த விசைப்படகில் வந்த 50 பேர் யார்!
நாகப்பட்டணம் கடற்கரைக்கு ஒரு மர்மமான விசைப்படகு கரை தட்டி நின்றுள்ளது. அதில் 50க்கும் மேற்பட்டோர் இருந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால் அவர்கள் அனைவரும் மாயமாகி விட்டனர்

தலைவரின் பிறந்தநாள் சுவரொட்டிகள் மீண்டும் யாழ் பல்கலைக்கழகத்தில் ஒட்டப்பட்டுள்ளன!
இன்று யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்தில் தமிழீழ தலைவர் வே.பிரபாகரன் அவர்களின் பிறந்த நாளை ஒட்டிய வாழ்த்து சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு காணப்படுகின்றன.
பட்டதாரிகளின் ஆர்ப்பாட்டங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்து ஜனாதிபதி : ஹக்கீம்
நீதியமைச்சிற்கு புதிதாக சேர்த்துக்கொள்ளப்பட்டுள்ள 195 பட்டதாரிகளுக்கு நியமனக் கடிதங்களை வழங்கும் நிகழ்வு கொழும்பு-12 இல் அமைந்துள்ள இலங்கை சட்டமன்றத்தின் கேட்போர் கூடத்தில்
கிழக்குப் பல்கலைக் கழகத்தில் மாவீரர் தின சுவரொட்டிகள் : படையினரால் அகற்றப்பட்டன
கிழக்குப் பல்கலைக்கழகம் வந்தாறுமூலை வர்த்தக பீடத்தை சுற்றியுள்ள சுவர்களில் இன்று திங்கட்கிழமை ஒட்டப்பட்டிருந்த விடுதலைப் புலிகளின் மாவீரர் தின சுவரொட்டிகள் படையினரால் அகற்றப்பட்டன.
கிரேண்ட்பாஸ் பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், தந்தை மற்றும் 3 வயது குழந்தை ஆகியோர் சற்றுமுன்னர் வீடொன்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.மூவரும் நஞ்சருந்தி பலியான நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
தீர்வின்றேல் சாகும் வரை போராட்டம் : செல்வம் எம்.பி.தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு அரசியல் தீர்வு விரைவில் உறுதிப்படுத்தப்படாவிட்டால் ஜனவரியில் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுக்கப்போவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்வரவு-செலவுத்திட்ட விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
 

பொலிஸார் என கூறி தமிழ் வியாபாரி வீட்டில் கொள்ளை
பொலிஸார் என தன்னை அடையாளப்படுத்திக்கொண்ட 7 பேர் அடங்கிய குழு கிரேண்ட்பாஸ் டிமேல் தொடர்மாடி தொகுதியில் உள்ள தமிழ் வியாபாரியொருவரின் வீட்டில் சுமார் 40 பவுண் நகை மற்றும் உள்நாட்டு வெளிநாட்டு பணம் என்பவற்றை கொள்ளையிட்டு சென்றுள்ளனர்.


சவூதியில் சிறைவாசம் அனுபவித்த 60 பேர் நாடு திரும்பினர்
சவூதி அரேபியாவில் நிர்கதி நிலைக்குள்ளாகியும் சிறையில் அடைக்கப்பட்டும் இருந்த 60 தமிழ் , முஸ்லிம் ,சிங்கள இளைஞர்கள் இன்று கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.
 


மட்டக்களப்பு, அம்பாறை, அனுராதபுரம், பதுளை, குருநாகல் மாவட்டங்களைச் சேர்ந்த குறித்த நபர்கள் சித்ததா நகரிலுள்ள சிறையில் 2 முதல் 7 மாதம் வரை சிறைவாசம் அனுபவித்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.


உலகப் பிரசித்தி பெற்ற நட்சத்திர துடுப்பாட்ட வீரர் சனத் ஜயசூரிய மூன்றாவது தடவையாக திருமணம் செய்து உள்ளார்.
இத்திருமணம் கல்கிசையில் உள்ள விகாரை ஒன்றில் நேற்று காலை மிகவும் இரகசியமான முறையில் இடம்பெற்றது.
விரல் விட்டு எண்ணக் கூடிய தொகையினரே திருமணத்துக்கு அழைக்கப்பட்டு இருந்தார்கள்.
ஊடகங்களுக்குக்கூட அழைப்பு விடுக்கப்பட்டு இருக்கவில்லை.
மணமகள் மலீகா. எல்லோரையும் ஆச்சரியப்படுத்தக் கூடிய விடயம் என்னவென்றால் இவர் மூன்றாவதாக தெரிவு செய்து உள்ள மனைவியும் ஒரு விமானப் பணிப் பெண் என்பதுதான். மலீகா ஒரு நடிகையும் ஆவார்.

முதலிரவு அன்றே தம்பதியரிடையில் கடும் சண்டை 


யாழ். தென்மராட்சிப் பகுதியில் நடந்த கலியாண வீட்டில் அன்று இரவே புதுமணத்தம்பதியரிடையே பெரும் சண்டை வெடித்துள்ளது. கடந்த வாரம் தென்மராட்சிப் பகுதியில் திருமணம் நடைபெற்ற அன்று இரவே தம்பதிகள் முட்டி மோதிக் கொண்டனர்.

காதலர்களின் சில்மிச கூடாரங்களாக மாறிவரும் வெள்ளவத்தை கடற்கரை!


எனினும் காதல் என்ற பெயரில் இளைஞர்கள் புரியும் அட்டகாசத்தினால் கரையோரங்களுக்கு நிம்மதியாக பொழுதைக் கழிக்க வரும் மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்குகிறார்கள்.
வெள்ளவத்தை தமிழர்கள் பெருமளவாக வாழும் பகுதி. அங்கு அழகிய கரையோரங்கள் அப்பகுதி மக்களை ஆசுவாசப்படுத்துவதாக அமைந்திருக்கிறது.

26 நவ., 2012




களமும் காதலும்(மாவீரர் 5ம் நாள்)
( அ.பகீரதன்)

அம்மி மிதிக்கும் வயதில்
விம்மி வெடித்தீர் 
கும்மி அடிக்கும் பருவத்தில்

குப்பி கடித்தீர்

கல்வி கற்கும் வயதில்
சொல்லி அடித்தீர்
செல்வி கலையும் பருவத்தில்
வேள்வி வளர்த்தீர்


முத்தங்கள் தொடுக்கும் வயதில்
யுத்தங்கள் தொடுத்தீர்
அர்த்தங்கள் புரியும் பருவத்தில்
அனர்த்தங்கள் தடுத்தீர்

பெண்ணைக் காதலிப்பதே
பேருவகை என அவன் நினைக்க
மண்ணைக் காதலிக்கும்
மகத்துவத்தை போதித்தீர்

இடுப்புவலி அடுப்புவழி தொடரும்பழி
அதுவே பெண்ணென அவன் நினைக்க
கரும்புலி கருணைமொழி காக்கும்விழி
அதுவே பெண்ணென நிரூபித்தீர்

அடிமைப்பூ அழுமூஞ்சி அருளிக்கொட்டை
அதுவே பெண்ணென அவன் நினைக்க
விடுதலைப்புலி உரிமைக்குரல் சயனற்வில்லை
அதுவே பெண்ணென சாதித்தீர்


வெள்ளியும் செவ்வாயும்
விரதமிருந்த பெண்டீர்-எமக்காய்
கொள்ளியும் கொலையும் எடுத்தீரே
எண்ணியும் வணங்கியும் உமைவாழ்த்துறோம்

ஈழத்து நிலமெல்லாம் நீ
பூவாய் மலரும்
தாயகத்து தாயிடத்தே நீ
சேயாய் வளரும்



அன்புடன், அ.பகீரதன்

www.pageerathan.blogspot.ca



அமெரிக்கா ஜனாதிபதி பராக் ஒபாமாவின் இரண்டாவது ஆட்சிக்காலத்தின்போது இலங்கை விவகாரங்களைக் கையாள்வதற்கான விசேட அரச உயர்மட்டக் குழு ஒன்று தனியாக ஏற்படுத்தப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதன்மூலம் இலங்கைக்கான நெருக்கடிகள் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் நம்பிக்கையான வட்டாரங்கள் தெரிவித்தன.


மாஜி திமுக அமைச்சர் செல்வராஜ் மரணம்
முன்னாள் தி.மு.க.அமைச்சர் சமயநல்லூர் செல்வராஜ் உடல்நலக்குறைவால் காலமானார். கடந்த தி.மு.க. ஆட்சியின் போது ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சராக இருந்தவர் சமயநல்லூர் செல்வராஜ்.

நடிகை சுபா திடீர் மரணம்

அண்மையில் வெளியான "மாலைப் பொழுதின் மயக்கத்திலே' என்ற தமிழ்த் திரைப்படத்தில் நடித்த நடிகை சுபா புட்டேலா (21) பெங்களூரில் செவ்வாய்க்கிழமை காலமானார்.

2வது டெஸ்ட்: தோல்வி முகத்தில் இந்திய அணி
இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் முடிவில் இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 117 ரன்கள் எடுத்தது.
சீரற்ற காலநிலையால் ஆறு பேர் உயிரிழப்பு
தென்பகுதியில் நிலவிவரும் சீரற்ற காலநிலையால் அறுவர் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.இதேவேளை, நீரில் மூழ்கி நான்கு பேரும் மின்னல் தாக்குதலிற்கு இலக்காகி இருவரும் உயிரிழந்துள்ளதாக அந் நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.
 

58 வெடிகள் முழங்க சென்னையில் தமிழீழத் தேசியத் தலைவரின் 58வது பிறந்தநாள்

தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் 58வது பிறந்த நாளை சென்னையில் மாணவர்கள் சிலர் நள்ளிரவு 12:00 மணிக்கு கேக் வெட்டிக் கொண்டாட்டியுள்ளனர்.

அரசாங்கம் இழுத்தடித்தால் சர்வதேச ரீதியில் தமிழ் அமைப்புகளுடன் இணைந்து சாத்வீகப் போராட்டம்!- தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவிப்பு
தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு யோசனைகளை முன்வைக்கும் வகையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு, புதிய அரசியல் தந்திரோபாயங்களைக் கையாள உள்ளதாகவும், இதன் அடிப்படையில் இந்தியா,

இராணுவத்திலிருந்து 6 தமிழ் யுவதிகள் விலகியுள்ளனர்: இராணுவ பேச்சாளர்
கிளிநொச்சி மாவட்டத்திலிருந்து இலங்கை இராணுவத்தில் இணைந்து கொண்ட 109 தமிழ் யுவதிகளில் 6 பேர் சுய விருப்பத்தின்பேரில் விலகிச் சென்றுள்ளதாக இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் ருவன் வணிகசூரிய தெரிவித்துள்ளார்.


போர் முடிவுக்கு வந்த பின்னர் வடக்கில் அதிகளவு படையினரை நிலைநிறுத்தியுள்ளதும் பொதுமக்களின் அன்றாட வாழ்வில் அவர்களின் தலையீடுகள் இருப்பதும் சர்வதேச அளவில் இலங்கைக்கு கடும் நெருக்கடியான விவகாரமாகி வருகிறது.
போர் முடிந்த பின்னர் கணிசமானளவு படையினரை வடக்கில் இருந்து குறைத்து விட்டதாக அரசாங்கம் சொல்லிக்கொள்ளும் அதேவேளை இனிமேலும் படைக்குறைப்பை மேற்கொள்ளத் தயாரில்லை என்பதையும் வெளிப்படுத்தியுள்ளது.

25 நவ., 2012

முஸ்லிம் காங்கிரஸ் யாரின் கைப்பொம்மையாக உள்ளது?: அப்துல் மஜீத்
திவிநெகும சட்டமூலத்துக்கு ஆதரவாக கிழக்கு மாகாண சபையின் முஸ்லிம் உறுப்பினர்கள் வாக்களித்தமைக்கு அச்சுறுத்தலே காரணம் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் செயலாளர் ஹசனலி தெரிவித்துள்ளதன் மூலம் அக்கட்சி யாரின் கைப்பொம்மையாக உள்ளது என்ற
பஸ்-லொறி மோதி விபத்து: ஆறு பேர் வைத்தியசாலையில்.விரேசரி 
காங்கேசன்துறைப் பகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் 8 பேர் காயமடைந்து ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பொதுநலவாய மாநாட்டை மலேசியா புறக்கணிக்க வேண்டும்: சுவராம் மனித உரிமை கழகம் வேண்டுகோள்
தமிழர்களின் நீதிக்காக அடுத்த ஆண்டு இறுதியில் இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய மாநாட்டை மலேசியா புறக்கணிக்க வேண்டும் என சுவராம் மனித உரிமை கழகத்தின் தலைவர் கா.ஆறுமுகம் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

 50,00​0 பேர் திரண்ட வீரபாண்டி ஆறுமுகம் இரங்கல் கூட்டத்தில் தலைவர்கள் கண்ணீர்!

 
முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் 23.11.2012 அன்று காலமானார். வீரபாண்டி ஆறுமுகம் உடல் அவரின் சொந்த ஊர் சேலம் பூலாவரிக்கு கொண்டு வரப்பட்டது. மத்திய அமைச்சர் மு.க அழகிரி, முரசொலி செல்வம், எ.வ.வேலு, சுப்புலட்சுமி ஜகதீஷன்,

மலர் வளையத்துடன்  சுவிஸ் விடுதலைப்  புலிகளின் பணியாளர்கள்  
கேணல் பரிதியின் வித்துடலுக்கு மக்கள் இறுதி வணக்கம்
பிரான்சில் படுகொலை செய்யப்பட்ட கேணல் பரிதி அவர்களின் வித்துடல் மக்களின் இறுதி வணக்கத்திற்காக காலை 10:00 மணியளவில் வாத்திய முழக்கத்துடன் எடுத்து வரப்பட்டது.

24 நவ., 2012



கேணல் பரிதி அவர்களின் வித்துடல் விதைப்பு நிகழ்வு 24.11.2012

சிங்கள அரசின் எல்லை தாண்டிய நயவஞ்சகச் சதியால் 08.11.2012 அன்று பிரான்ஸ் நாட்டின் தலைநகரத்தில் வீரச்சாவை தழுவிக் கொண்ட தளபதி கேணல் பரிதி அவர்களின் இறுதி வணக்க நிகழ்வும் வித்துடல் விதைப்பும் எதிர்வரும் சனிக்கிழமை 24.11.2012 அன்று  நடைபெறும் என்பதை  அறியத்தருகின்றோம் .
மும்பை டெஸ்ட் போட்டியில் புஜாரா- அஸ்வின் பொறுப்பான ஆட்டம்: இந்தியா 266 ரன்
இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இன்று தொடங்கியது.  இந்த டெஸ்டில் இந்திய அணி 3 சுழற்பந்து வீரர்களுடன் களமிறங்கியது. காயம் அடைந்த வேகப்பந்து வீரர் உமேஷ் யாதவுக்கு பதிலாக

India 266/6 (90.0 ov)
England
India won the toss and elected to bat
Stumps - Day 1
India 1st inningsRB4s6sSR
View dismissalG Gambhirlbw b Anderson
தென்னாபிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் : கிளார்க் இரட்டைச்சதம்தென்னாபிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் அணித் தலைவர் மைக்கல் கிளார்கின் இரட்டைச்சதம் கைகொடுக்க அவுஸ்திரேலிய அணி முதல்நாள் ஆட்டநேர முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 482 ஓட்டங்களைப் பெற்று வலுவான நிலையில் உள்ளது.

வீரபாண்டி ஆறுமுகத்தின் மறைவுக்கு ஜெயலலிதா பதில் கூறியே ஆக வேண்டும்: மு.க.ஸ்டாலின்
வீரபாண்டி ஆறுமுகத்தின் மறைவுக்கு ஜெயலலிதா பதில் கூறியே ஆக வேண்டும் என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். 

எம்எல்ஏ பதவி ராஜினாமா செய்ய எடியூரப்பா திடீர் முடிவு!
கர்நாடக முதல்வராக இருந்த எடியூரப்பா கட்சியில் இருந்து விலகி புதிய கட்சி ஆரம்பிக்க போவதாக அறிவித்தார். அடுத்த மாதம் 10ம் தேதி தான் தலைவராக பொறுப்பேற்க உள்ள கர்நாடக ஜனதா கட்சியின் அறிமுக விழா நடைபெறும் என அறிவித்தார்.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ அமெரிக்கா விஜயம்
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, அமெரிக்காவுக்கான தனிப்பட்ட விஜயத்தினை மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் பெயரை வழக்கிலிருந்து நீக்குமாறு தமிழக பொலிஸார் கோரிக்கை
சென்னை பாண்டி பஜாரில் கடந்த 1982ல் விடுதலைப் புலிகளுக்கும், புளொட் இயக்கத்தினருக்கும் நடந்த துப்பாக்கி சண்டை தொடர்பான வழக்கில் பிரபாகரன் உள்ளிட்ட 4 பேரின் பெயரை நீக்க வேண்டும் என்று சென்னை அமர்வு நீதிமன்றில் சிபிசிஐடி பொலிசார் மனு தாக்கல் செய்துள்ளனர்.

ஐ.நா. சபையின் வன்னி அவலம் மீதான இரகசிய அறிக்கை: அடுத்தது என்ன?
ஐ.நா. சபையின் வன்னி அவலம் மீதான இரகசிய அறிக்கை தொடர்பில் அடுத்தது என்ன என்ற கருத்துக்களமும் கலந்துரையாடலும் நேற்று மாலை கனடிய தமிழர் பேரவை ஏற்பாட்டில் ஸ்காபரோ நகரசபை மண்டபத்தில் நடைபெற்றது.

23 நவ., 2012


-பரிதி அவர்களின் வீரவணக்க நிகழ்விற்கு சுவிஸில் இருந்து பாரிசிற்கபேருந்துநாளை பாரிசில் நடைபெற இருக்கம் பரிதி அவர்களின் வித்துடல் விதைப்பிற்கும் இறுதி வீரவணக்க நிகழ்விற்கும் சுவிஸில் இருந்து பேருந்து ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாக சுவிஸ்கிழை அறிவித்துள்ளது.
http://eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-swisskilais%20(1).jpgசுவிஸ்சின் அனைத்து மாநிலங்களிலம் இருந்து பேருந்து ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டி: புஜாரா மீண்டும் சதம்
இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இன்று தொடங்கியது. டாஸ் வென்று முதலில் களமிறங்கிய இந்திய அணியின் துவக்க வீரர் காம்பீர் 4 ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார். இதனால்
எதிரிகளின் ஏவுகணைகளை வழிமறித்து அழிக்கும் சூப்பர்சானிக் ஏவுகணை சோதனை வெற்றி
நீண்ட தூரம் சென்று இலக்குகளை தாக்கும் ஏவுகணைகளை தயாரிப்பதில் இந்தியா முன்னேற்றம் கண்டுள்ளது. அந்த வகையில் இந்திய பாதுகாப்பு படையில் மேலும் ஒரு மைல் கல்லாக, எதிரிகளின் ஏவுகணைகளை இடைமறித்து

தர்மபுரி அருகே கலவரம்: காதல் திருமணம் செய்த பெண் இன்று மீண்டும் கோர்ட்டில் ஆஜர்

தர்மபுரி அருகே உள்ள செல்லன்கொட்டாய் கிராமத்தை சேர்ந்த நாகராஜன் மகள் திவ்யா. இவரும் நத்தம் காலனியை சேர்ந்த இளங்கோ மகன் இளவரசனும் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டனர்

நெருக்கடிகளை நெஞ்சுரத்தோடு எதிர்கொண்டவர் வீரபாண்டி ஆறுமுகம் - திருமா​வளவன் இரங்கல்
திமுகவின் முன்னணித் தலைவர்களில் ஒருவரும் முன்னாள் அமைச்சருமான வீரபாண்டி ஆறுமுகம் அவர்களின் மறைவுக்கு விடுதலைச் சிறுத்தைகள் ஆழ்ந்த இரங்கலைததெரிவித்துக்கொள்கிறது.   அவரது மறைவு திராவிட

அதிமுக அரசு அலைகழித்ததே வீரபாண்டி ஆறுமுகம் உடல்நிலை மோசமடைந்ததற்கு காரணம்: கலைஞர் பேட்டி
கடந்த சில நாட்களாக உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த திமுக முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் 23.11.2012 வெள்ளிக்கிழமை காலை

திமுக முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் சென்னையில் காலமானார்
   திமுக முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் சென்னையில் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 75.1957ஆம் ஆண்டு முதல் திமுக உறுப்பினராக இருந்து வந்தவர் வீரபாண்டி ஆறுமுகம். 1970ல் பூலாவாரி ஊராட்சி தலைவராக பதவி வகித்தவர்


டத்தல், கொலை கொள்ளை பாலியல் பலாத்கார செயல்களில் தொடர்ந்தும் ஈடுபடாது ஈ.பி.டி.பி கடத்தி சென்ற லோகேஸ்வரனை விடுதலை செய்ய வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் இளைஞர் அமைப்பின் தீவக அமைப்பாளரும் யாழ். மாநகரசபையின் முன்னாள் உறுப்பினருமான எஸ்.நிலாந்தன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
அந்த அறிக்கையின் முழு விபரத்தையும் இங்கே தருகிறோம்……
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவாளரும் எனது தீவக முக்கிய செயற்பாட்டாளருமான சதாசிவம் யோகேஸ்வரன் (வயது 37) வேலணை வங்களாவடியில் அவரது வீட்டில்


வேலணையில் ஈ.பி.டி.பியினரால் கடத்தி செல்லப்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரவாளர்

யாழ்ப்பாணம் வேலணை வங்களாவடியைச் சேர்ந்த 34வயதுடைய சதாசிவம் லோகேஸ்வரன் என்ற இளைஞர் நேற்று இனந்தெரியாதோரால் கடத்திச் செல்லப்பட்டுள்ளார் என மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய அலுவலகத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

கனடாவில் தமிழ் பெண் வாகனத்தில் எரித்து கொலை- ஆணின் சடலமும் மீட்பு


கனடா மொன்றியலில் அனலைதீவை சேர்ந்த விக்னேஸ்வரன் யோகராணி என்ற 37வயதுடைய பெண் வாகனத்துடன் எரித்து கொலை செய்யப்பட்டுள்ளார். இவருக்கு மூன்று பிள்ளைகள் உண்டு. கடந்த மாதம் 29 ம் திகதி மொன்றியலில் வைத்து கொலை செய்யப்பட்டுள்ளார்.
எரிந்த நிலையில் இவரின் சடலம் மீட்கப்பட்ட போது இன்னொரு ஆணின் சடலமும் மீட்கப்பட்டுள்ளது. இந்த ஆணுக்கும்


Foto
G

மண்டைதீவுக் கிராமத்திற்கு புதிய வைத்தியசாலை விரைவில் அமைக்கப்படவுள்ளது.பிராந்தீய சுகாதார சேவைகள் பணிப்பாளர் இத் தகவலை தெரிவித்தார்.

நவீன வடிவமைப்புடனும் முழுமையான ஆளணிகளுடன் ரூ.22 மில்லியன் செலவில் இவ்வைத்தியசாலை அமையும் என அவா் மேலும் தெரிவித்தார்.

போர்கால சூழ்நிலைக்கு முன்பாக மண்டைதீவு அல்லைப்பிட்டி மக்களின் வைத்திய தேவையை முன்பு அமைந்திருந்த வைத்தியசாலையே பூர்த்தி செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இனப்பிரச்சனையினை தீர்க்க பன்னாடுகள் முன்வரவேண்டும்-யாழ் ஆயர்கோரிக்கை!

இனப்பிரச்சினைக்கு தீர்வு காண சர்வதேச நாடுகள் முன்வர வேண்டும் என யாழ் மறைமாவட்ட ஆயர் தோமஸ் சௌந்தரநாயகம் ஆண்டகை செக் குடியரசின் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

இறுதி வரை பால் தாக்கரேவின் நிழல் போல் இருந்த ஆறு பேரும் ஈழத் தமிழர்கள் !“மராட்டியம் மராட்டியருக்கே… வேற்று மொழியினருக்கு இங்கே இடம் இல்லை” என்றார் ஒருசமயம். இன்னொருசமயம், ”தமிழர்களை மிகவும் நேசிக்கிறேன். ஈழத் தமிழர்கள், இந்தியாவின் குழந்தைகள்…” என்றார்.


பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ரூ.25 கோடி நட்டஈடு வழங்குமாறு 'சண்டே லீடர்' பத்திரிகைக்கு கல்கிஸை நீதவான் நிதிமன்றம் இன்று வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளது என அதிர்வு இணையம் அறிகிறது. பாதுகாப்பு செயலாளருக்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் வகையில் பிரசுரிக்கப்பட்ட

கனடா மொன்றியலில் அனலைதீவு பெண் மற்றுமொரு ஆணுடன் வைத்து வாகனத்துடன் எரித்து கொலை 
கனடா மொன்றியலில் அனலைதீவைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தாய் வாகனத்துடன் எரித்து கொலை செய்யப்பட்டது தற்கொலை அல்ல என கனேடியப் பொலிசார் தற்போது தெரிவித்துள்ளனர். கடந்த மாதம் 29 ம் திகதி மொன்றியலில் வைத்து 37 வயதுடைய அனலைதீவை சேர்ந்த விக்னேஸ்வரன்

பிரிட்டனில் கடும் வெள்ள அபாயம்: கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது 


பிரித்தானியாவின் புறநகர்ப் பகுதிகள், மிட்லன்ஸ் மற்றும் வேல்ஸ் போன்ற பகுதிகளை கடும் மழை தாக்க இருக்கிறது. இன்னு முதல் இன்னும் 2 வாரங்களுக்கு மழை நீடிக்கும் என வாநிலை அவதானிப்பு நிலையம் அறிக்கை விடுத்துள்ளது. பிரித்தானியாவின்

ஜனாதிபதி ராஜபக்‌ஷவை நெருங்கும் ஐந்து பெண்கள்! ஜோதிடத்தை நம்பி யோசனையில் மஹிந்த
ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷவின் ஜோதிடப்படி ஒரு பெண்ணால் அவரின் ஆட்சிக்கு கடுமையான நெருக்கடி ஏற்படும் என தெரியவந்ததால் யாரால் என் ஆட்சிக்கு அழிவு வரும் என யோசனையில் உள்ள மஹிந்த ராஜபக்‌ஷ ஐந்து பெண்களை நினைத்து யோசனையில் மூழ்கிப் போவார்

நாட்டின் நல்லிணக்கத்திற்கு ஒரு சாபக்கேடாக இருப்பவர் அஸ்வர்;சாடுகிறார் சரவணபவன் எம்.பி
 நாட்டின் நல்லிணக்கத்திற்கு ஒரு சாபக்கேடாக இருப்பவர் ஆளும் கட்சி உறுப்பினரான அஸ்வர். அவர் எங்களுக்கு தொல்லை கொடுப்பதற்காகவே இந்த சபைக்கு வருகின்றார் என சாடிய யாழ் மாவட்ட நாடளுமன்ற உறுப்பினர் சரவணபவன்,தைரியம் இருந்தால் அஸ்வரும் ஒரு பத்திரிகை ஆரம்பிக் கட்டும்
கூட்டமைப்புடன் மீண்டும் பேச்சுக்களை ஆரம்பிகுமாறு இலங்கை அரசுக்கு வலியுறுத்து
இனப் பிரச்சினைத் தீர்வுக்கான பேச்சுக்களை மீண்டும் விரைவில் தொடங்குமாறு மேற்கு நாடுகளும் ஐக்கிய நாடுகள் சபையும் வலியுறுத்தி வருகின்ற நிலையில் நெருக்கடிகள் தொடர்பான சர்வதேசக் குழு தனது நீண்ட அறிக்கை ஒன்றில் கூட்டமைப்புடன் மீண்டும் பேச்சுக்களை ஆரம்பிக்குமாறு இலங்கை அரசிடம் வலியுறுத்தி உள்ளது.

மது கிண்ணம் உடைந்து குத்தியதில் மணமகன் சாவு: திருமண நாளிலேயே இந்த சோகம்
லண்டனை சேர்ந்த பேபியோ ஜெபர்சன் (வயது 33) என்பவருக்கு திருமணம் நடந்தது. திருமணம் முடிந்ததும் விருந்து நிகழ்ச்சிகள் நடந்தன. அப்போது மணமகன் பேபியோ ஜெபர்சன் விருந்தினர்களுக்கு தானே மது சப்ளை செய்தார். மது கிண்ணம்

ஆபாச நடிகை கொடூர கொலை!
உடலை துண்டு துண்டாக வெட்டி நாய்க்கு இரை!

தென் அமெரிக்க கண்டத்தில் உள்ள பிரேசில் நாடு, கால்பந்து போட்டிகளுக்கு மிகவும் புகழ்பெற்றது. இங்கு உலகப் புகழ்பெற்ற பல வீரர்கள் உருவெடுத்துள்ளனர். அவர்களில் புருனோ பெர்னான்டஸ் என்பவரும் ஒருவர். இவர் அந்நாட்டில் புகழ்பெற்ற


மத்திய அரசை காப்பாற்றவே நம்பிக்கையில்லா தீர்மானத்தை நிராகரித்துள்ளனர்: மம்தா தாக்கு
சில்லரை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாரளுமன்றத்தில் மத்திய அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர திரிணாமுல் காங்கிரஸ் கட்சி முயற்சித்தது. 

தற்கொலைக்கு முன் வீடியோ வாக்குமூலம்! தலைமறைவான அதிமுக கவுன்சிலரை தேடுகிறது போலீஸ்
திருச்சியைச் சேர்ந்த மினரல் வாட்டர் தொழில் அதிபர் சரவணன் 20.11.2012 அன்று தற்கொலை செய்து கொண்டார். தற்கொலை செய்வதற்கு முன்பு தனது செல்போனில் அவர், தற்கொலைக்கான காரணத்தையும், தற்கொலைக்கு காரணமானவர்களையும்
கழக அணியின் உரிமையாளராக இருப்பதே எனது விருப்பம் : டேவிட் பெக்கம
லொஸ் ஏஞ்சல்ஸ் கலக்ஸி" கழகத்திலிருந்து விலகி ஏதாவது ஒரு கழக அணியின் உரிமையாளராக இருப்பதே எனது விருப்பமென இங்கிலாந்து அணியின் கால்பந்தாட்ட ஜாம்பவான் டேவிட் பெக்கம் தெரிவித்துள்ளார்.
தென்னாபிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் : கிளார்க் இரட்டைச்சதம்
தென்னாபிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் அணித் தலைவர் மைக்கல் கிளார்கின் இரட்டைச்சதம் கைகொடுக்க அவுஸ்திரேலிய அணி முதல்நாள் ஆட்டநேர முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 482 ஓட்டங்களைப் பெற்று வலுவான நிலையில் உள்ளது.
இலங்கையில் விஸ்வரூபம் திரைப்படத்தை வெளியிட அனுமதிக்க மாட்டோம் : ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாத்
விஸ்வரூபம் திரைப்படம் இலங்கையில் எங்கும் திரையிடக் கூடாது. மீறி திரையிட்டால் குறிப்பிட்ட திரையரங்குகளை முற்றுகையிட்டு மாபெரும் முற்றுகைப் போராட்டத்தை முன்னெடுப்போமென ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாத் அனுப்பிவைத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.
பாலியல் வல்லுறவு தொடர்பான குற்றவாளிகளுக்கு தூக்குத்தண்டனை நிறைவேற்றப்படும் : கரலியத்த
பெண்கள் மீதான பாலியல் வல்லுறவுகள் மற்றும் சிறுவர் துஷ்பிரயோகங்கள் தொடர்பான குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை அல்லது அதற்கு அதிகமான தூக்குத் தண்டனை விதித்து அது நிறைவேற்றப்படும் என மகளிர் விவகார மற்றும் சிறுவர் அபிவிருத்தி அமைச்சர் திஸ்ஸ கரலியத்த இன்று சபையில் தெரிவித்தார்
இலங்கை வங்கியின் தலைவர் இராஜினாமா செய்துள்ளார்
இலங்கை வங்கியின் தலைவர் கலாநிதி காமினி விக்கிரமசிங்க தனது இராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்துள்ளார். தனக்கு வங்கியின் தலைவர் பதவியிலிருந்து விலக அனுமதி வழங்குமாறு நிதியமைச்சிடம் விடுத்த கோரிக்கையை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டுள்ளதாக
பெண்கள் இராணுவத்திற்கு எந்தடிப்படையில் இணைத்துக்கொள்ளப்படுகின்றனர்?: சிறிதரன் எம்.பிவடக்கில் பெண்கள் இராணுவத்திற்கு எந்த அடிப்படையில் இணைத்துக்கொள்ளப்படுகின்றனர். அதற்காக இந்த பாராளுமன்றம் அனுமதி வழங்கியுள்ளதா என கேள்வியெழுப்பிய தமிழ் தேசியக் கூட்டமைப்பு எம்.பி. எஸ். சிறிதரன், எவ்விதமான வர்த்தமானி அறிவித்தலும் இல்லாமல்
ஆஸி. செல்ல முயற்சித்த 17 இலங்கையர்கள் இந்தோநேசியாவில் கைது
சட்டவிரோதமாக படகு மூலம் அவுஸ்திரேலியாவிற்கு செல்ல முயற்சித்த 17 இலங்கையர் இந்தோநேசிய கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.சுமத்தராவின் தென்மேற்கு பகுதியில் வைத்து நேற்று கைது செய்யப்பட்ட குறித்த நபர்கள் இன்று விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதாக இந்தோநேசிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
 
சர்மிளாவின் பாலர் பாடசாலைக்கு தீ வைக்க முயற்சி
இலங்கையில் பாலியல் தொழிலை சட்டப்பூர்வமாக்கவேண்டும் என்கிற யோசனை தொடர்பில் தமது கருத்தை தெரிவித்த ஏறாவூரைச் சேர்ந்த முஸ்லிம் சமூக ஆய்வாளர் ஷர்மிளா சயீத்தின் நிர்வாகத்திற்குரிய பகல் நேர பாலர் பராமரிப்பு நிலையத்திற்கு வியாழக்கிழமை அதிகாலை தீ வைக்க முயற்சிகள்

22 நவ., 2012

இலங்கை தொடர்பில் திருப்தியில்லை; நடவடிக்கை எடுக்க அமெ.தயங்காது

இலங்கையின் அரசியல் மற்றும் இதர நிலைவரங்கள் குறித்து முழுமையாகத் திருப்தி அடைய முடியவில்லை என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.

யுத்தத்திற்குப் பின்னர் யாழ். நிலமை எப்படி; கேட்டறிந்தனர் செக் குடியரசு நாடாளுமன்ற உறுப்பினர்கள்
செக் குடியரசு நாடாளுமன்ற உறுப்பினர்கள் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் ஒன்றினை மேற்கொண்டு தற்போதைய நிலமை தொடர்பில்  கேட்டு அறிந்து கொண்டனர். 

ad

ad