புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

27 நவ., 2012


முதலிரவு அன்றே தம்பதியரிடையில் கடும் சண்டை 


யாழ். தென்மராட்சிப் பகுதியில் நடந்த கலியாண வீட்டில் அன்று இரவே புதுமணத்தம்பதியரிடையே பெரும் சண்டை வெடித்துள்ளது. கடந்த வாரம் தென்மராட்சிப் பகுதியில் திருமணம் நடைபெற்ற அன்று இரவே தம்பதிகள் முட்டி மோதிக் கொண்டனர்.

இருவரும் நீண்டநாள் காதலர்களாக இருந்து திருமணம் முடித்தவர்கள். ஆணுக்கு 3 சகோதரிகளும் ஒரு சகோதரனும் இருக்கின்றார்கள். இந் நிலையில் தன்னைக் காதலித்த பெண்ணை சீதனம் ஏதும் இல்லாது குறித்த ஆண் திருமணம் செய்துள்ளார்.
இவர் சொந்தமாக வியாபார நிலையம் ஒன்றை வைத்துள்ளதாகத் தெரியவருகின்றது. நகரப் பகுதியில் உள்ள இவரது வியாபார நிலையத்திற்கு பொருட்களை வாங்க வந்த போதே இவர் காதலுக்கு உள்ளாகியுள்ளார். இதன் பின்னர் இருவீட்டார் சம்மதத்துடன் கடந்த வாரம் இவர்களுக்கு திருமணம் நடாத்தி வைக்கப்பட்டது. குறித்த யுவதி யாழ் பல்கலைக்கழக பட்டதாரியாவார். இவருக்கும் இரு சகோதரிகளும் ஒரு சகோதரனும் உள்ளார்கள். இவர்களில் இருவர் வெளிநாட்டில் இருக்கின்றார்கள்.
திருமணம் நடந்த அன்று மணமேடையில் மாப்பிளைக்கு சில உறவினர்கள் நகைகள் அணிவித்துள்ளனர். அதே போல் மணமகளுக்கும் நகைகள் அணிவித்துள்ளனர்.
இதன் பின்னர் மணமகள் வீட்டுக்கு பெண் சென்று மீண்டும் அன்றே மணமகன் வீட்டுக்கு வந்த போது தனக்கு போடப்பட்ட நகைகளையும் மாப்பிளைக்குப் போடப்பட்ட நகைகளையும் தனது தாயிடம் கழற்றிக் கொடுத்துவிட்டு வந்துள்ளார் மணப் பெண். இரவு இதனை அவதானித்த மணமகன் ‘போடப்பட்ட நகைகள் எங்கே’? எனக் கேட்ட போது அது தனது தாயிடம் இருப்பதாக மணமகள் கூறியதாகத் தெரியவருகின்றது. இதனால் கோபமுற்ற மணமகன் எதற்காக அங்கு கொடுத்தாய் என வாக்கு வாதப்பட்டபோது அங்கு சண்டை மூண்டுள்ளது.
இரவு 10 மணியளவில் தொடங்கிய சண்டை நள்ளிரவு 2 மணியளவில் மணமகளின் தாய் நகைகளைக் கொண்டு வந்து கொடுக்கும் வரை நடைபெற்றதாக தெரியவருகின்றது.
மாப்பிளைக்கு நிகராக மணப்பெண்ணும் சண்டையிட்டுள்ளார். ‘உங்களது தங்கைகளுக்கு கழற்றிக் கொடுக்கவா இங்கு நகைகளை கேட்கின்றீர்கள்?’ என மணப் பெண் கத்தியுள்ளார்.
இதே வேளை மாப்பிளையின் நகைகளை மட்டும் கொண்டு வந்து கொடுத்த மணமகளின் தாய் மணப் பெண்னை அடுத்தநாள் காலை அழைத்துச் சென்று விட்டார். தற்போது இரு வீட்டாருக்கும் இடையில் பலர் தூதுபோய்க் கொண்டிருப்பதாகத் தெரியவருகின்றது.

ad

ad