புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

23 நவ., 2012


நெருக்கடிகளை நெஞ்சுரத்தோடு எதிர்கொண்டவர் வீரபாண்டி ஆறுமுகம் - திருமா​வளவன் இரங்கல்
திமுகவின் முன்னணித் தலைவர்களில் ஒருவரும் முன்னாள் அமைச்சருமான வீரபாண்டி ஆறுமுகம் அவர்களின் மறைவுக்கு விடுதலைச் சிறுத்தைகள் ஆழ்ந்த இரங்கலைததெரிவித்துக்கொள்கிறது.   அவரது மறைவு திராவிட இயக்கத்துக்கு ஒரு பேரிழப்பாகும்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

வீரபாண்டியார் அவர்கள் 6 முறை சட்டப் பேரவை உறுப்பினராகவும் ஒரு முறை சட்டமேலவை உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுத் திறம்பட மக்கள் பணியாற்றியவர்.  பல்வேறு துறைகளில் அமைச்சராக இருந்து சாதனைகள் பல புரிந்தவர்.  திராவிட இயக்கக் கொள்கைகளில் உறுதியாக இருந்து அவரச நிலைக்கால கொடுமைகள் உள்ளிட்ட நெருக்கடிகளை நெஞ்சுரத்தோடு எதிர்கொண்டவர். அண்மையில் தமிழக அரசால் குண்டர் சட்டத்தில் சிறைப்படுத்தப்பட்டு அவதிக்குள்ளாக்கப்பட்டார்.  அதனால் அவரது உடல் நலிவுற்றது.

எத்தனை அடக்குமுறைகள் வந்தாலும் அவற்றையெல்லாம் இமயம்போல் எதிர்த்து நின்றவர்.  பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களின் நலன்களுக்காக இறுதி மூச்சு வரை பாடாற்றியவர்.  அவரை இழந்துவாடும் திராவிட இயக்கத்துக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறோம். இவ்வாறு கூறியுள்ளார்.

ad

ad