புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

24 நவ., 2012

மும்பை டெஸ்ட் போட்டியில் புஜாரா- அஸ்வின் பொறுப்பான ஆட்டம்: இந்தியா 266 ரன்
இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இன்று தொடங்கியது.  இந்த டெஸ்டில் இந்திய அணி 3 சுழற்பந்து வீரர்களுடன் களமிறங்கியது. காயம் அடைந்த வேகப்பந்து வீரர் உமேஷ் யாதவுக்கு பதிலாக சுழற்பந்து வீரர் ஹர்பஜன்சிங் இடம் பெற்றார். ஏற்கனவே சுழற்பந்தில் அஸ்வின், ஒஜா இடம் பெற்று இருந்தனர். ஹர்பஜன் சிங் 16 மாதங்களுக்கு பிறகு டெஸ்ட் போட்டியில் களமிறங்கினார்.
 
இங்கிலாந்து அணியில் 2 மாற்றம் செய்யப்பட்டு இருந்தது. முதல் டெஸ்ட் போட்டியில் ஆடிய இயன்பெல், பிரெஸ்னென் ஆகியோருக்கு பதிலாக பேர்ஸ்டோவ், பனேசர் இடம் பெற்றனர்.
 
இந்திய அணி கேப்டன் டோனி டாஸ் வென்று தனது அணி முதலில் பேட்டிங் செய்யும் என்று அறிவித்தார். ஷேவாக்கும், காம்பீரும் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். ஆண்டர்சன் வீசிய முதல் ஓவரில் முதல் பந்தில் காம்பீர் பவுண்டரியுடன் கணக்கை தொடங்கினார். ஆனால் 2-வது பந்தில் அவர் ஆட்டம் இழந்தார். எம்.பி.டபிள்யூ முறையில் அவர் அவுட் ஆனார். 2-வது விக்கெட்டுக்கு ஷேவாக்குடன் புஜாரா ஜோடி சேர்ந்தார்.
 
ஷேவாக்குக்கு இது 100-வது டெஸ்ட் என்பதால் அவர் சதம் அடிப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் அதிரடியாக ஆட்டத்தை தொடங்கிய அவர் 30 ரன்களிலே ஆட்டமிழந்தார். அதனைத்தொடர்ந்து களமிறங்கிய சச்சின் தெண்டுல்கர் 8 ரன்னிலும் அவுட் ஆனார்.
 
60 ரன்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி, உணவு இடைவேளைக்குப் பிறகும் ரன் எடுக்க திணறியது. இந்த நெருக்கடிக்கு மத்தியிலும் நிதானமாக ஆடிக்கொண்டிருந்த புஜாரா அரைசதம் கடந்தார்.  இருப்பினும் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது. முக்கிய விக்கெட்டுகளான கோலி (19 ரன்), கேப்டன் டோனி (29 ரன்) ஆகியோரை பனேசர் பெவிலியனுக்கு அனுப்பி அதிர்ச்சி அளித்தார். முன்னதாக யுவராஜ்சிங், ரன் எதுவும் எடுக்காத நிலையில் ஸ்வான் பந்தில் போல்டு ஆனார்.
 
இதையடுத்து புஜாராவுடன், அஸ்வின் ஜோடி சேர்ந்து, இங்கிலாந்து பவுலர்களுக்கு நெருக்கடி கொடுத்தார். மறுமுனையில் டெஸ்ட் போட்டிக்கே உரித்தான நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய புஜாரா, 81-வது ஓவரில் சதம் அடித்து ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். இந்த தொடரில் அவர் அடிக்கும் 2-வது சதம் இதுவாகும். அதன்பின்னர் அஸ்வினும் அரைசதம் அடித்து இந்திய அணியை சரிவிலிருந்து மீட்க உதவினார்.
 
இதனால் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 266 ரன்கள் எடுத்திருந்தது. புஜாரா 114 ரன்களுடனும், அஸ்வின் 60 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இங்கிலாந்து பந்துவீச்சாளர் பனேசர் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஆண்டர்சன், ஸ்வான் ஆகியோர் தலா ஒரு விக்கெட் எடுத்தனர். நாளை 2-வது நாள் ஆட்டம் நடக்கிறது.

ad

ad