இனப்பிரச்சினைக்கு தீர்வு காண சர்வதேச நாடுகள் முன்வர வேண்டும் என யாழ் மறைமாவட்ட ஆயர் தோமஸ் சௌந்தரநாயகம் ஆண்டகை செக் குடியரசின் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

யாழ் மாவட்டத்திற்கு விஜயம் செய்த செக் குடியரசின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் யாழ் மறைமாவட்ட ஆயரை சந்தித்து கலந்துரையாடினர். போருக்கு பின்னரான நிலமைகள் குறித்து செக் குடியரசு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேட்டறிந்து கொண்டனர்.
இதன்போதே இனப்பிரச்சினைக்கு விரைவில் சிறந்த தீர்வு காணப்பட வேண்டும் எனவும் இதற்கு சர்வதேச நாடுகள் சிறீலங்காவிற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் எனவும் ஆயர் கேட்டுக்கொண்டுள்ளார்.அத்துடன் செக் குடியரசு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீள்குடியேற்றப்பட்ட மக்களின் நிலமைகளை நேரில் பார்வையிட்டதுடன் அவர்களின் பிரச்சினைகள் தொடர்பிலும் கேட்டறிந்து கொண்டுள்ளதாக யாழ் செய்திகள் தெரிவிக்கின்றன.