புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

23 நவ., 2012



பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ரூ.25 கோடி நட்டஈடு வழங்குமாறு 'சண்டே லீடர்' பத்திரிகைக்கு கல்கிஸை நீதவான் நிதிமன்றம் இன்று வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளது என அதிர்வு இணையம் அறிகிறது. பாதுகாப்பு செயலாளருக்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் வகையில் பிரசுரிக்கப்பட்ட ஆக்கம் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட, வழக்கில் குற்றத்தை ஏற்றுக்கொண்டதை அடுத்தே கல்கிஸை நீதவான் பிரியந்த பெர்ணான்டோ இந்த உத்தரவை பிறப்பித்தர். 
22 November, 2012 by admin

இதேவேளை, பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் வகையில் ஆக்கங்களை பிரசுரித்தல் மற்றும் செய்தி வெளியிடுதல் ஆகியவற்றைத் தடுக்கும் வகையில் நிரந்தர தடையுத்தரவையும் நீதிமன்றம் பிறப்பித்தது. அதாவது இனி சண்டே லீடம் கோத்தபாயவைப் பற்றி எழுதவே முடியாது என்ற நிலை தோன்றியுள்ளது.

யுத்த காலத்தின் போது மிக் விமானங்கள் கொள்வனவு செய்யப்படட்டது தொடர்பில் சண்டே லீடர் பத்திரிகை வெளியிட்ட செய்தியின் மூலம் தனக்கு அபகீர்த்தி ஏற்படுத்தப்பட்டதாக அப்பத்திரிகையின் பிரதம ஆசிரியர் பெட்ரிகா ஜான்ஸ் மற்றும், அப்பத்திரிகைக்கு எதிராக பாதுகாப்பு செயலாளரினால் தாக்கல் செய்யப்பட்ட மான நஷ்ட வழக்கின் தீர்ப்பு இன்று வழங்கப்பட்ட நிலையிலேயே நீதவான் மேற்கண்ட உத்தரவைப் பிறப்பித்தார் என்பது குறிப்பிடத்தக்க விடையம். பெட்ரிகா ஜான்ஸ் கோட்டபாயவுக்குப் பயந்து நாட்டை விட்டு தப்பியோடியுள்ளார் என்பதும் யாவரும் அறிந்த விடையம்.

ad

ad