புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

23 நவ., 2012


தர்மபுரி அருகே கலவரம்: காதல் திருமணம் செய்த பெண் இன்று மீண்டும் கோர்ட்டில் ஆஜர்

தர்மபுரி அருகே உள்ள செல்லன்கொட்டாய் கிராமத்தை சேர்ந்த நாகராஜன் மகள் திவ்யா. இவரும் நத்தம் காலனியை சேர்ந்த இளங்கோ மகன் இளவரசனும் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டனர்
. இதனால் அவமானம் அடைந்த திவ்யாவின் தந்தை நாகராஜ் கடந்த 7-ந்தேதி தற்கொலை செய்து கொண்டார். இதனால் நத்தம் காலனி, அண்ணாநகர், கொண்டம்பட்டி ஆகிய 3 கிராமங்களில் வீடுகள் தீ வைத்து எரிக்கப்பட்டன. இதில் 268 வீடுகள் தீ வைத்து முற்றிலும் சேதம் அடைந்தது. மேலும் வீடுகளுக்கு முன்பு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த இரு சக்கர வாகனங்கள் எரிக்கப்பட்டன.

தொடர்ந்து வன்முறை நடந்த கிராமங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. இந்த நிலையில் இளவரசனுக்கு திருமண வயது பூர்த்தி அடையவில்லை. இது தொடர்பாக உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி திவ்யாவின் தாயார் தேன்மொழி தர்மபுரி மாவட்ட போலீஸ் நிலையத்தில் புகார் மனு கொடுத்தார். அதில் இளவரசன் மீது கடத்தல் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று கோரியிருந்தார். இது தொடர்பாக தர்மபுரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அஸ்ராகர்க் உத்தரவு படி கிருஷ்ணாபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) தேவிகாராணி விசாரணை நடத்தினார்.

இந்த நிலையில் திவ்யா கிருஷ்ணாபுரம் போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார். அப்போது அவர், தன்னை யாரும் கடத்த வில்லை. தானாக விரும்பியே சென்றதாக கூறினார். ஆனால் திவ்யா வேறொரு சமூகத்தை சேர்ந்த இளவரசனை திருமணம் செய்து வன்முறை சம்பவம் நடந்து விட்டதால், நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளிக்குமாறு போலீசார் கூறினர். இதனை அடுத்து டி.எஸ்.பி. பரமேஸ்வரா தலைமையிலான போலீசார் திவ்யாவை தர்மபுரி 2-வது குற்றவியல் கோர்ட்டில் நேற்று மாலை ஆஜர் படுத்தினர்.

நீதிபதியிடம் வாக்குமூலம் கொடுத்த திவ்யா, தன்னை யாரும் கடத்த வில்லை. தானே விரும்பி சென்றதாக கூறினார். இந்த நிலையில் திவ்யாவை சேலம் மகளிர் காப்பகத்திற்கு அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார். மேலும் திவ்யாவை இன்று மீண்டும் கோர்ட்டில் ஆஜர்படுத்த வேண்டும் என்று நீதிபதி ஜோதி உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து திவ்யாவை போலீசார் சேலம் மகளிர் காப்பகத்திற்கு அழைத்து வந்தனர். இந்த வழக்கு இன்று மீண்டும் தர்மபுரி கோர்ட்டில் விசாரணைக்கு வருகிறது.

இதையொட்டி போலீசார் திவ்யாவை மீண்டும் ஆஜர்படுத்த உள்ளனர். இந்த வழக்கில் திடீர் திருப்பமாக திவ்யாவை காதலித்து திருமணம் செய்த இளவரசனுக்கு 19 வயதே ஆவதாக கூறப்படுகிறது. இதுபற்றி திவ்யாவின் தாய் தேன்மொழி மற்றும் அவரது குடும்பத்தினர் கூறியதாவது:-

சட்டப்படி ஆணின் திருமண வயது 21, பெண்ணின் திருமண வயது 18. எனது மகள் திவ்யாவின் பிறந்த தேதி 5.12.1992 ஆகும். எனது மகளை அழைத்து சென்ற இளவரசனின் பிறந்த தேதி 3.3.1993. இன்றை தேதிபடி இளவரசனுக்கு 19 வயதே ஆகிறது. இளவரசனின் 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ்-2 பள்ளி மதிப்பெண் சான்றிதழ் மாற்று சான்றிதழ், நகல்கள் ஆகியவற்றில் பிறந்த தேதி 3.3.1993 என்றே குறிப்பிடப்பட்டு உள்ளது. 18 வயது பூர்த்தி அடையாத பெண்ணை மைனர் என்றும், அந்த திருமணம் செல்லாது என்று கூறுகிறார்கள்.

அதேபோல் 21 வயது நிரம்பாத வாலிபர் திருமணம் செய்தால் அது சட்டப்படி செல்லுமா? எங்கள் மகள் மேஜர் என்று போலீசார் கூறுகிறார்கள். அதே நேரத்தில் எங்கள் மகளை அழைத்து சென்ற இளவரசனுக்கு 21 வயது ஆகாததால் அவர்கள் திருமணம் செய்தால் அது சட்டப்படி செல்லுமா? என்பதை போலீசார் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

ad

ad