புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

23 நவ., 2012


பிரிட்டனில் கடும் வெள்ள அபாயம்: கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது 


பிரித்தானியாவின் புறநகர்ப் பகுதிகள், மிட்லன்ஸ் மற்றும் வேல்ஸ் போன்ற பகுதிகளை கடும் மழை தாக்க இருக்கிறது. இன்னு முதல் இன்னும் 2 வாரங்களுக்கு மழை நீடிக்கும் என வாநிலை அவதானிப்பு நிலையம் அறிக்கை விடுத்துள்ளது. பிரித்தானியாவின்
பல பகுதிகள் ஏற்கனவே நீரில் மூழ்கியுள்ளது. தாழ்மையான பகுதிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந் நிலையில் அபாய எச்சரிக்கையை வானிநிலை அவதான நிலையம் உயர்த்தியுள்ளது. அடுத்த 2 வாரங்களில் பெய்யவிருக்கும் கடும் மழையால் லண்டன் நகரப் பகுதிகள் கூட வெள்ளத்தில் சிறிது பாதிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. லண்டனில் உள்ள தமிழர்கள் மாவீரர் மாதத்தை அனுஷ்டித்துவரும் நிலையில், நடக்கவிருக்கும் மாவீரர் தினத்துக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளார்கள்.

நவம்பர் 27ம் திகதி நடக்கவிருக்கும் மாவீரர் நாள், லண்டன் எக்ஸெல் மண்டபத்தில் நடக்கவிருக்கிறது. பிரம்மாண்டமான இம் மண்டபத்திற்கு அருகாமையில் தொடரூந்து நிலையமும், 15,000 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கார்கள் தரிக்கக் கூடிய கார் பார்க் வசதிகளும் உள்ளது. இம் மண்டபத்தில் இம் முறை மாவீரர் தின மிகச் சிறப்பாக நடைபெறவுள்ளது. மழை, புயல் வெள்ளம் எது பிரித்தானியாவைத் தாக்கினாலும் அம் மண்டபத்தில், மாவீரர் தினம் சிறப்பாக நடக்கும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளார்கள். பெருந்தொகையான மக்கள் எக்ஸெல் மண்டபம் நோக்கி படையெடுக்க இருக்கிறார்கள்.

ad

ad