புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

26 நவ., 2012


அரசாங்கம் இழுத்தடித்தால் சர்வதேச ரீதியில் தமிழ் அமைப்புகளுடன் இணைந்து சாத்வீகப் போராட்டம்!- தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவிப்பு
தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு யோசனைகளை முன்வைக்கும் வகையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு, புதிய அரசியல் தந்திரோபாயங்களைக் கையாள உள்ளதாகவும், இதன் அடிப்படையில் இந்தியா, அமெரிக்கா, தென்னாபிரிக்கா ஆகிய நாடுகளின் ஆலோசனைகள் பெற்றுக்கொள்ளப்படும் என்றும் கூட்டமைப்பின் சிரேஷ்ட தலைவர்களில் ஒருவர் தெரிவித்தார்.
இதன் ஓர் கட்டமாகத் தமிழ் தேசியக் கூட்டமைப்ப எதிர்வரும் ஜனவரி மாதத்தில் அமெரிக்காவுக்கு விஜயம் செய்யவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். தேசிய இனப் பிரச்சினைக்கு உரிய தீர்வைக் காணுமாறு இலங்கையை வலியுறுத்தக்கூடிய அன்றேல் இலங்கை மீது அழுத்தங்களைப் பிரயோகிக்க்கூடிய நாடுகளின் உதவியைப் பெற்றுக் கொள்வதே கூட்டமைப்பின் பிரதான நோக்கம் என்றும் அவர் கூறினார்.
தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு யோசனைகள் தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு புலம்பெயர் தமிழர்கள் சர்வதேச தமிழ் மக்கள் சார் அமைப்புகள் என்பவற்றுடன் விரிவான பேச்சுகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் அண்மையில் பேர்லினில் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் பல்வேறு தரப்புடன் பேச்சுகளை முன்னெடுத்தனர் என்று கூறிய அவர் இலங்கை அரசாங்கம் தொடர்ந்தும் இழுத்தடிக்கும் போக்குகளைக் கையாண்டால் சர்வதேச ரீதியில் தமிழ் அமைப்புகளை ஒன்றிணைத்து சாத்வீகப் போராட்டம் ஒன்ற மேற்கொள்ளப்படும். இதற்குப் புலம்பெயர் தமிழர்களும் தம்மாலான பங்களிப்பை வழங்குவார்கள் என்று அவர் நம்பிக்கை வெளியிட்டார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு தென்னாபிரிக்காவின் மத்தியஸ்தத்தை ஏற்றுக் கொள்கின்றதா? நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் அங்கம் வகிக்கச் சித்தமாகவுள்ளதா? என்ற மேற்படி கூட்டமைப்பின் சிரேஷ்ட தலைவர்களில் ஒருவர் இவை இரண்டும் இரு வேறுபட்ட விடயங்கள் என்றும், கூட்டமைப்பை பொறுத்தமட்டில் சில விடயங்களில் தெளிவாக உள்ளது என்றும் குறிப்பிட்டார்.
இது தொடர்பாக அவர் தொடர்ந்து விபரிக்கையில், தென்னாபிரிக்காவை நாம் பரிபூரணமாக வரவேற்கின்றோம். அவ்வாறே இந்தியா, அமெரிக்கா போன்ற நாடுகளையும் நாம் வரவேற்கின்றோம். அவர்களின் பங்களிப்பும் உறுதிப்பாடும் எமக்க அவசியமாகும். அடுத்த ஜனவரி மாதம் எமக்கு முக்கியத்துவம் வாய்ந்த ஆபிரிக்க யூனியனுடனும் பேச்சுகளை நடத்தவுள்ளோம். எம்மைப் பொறுத்தமட்டில் பேச்சுகளை அரசாங்கத்துடன் மேற்கொள்ள உண்மைத் தன்மை அவசியமாகும் இதனை நாம் தென்னாபிரிக்க பிரதிநிதிகளிடம் எடுத்துக் கூறியுள்ளோம்.
தொடர்ச்சியாக இலங்கை அரசின் ஏமாற்றங்களுக்க கூட்டமைப்ப ஆளாகியுள்ளதால் நாம் மிகவும் எச்சரிக்கையுடனேயே செயற்பட்டு வருகின்றோம். இதன் அடிப்படையில் தென்னாபிரிக்க அரசு எமக்கு மூன்று வகையில் உதவிகளை வழங்கலாம். முதலாவது மத்தியஸ்தராக, இரண்டாவது ஏற்பாட்டளராக, மூன்றாவது உறுதியான பார்வையாளராக ஏதேனும் ஒரு வகையில் எமக்கு உதவ முடியும்.
குறைந்த பட்சம் பார்வையராக எமக்கு உதவுவதானால் அதன்மூலம் இலங்கைக்கு அழுத்தம் கொடுக்கக்கூடியதாக இருக்க வேண்டும். அவ்வாறான நிலையிலேயே இலங்கை அரசுடன் பேச்சுகளை ஆரம்பிக்கக் கூடியதாகவிருக்கும். அதன் பின்னரே தெரிவுக்குழுவில் இணைவது தொடர்பில் சிந்திக்கக் கூடியதாக இருக்கும்.கூட்டமைப்பை பொறுத்தமட்டில் தெரிவுக்குழுவில் இணைவதற்கு எதிர்ப்பைக் கொண்டிருக்கவில்லை. ஆனால் இலங்கை அரசின் கபட விலைக்குள் சிக்கக்கூடாது  என்பதில் கூட்டமைப்பு உறுதியாகவே உள்ளது.
மனித உரிமைகள் தொடர்பான கடந்த ஐநா அமர்வில் தென்னாபிரிக்கா எமக்கு அனுகூலமாக எவ்விதக் கருத்தையும் தெரிவிக்காத போதிலும் எமது விவகாரத்தை நன்கு உணர்ந்து வைத்துள்ளது. தேசிய இனப் பிரச்சினைக்கான தீர்வு விவகாரம் எந்தளவுக்கு இழுத்தடிக்கப்பட்டு வருகின்றது என்பதை நாம் எடுத்துக் கூறியுள்ளோம். இதேவேளை தென்னாபிரிக்கா மற்றம் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு நாம் வரும் ஜனவரி மாதம் விஜயம் செய்யவுள்ளோம் என்றார்.
தென்னாபிரிக்காவின் பிரதி வெளிவிவகார அமைச்சர் இப்ராஹிம் இஸ்மைல் இப்ராஹிமை அண்மையில் பேர்லினில் கூட்டமைப்பு பிரதிநிதிகள் சந்தித்து பேச்சுகள் நடத்தியுள்ளனர். குறித்த அமைச்சருடன் நடத்தியுள்ள பேச்சுகள் தொடர்பாக அவர் விபரிக்கையில்,
பேர்லினில் நடைபெற்ற சந்திப்பின்போதே எமக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. தென்னாபிரிக்க பிரதி வெளிவிவகார அமைச்சர் இலங்கைத் தமிழர் பிரச்சினை தொடர்பில் நன்கு அறிந்தவராக இருந்த அதேவேளை. வடக்கு கிழக்கில் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் நெருக்கடிகள் தொடர்பில் எடுத்து விளக்கினோம்.
மீள்குடியேற்றத்தில் காணப்படும் குறைபாடுகள், நில ஆக்கரமிப்பு, அதீத இராணுப் பிரசன்னம்  என்பவை குறித்தும் எடுத்துக் கூறினோம். அந்த வகையில் இருதரப்பு சந்திப்புகளும் மிகவும் ஆரோக்கியமான வகையில் அமைந்திருந்தன. எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இந்தியாவோ, அமெரிக்காவோ, தென்னாபிரிக்காவோ எம்மைத் தெரிவுக்குழுவில் பங்கேற்குமாறு வலியுறுத்தவில்லை. மாறாக இனப்பிரச்சினைக்கான அழுத்தத்தை கூட்டமைப்பு பிரயோகிக வேண்டும் என்பதே அவர்களின் நிலைப்பாடாக இருந்தது.
பேர்லினில் நடைபெற்ற சந்திப்பில் இலங்கை விவகாரத்தில் கடந்த காலங்களில் அதீத அக்கறை காட்டிய எரிக் சொல்கெயம் கலந்துகொண்டார்.
அனைத்து தரப்பினரும் இலங்கையின் இழுத்தடிப்பு நடவடிக்கைகள் தொடர்பில் மிகுந்த விசனம் கொண்டவர்களாகவே காணப்பட்டனர்.
எவ்வாறிருந்த போதிலும் சர்வதேசத்தின் கவனம் இலங்கையின் பக்கம் வெகுவாக திரும்பியுள்ளது. எவ்வாறேனும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐநா மனித உரிமைகள் தொடர்பான கூட்டத்தொடருக்க முன்னர் கூட்டமைப்புடன் உடன்பாட்டை மேற்கொள்ள வேண்டும் என்பதில் அரசு மிகுந்த முனைப்'புடன் உள்ளது. அவ்விடயத்தில் கவனமாகவே காய் நகர்த்தல்களை மேற்கொண்டு வருகின்றோம் என்றார்.

ad

ad