கனடாவில் தமிழ் பெண் வாகனத்தில் எரித்து கொலை- ஆணின் சடலமும் மீட்பு
எரிந்த நிலையில் இவரின் சடலம் மீட்கப்பட்ட போது இன்னொரு ஆணின் சடலமும் மீட்கப்பட்டுள்ளது. இந்த ஆணுக்கும்
இப்பெண்ணுக்கும் இடையில் ஏற்கனவே பழக்கம் இருந்ததாகவும், இந்நிலையிலேயே இப்பெண்ணை அவர் கொலை செய்து விட்டு இந்நபர் தான் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்திருக்கிறது.
சம்பவதினம் காலை 9 மணியளவில் பொலிசாருக்கு கிடைத்த அழைப்பை அடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் எரிந்த வாகனத்துகுள் இருந்து இரண்டு உடல்களை கைப்பற்றி விசாரணையை தொடர்ந்தனர்.
ஒன்று கொலை, மற்றொன்று தற்கொலை என ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
ஒன்று கொலை, மற்றொன்று தற்கொலை என ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த கொலை மற்றும் தற்கொலை தொடர்பாக நடத்தப்படும் விசாரணைகளில் இன்னும் பல தகவல்கள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த பெண் கணவனை விட்டுவிட்டு எதற்காக இந்த ஆணுடன் சென்றார், இந்த ஆணுக்கும் பெண்ணுக்கும் என்ன தொடர்பு என்ற முடிச்சுக்கள் அவிழ்க்கப்படும் போது பல உண்மைகள் வெளியாகும் என கனடா தகவல்கள் தெரிவிக்கின்றன