புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

23 நவ., 2012

கழக அணியின் உரிமையாளராக இருப்பதே எனது விருப்பம் : டேவிட் பெக்கம
லொஸ் ஏஞ்சல்ஸ் கலக்ஸி" கழகத்திலிருந்து விலகி ஏதாவது ஒரு கழக அணியின் உரிமையாளராக இருப்பதே எனது விருப்பமென இங்கிலாந்து அணியின் கால்பந்தாட்ட ஜாம்பவான் டேவிட் பெக்கம் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் பெக்கம் இது குறித்து கூறுகையில்,

'கடந்த ஐந்து ஆண்டுகளாக லொஸ் ஏஞ்சல்ஸ் அணிக்காக விளையாடியது மகிழ்ச்சியளிக்கிறது. நான் இந்த அணிக்காக விளையாடிய ஒவ்வொரு போட்டியும் என்றும் மறக்க முடியாதவை. இறுதியாக டிசம்பர் மாதம் முதலாம் திகதி நடைபெறவுள்ள மேஜர் லீக் கால்பந்து தொடரின் இறுதி போட்டியில் லொஸ் ஏஞ்சல்ஸ் அணிக்காக விளையாட முடிவெடுத்துள்ளேன். ஆனால் இத்தொடரில் இருந்து முழுமையாக விலகும் எண்ணம் இல்லை. எதிர்வரும் காலங்களில் ஏதாவது ஒரு கழக அணியின் உரிமையாளராக இருப்பதே எனது விருப்பமெனத் தெரிவித்தார்.


இங்கிலாந்து கால்பந்தாட்ட அணியின் நட்சத்திர வீரராக திகழ்ந்த டேவிட் பெக்கம் கடந்த 2009ஆம் ஆண்டில் சர்வதேச கால்பந்து போட்டியில் இருந்து விலகினார். இங்கிலாந்து அணிக்காக 115 போட்டிகளில் பங்கேற்று 17 கோகளை அடித்துள்ளார். இவர் முதன்முதலில் உள்ளூர் போட்டிகளில் மான்செஸ்டர் யுனைடெட் கழகத்திற்;காக (1993-2003) ஒப்பந்தம் செய்யப்பட்டார். அதன்பின் ரியல் மாட்ரிட் கழகத்திற்காக (2003-2007) விளையாடினார். தற்போது லொஸ் ஏஞ்சல்ஸ் கலக்ஸி கழகத்திற்காக விளையாடி வரும் பெக்கம், இதுவரை 98 போட்டிகளில் பங்கேற்று 18 கோல்களை அடித்துள்ளார்.

அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகாணத்தில் எதிர்வரும் டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள மேஜர் லீக் கால்பந்து தொடரின் இறுதி போட்டிக்கு லொஸ் ஏஞ்சல்ஸ் கலக்ஸி அணி தகுதி பெற்றுள்ளது. இறுதிப் போட்டியில் ஹாஸ்டன் டைனமோ அணியை எதிர்கொள்ளவுள்ளது. இதில் லொஸ் ஏஞ்சல்ஸ் அணி வெற்றி பெறும் பட்சத்தில் 'நடப்பு சம்பியன்" அந்தஸ்தை தக்கவைத்துக் கொண்டு நான்காவது முறையாக கிண்ணத்தை கைப்பற்றும் சாத்தியம் உள்ளது.

இப்போட்டியுடன் டேவிட் பெக்கம் லொஸ் ஏஞ்சல்ஸ் அணியில் இருந்து விலக முடிவெடுத்துள்ளார். எனவே இப்போட்டி பெக்கமின் இறுதிப் போட்டியாக அமையலாமென எதிர்பார்க்கப்படுகின்றது. இதேவேளை, பெக்கமை அவுஸ்திரேலிய கழகமொன்று ஒப்பந்தம் செய்யப் போவதாக அண்மைக் காலங்களில் ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ad

ad