புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 அக்., 2013

பைலின் புயலில் சிக்கி நடுக்கடலில் மாயமான தமிழக மீனவர்கள் 18 பேர் கரை திரும்பியதாக தகவல்
ஒடிசாவை தாக்கிய பைலின் புயலில் சிக்கி நடுக்கடலில் மாயமான தமிழக மீனவர்கள் 18 பேர் பத்திரமாக கரை திரும்
பியுள்ளனர். ராம்புரா என்ற இடத்தில் அவர்கள் கரை திரும்பியுள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டம் விடாலம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் 18 பேர், கடந்த மாதம் 18ஆம் தேதி ஒடிசா மாநிலம் அந்துரங்கா என்ற துறைமுகம் வழியாக ஜெயபவன்புத்திரா மற்றும் ஜெய்பஞ்சன் என்ற இரு விசைப்படகுகளில் கடலுக்கு சென்றனர். கடந்த 10ஆம் தேதி அவர்கள் கரைக்கு திரும்பிக்கொண்டிருந்தபோது, புயலால் நடுக்கடலில் சிக்கினர். டீசல் தீர்ந்துவிட்டதால் கடலோர காவல்படையின் உதவியை நாடினர். அவர்களை மீட்க முயன்றபோது, புயலின் தீவிரத்தால் நெருங்க முடியவில்லை. மேலும் மீனவர்களின் தொலைதொடர்பு கருவிகளும் செயல் இழந்தது. 
இதையடுத்து ஒடிசா அரசின் உதவியோடு வஞ்சிரா என்ற கப்பல்  மூலம் தேடும் பணிகள் நடந்தது. அதிலும் பின்னடைவு ஏற்பட்டது. பின்னர் ராம்புரா என்ற இடத்தில் 18 பேரும் கரை திரும்பியுள்ளதாக தகவல் கிடைத்தது. கரை திரும்பியதை மீனவர்கள் தங்களது உறவினர்களை தொடர்பு கொண்டு தெரிவித்துள்ளனர்.

ad

ad