புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 அக்., 2013

மத்தியப் பிரதேசத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 50 பேர் பலி
மத்தியப் பிரதேச மாநில தட்டியா மாவட்டத்தின் ரத்னாகர் பகுதியில் மந்துளா தேவி கோவிலில் நவராத்திரி பூஜையின் ஒன்பதாவது நாளான இன்று நிகழ்ச்சிகள்  நடைபெற்றுக் கொண்டிருந்தன. 


அதிகாலையில் இருந்து வழக்கம்போல் பக்தர்கள் கோவிலுக்கு வந்து கொண்டிருந்தனர். கோவிலுக்கு வரும் வழியில் சிந்து நதியைக் கடப்பதற்கு குறுகலான பாலம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. 
அந்த இடத்தில் வரும்போது கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த போலீசார் தடியடி நடத்தியதாக கூறப்படுகிறது. அப்போது பக்தர்கள் ஒருவரை ஒருவர் முந்திக்கொண்டு செல்ல முயன்றதில் காலில் மிதிபட்டும், ஆற்றில் தவறி விழுந்தும் 50 பேர் உயிரிழந்ததாக போலீசார் தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன.
 
100-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். சம்பவம் நடந்த இடம் தலைநகர் தட்டியாவிலிருந்து 50 கி.மீ தொலைவில் உள்ளது. சம்பவப்பகுதிக்கு விரைந்த மீட்புப்படையினர் பாதிக்கப்பட்டோர்களை உடனடியாக தட்டியா  மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். 
கடந்த 2006 ஆம் ஆண்டில் அருகிலுள்ள சிவபுரி மாவட்டத்தில் அமைந்துள்ள மணிகண்டா அணையிலிருந்து உபரி நீர் திறந்துவிடப்பட்டது. அப்போது ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் 35-க்கும் மேற்பட்ட யாத்ரிகர்கள் அடித்துச் செல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

ad

ad