13 அக்., 2013

17 வயது இளம்பெண் பலாத்காரம்: கார் டிரைவர் கைது
 தானா மாவட்டம் நாலாசோப்ரா கிழக்கு சந்தோஷ் பவன் பகுதியை சேர்ந்தவர் ராஜு வர்மா (38). கார் டிரைவரான இவர் அப்பகுதியை சேர்ந்த 17 வயது இளம் பெண்ணை வெளியிடங்களை சுற்றிப்பார்க்க
தனது காரில் அழைத்து சென்றார்.

அப்போது காரில் வைத்து ராஜு வர்மா பலவந்தப்படுத்தி பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பான புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவுசெய்து கார் டிரைவர் ராஜுவை கைது செய்தனர். மேலும் பாதிக்கப்பட்ட பெண்ணை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். 
இதையடுத்து போலீசார் ராஜுவை வசாய் கோர்ட்டில் நேற்று ஆஜர்படுத்தினர். கோர்ட்டில் அவரை வருகிற 15 -ந்தேதி வரை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்குமாறு போலீசாருக்கு நீதிபதி உத்தரவிட்டார்.