புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

13 அக்., 2013

மாகாண கழகங்களுக்கிடையிலான கால்பந்து சுற்றுப்போட்டி 26 இல் ஆரம்பம்

கோட்டை மாந­கர சபை யின் ஏற்­பாட்டில் நடத்­தப்­ப­ ட­வி­ருக்கும் அகில இலங்கை ரீதி­யி­லான மாகா­ணங்­க­ளுக்­கி­டை­யி­லான கால்­பந்­தாட்ட சுற்­றுப்­போட்­டிகள் ஒக்­டோபர் 26ஆம் திக­தி­யி­லி­ருந்து
கொழும்பு கோட்டை ஒபே­ச­புர மைதா­னத்தில் நடாத்­தப்­ப­ட­வுள்­ளது.
அகில இலங்கை கால்­பந்­தாட்ட சம்­மே­ள­னத்தின் அனு­ச­ர­ணை­யுடன் ஏற்­பாடு செய்யப்­பட்­டுள்ள இச்­சுற்­றுப்­போட்­டி­க­ளுக்கு இலங்­கையின் சகல மாகா­ணங்­க­ளி­ருந்தும் கால் ­பந்­தாட்ட அணி­க­ளுக்கு கொழும்பு மாந­கர­ச­பை­யினால் அழைப்பு விடுக்­கப்­பட்­டுள்­ளது.
இது தொடர்­பாக கொழும்பு கோட்டை மாந­கர சபை முதல்வர் ஜனகா ரண­வக்க தெரி­விக்­கையில்,
கடந்த காலங்­களில் சர்­வ­தேச ரீதி­யி­லான உதை­பந்­தாட்ட போட்­டி­களில் இலங்கை பாரிய பின்­ன­டை­வு­களை சந்­தித்­துள்­ளது. எனவே, இலங்­கையில் சிறந்த உதைப்­பந்­தாட்ட வீரர்­களை தெரிந்­தெ­டுக்க வேண்­டி­யது எமது தேவை­யா­க­வுள்­ளது.
எனவே,வருங்­கா­லங்­களில் இலங்­கையின் சர்­வ­தேச உதை­பந்­தாட்ட அணியை பலப்­ப­டுத்தும் நோக்­கோடும் இளை­ஞர்­களின் போதைப்­பொருள் பழக்கத்தை இல்லாதொழிக்கும் நோக்கோடும் இவ்வாறான கால்பந்தாட்டப்போட்டிகள் நடத்தப்படுகின்றன.