புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 அக்., 2013

கொமன்வெல்த் மாநாட்டை இந்தியா புறக்கணிக்க வேண்டும்: தமிழகமெங்கும் ஆர்ப்பாட்டம்


இலங்கையில் நடைபெறும் கொமன்வெல்த் மாநாட்டை இந்தியா புறக்கணிக்க வேண்டும் என வலியுறுத்தி, அனைத்துக் கட்சிகளின் சார்பிலும் தமிழகமெங்கும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் இன்று காலை 11 மணியளவில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, இலங்கையில் கொமன்வெல்த் – எதிர்ப்பியக்கம் சார்பில் வழக்கறிஞர் பாவேந்தன் தலைமையேற்றார்.

இலங்கையில் நடைபெறும் கொமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாதென வலியுறுத்தி உண்ணாப் போராட்டம் நடத்தி வரும் தியாகுவின் உயிரைக் காப்போம் எனவும் இவ் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொணடோர் கோஷமிட்டனர்.

இலங்கையில் கொமன்வெல்த் – எதிர்ப்பியக்க அமைப்பாளர் தோழர் மதியவன் தொடக்கவுரையாற்றினார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், ம.திமு.க. துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யா, தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாநில தொழிற்சங்கத் தலைவர் கோ.வி.சிவராமன், திராவிடர் விடுதலைக் கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், தமிழ்நாடு மக்கள் கட்சிப் பொதுச் செயலாளர் செல்வி, தந்தை பெரியார் திராவிடர் கழக வழக்கறிஞர் அமர்நாத், தமிழர் முன்னேற்றக் கழகத் தலைவர் இரா.அதியமான், மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, சேவ் தமிழ்ஸ் இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் செந்தில் உள்ளிட்ட பல்வேறு அமைப்புத் தலைவர்கள் இதில் பங்கேற்றனர்.

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில், தலைமைச் செயற்குழு உறுப்பினர் க.அருணபாரதி உரையாற்றினார்.

இதேபோன்று தமிழ் நாட்டின் தஞ்சை, சிதம்பரம், பெண்ணாடம், மதுரை, ஓசூர் உட்பட பல இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.













ad

ad