13 அக்., 2013

 வடக்கில் கடல்கொந்தளிப்பு; 150ற்கு மேற்பட்ட வள்ளங்களும் மூழ்கின 
வடமராட்சி கிழக்கு கடற்கரை தொடக்கம் முல்லைத்தீவு செம்மலை வரையான கடற்பகுதி கொந்தளித்தமையினால் 150 ற்கும் மேற்பட்ட  வள்ளங்கள் கடலில் இழுத்துச் செல்லப்பட்டுள்ளன.


வடமராட்சி கிழக்கு, மணற்காடு, கட்டைக்காடு, வண்ணார்குளம், செம்மலை, முல்லைத்தீவு ஆகிய பிரதேசங்களின் கடற்பகுதி இன்று அதிகாலை 12 மணி முதல் 12.05 வரையில் கடும் கொந்தளிப்புடன் காணப்பட்டது.

இதனால் வடமராட்சி கரையோரங்களினை அண்டிய கடற்றொழிலாளர்களின் 100 இற்கும் மேற்பட்ட வள்ளங்கள் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டுள்ளதுடன், பல வள்ளங்கள் சேதமடைந்துள்ளன.

மேலும் மீன்பிடி வலைகளும் கடலுடன் காணமற் போயுள்ளதாக வடமராட்சி கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கச் சமாசம் தெரிவித்தது.

அதேவேளை, முல்லைத்தீவுக் கடற்பரப்பிலும் நிலவிய கடற்கொந்தளிப்பினால் 25 வள்ளங்கள் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டுள்ளதுடன், 50 இற்கு மேற்பட்ட வள்ளங்கள் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.