அமைச்சு பதவிக்காகவும் முள்ளிவாய்க்காலுக்கு செல்லும் முன்னாள் இராணுவ ஒட்டுக்குழுக்கள்- நன்றி தினக்கதிர்
தினக்கதிரில் வந்த செய்தி இது .
இந்த செய்திக்கு சம்பந்தப்பாடோர் மற்றும் விமர்சகர்கள் கருத்துக்களை நாகர்ரீகமாக பத்த்ரிகை சுதந்திர அல்லாக்கு உட்பட்டு எழுதலாம் வெளியிடுவோம்
ரெலோ இயக்கம் யாழ்ப்பாணத்தில் நடந்த சத்தியபிரமாண வைபவத்தை புறக்கணிக்கவில்லை. அதன் தலைவரும் ஏனையவர்களும் அதில் கலந்து கொள்ளவில்லை. ஆனால் ரெலோ இயக்கத்தை சேர்ந்த மாகாணசபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் தனக்கு மாகாண அமைச்சு பதவி தரவில்லை என கோரி இந்த சத்திய பிரமாண வைபவத்தை புறக்கணித்திருந்தார்.
ஈ.பி.ஆர்.எல்.எவ் இயக்கமும் சுரேஷ் பிரேமச்சந்திரனின் தம்பிக்கு அமைச்சர் பதவி தரவில்லை என சத்திய பிரமாண வைபவத்தை புறக்கணித்திருந்தது. சித்தார்த்தனுக்கு அமைச்சு பதவி வழங்கவில்லை என புளொட் இயக்கம் இந்த சத்திய பிரமாண வைபவத்தை புறக்கணித்திருந்தது.
புளொட் இயக்கம் முள்ளிவாய்க்காலில் யுத்தம் முடியும் வரை விடுதலைப்புலிகளுக்கு எதிராக இராணுவத்தினருடன் சேர்ந்து தாக்குதல்களை நடத்தி வந்தனர். இப்போதும் சிறிலங்கா இராணுவத்தினருடனான உறவை முறித்து கொள்ளவில்லை. சிறிலங்கா இராணுவ ஒட்டுக்குழுவாக இயங்கி வருகிறது.
ரெலோவும் 2000ஆம் ஆண்டுவரை சிறிலங்கா இராணுவ ஒட்டுக்குழுவாக இயங்கி வந்ததுடன் விடுதலைப்புலிகள் மீது தாக்குல்களை நடத்தி வந்தது. ஈ.பி.ஆர்.எல்.எவ் இயக்கமும் அதே போன்று 2000ஆம் ஆண்டு வரை சிறிலங்கா இராணுவ ஒட்டுக்குழுவாக இயக்கி வந்தது.
இவர்கள் எதிர்வரும் 14ம் திகதி திங்கட்கிழமை முள்ளிவாய்க்காலில் சத்தியப்பரமாணம் செய்து கொள்ளவுள்ளதாக எம்.கே.சிவாஜிங்கம் தெரிவித்தார்.
ஈ.பி.ஆர்.எல்.எப். இயக்கத்தை சேர்ந்த ஐந்து உறுப்பினர்களும் புளொட்டைச் சேர்ந்த இரண்டு உறுப்பினர்களும் ரெலோவைச் சேரந்த சிவாஜிலிங்கமும் வீரசிங்கம் மண்டபத்தில் நடந்த பதவியேற்பு நிகழ்வில் பங்கேற்கவில்லை.
இந்நிலையில் முன்னாள் இராணுவ ஒட்டுக்குழுக்களை சேர்ந்த எட்டு பேரும் முள்ளிவாய்க்காலில் சத்தியப் பிரமாணம் மேற்கொள்ள தீர்மானித்துள்ளனர்.
இந்நிலையில் முன்னாள் இராணுவ ஒட்டுக்குழுக்களை சேர்ந்த எட்டு பேரும் முள்ளிவாய்க்காலில் சத்தியப் பிரமாணம் மேற்கொள்ள தீர்மானித்துள்ளனர்.
முள்ளிவாய்க்காலில் வைத்து சிறிலங்கா அரசியல் யாப்பை கட்டி காப்போம் என்றும் சிறிலங்கா அரசியல்யாப்பிற்கும் அரசாங்கத்திற்கும் விசுவாசமாக செயற்படுவோம் என்றும் பிரிவினையை ஒரு போதும் கோர மாட்டோம் என்றும் சத்தியபிரமாணம் செய்ய உள்ளனர்.
- See more at: http://www.thinakkathir.com/?p=53092#sthash.gUfGzvbs.dpuf