புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

26 மார்., 2013

கூட்டமைப்புடன் பேச பீரீஸ் முட்டுக்கட்டை; அரசின் குட்டு அம்பலமாகிறது; ரஜீவ விஜேயசிங்க அதிர்ச்சித் தகவல்
அரசியல் தீர்வுத்திட்டப் பேச்சு விவகாரத்தில் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸின் செயற்பாடுகள் தொடர்பில் கடும் அதிருப்தி வெளியிட்டுள்ள ஆளும்தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ரஜீவ விஜேயசிங்க, அரச தரப்பு பேச்சுக்குழு மறுசீரமைக்கப்பட

சாவகச்சேரி நகரசபையின் உறுப்பினரான செல்வன்.ஞா.கிஷோர் மீதான தாக்குதலை வன்மையாகக் கண்டிக்கின்றோம்
எமது இலங்கைத்தமிழரசுக்கட்சி இளைஞர் அணியின் சாவகச்சேரி தொகுதி அமைப்பாளரும், சாவகச்சேரி நகரசபையின் உறுப்பினருமான செல்வன்.ஞா.கிஷோர் அவர்கள், இனந்தெரியாதோரால் தாக்கப்பட்டு , யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இவர் மீதான தாக்குதலை வன்மையாகக் கண்டிக்கின்றோம். அத்துடன் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யுமாறு கோரிக்கை விடுக்கின்றோம்

இந்தச் சிங்களவர் யார் என்று தெரிகிறதா ?
இங்குள்ள புகைப்படத்தில் காணப்படும் நபரின் பெயர் நிஷாந்த கஜநாயக்க ஆகும். கொழும்பில் 2008 முதல் 2012 வரை நடைபெற்ற பல ஆட்கடத்தலில் இவரே நேரடியாகச் சம்மந்தப்பட்டுள்ளார் என்று சிங்கள ஊடகம் ஒன்று தகவ

ஈழத் தமிழர் பிரச்சனை: இனி நாற்காலியில் இருக்கக்கூடாது சபாநாயகர் !

இலங்கைத் தமிழர் பிரச்சனையை நேற்று ராஜ்யசபாவில் தமிழக எம்.பிக்கள் எழுப்பிய போது, சபாநாயகர் நாற்காலியில் இருந்த ரேணுகா சவுத்ரி, அ.தி.மு.க.வின் மைத்ரேயன் மீது காட்டமான சொற்பிரயோகம் செய்தார். இதைக்கேட்டு ஆவேசம்

மாணவர்கள், ஜெயலலிதா எதிர்ப்பு! வீரர்களை முடிவு எடுக்க சொன்ன இலங்கை கிரிக்கெட் வாரியம்!
சென்னை உட்பட இந்தியாவில் நடக்கும் ஐபிஎல் போட்டியில் இலங்கை வீரர்கள் கலந்து கொள்ளக் கூடாது என்று இலங்கை தமிழர்களுக்காக போராடி வரும் தமிழக மாணவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மீறி ஐபிஎல் போட்டியி

வடக்கு கிழக்கு மக்களுக்கு இழந்த உயிர்களைத் தவிர ஏனைய அனைத்தையும் வழங்கத் தயார்!- ஜனாதிபதி
வடக்கு கிழக்கு மக்களுக்கு இழந்த உயிர்களைத் தவிர ஏனைய அனைத்தையும் வழங்க அரசாங்கம் தயார் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

சென்னை சுப்பர் கிங்ஸ் அணியில் இருந்து இலங்கை வீரர்கள் நீக்கம்
இந்தியன் பிரீமியர் லீக் போட்டித் தொடரின் சென்னை சுப்பர் கிங்ஸ் அணியில் இருந்து இலங்கை வீரர்களை நீக்க அணியின் உரிமையாளர் தீர்மானித்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

சென்னை சரவணா ஸ்டோர்சின் சிங்கள விளம்பரம்!- எதிர்ப்பு ஆரம்பம்
இலங்கைக்கு எதிராக பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் வலியுறுத்தி வரும் நிலையில் சென்னையில் உள்ள சரவணா ஸ்டோர் நிறுவனம் சிங்களத்தில்  விளம்பரம் அச்சடித்து விநியோகித்து வருகிறது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

25 மார்., 2013

சுவிட்சர்லாந்தில் அதிகரிக்கும் சாலை விபத்துகள்
சுவிட்சர்லாந்தில் கடந்த வருடம் நடந்த சாலை விபத்துகளில் 339 பேர் உயிரிழந்துள்ளனர் என்று மத்தியக் கூட்டரசின் சாலைத் துறையின் புள்ளி விவரம் தெரிவிக்கின்றது.
சிறிலங்கா- சீன கூட்டணியை உடைக்க புதுடெல்லியில் இன்று முக்கிய கூட்டம்
சிறிலங்காவில் முக்கியமான துறைகளில் சீனாவின் செல்வாக்கு அதிகரித்து வருவது குறித்து இந்தியப் பாதுகாப்பு கட்டமைப்புகள் கவலை கொண்டுள்ளன. 
வடக்கில் மாகாணசபையே இல்லையாம்

வடக்கு மாகாணசபை இன்னமும் சிறிலங்கா அதிபரால் பிரகடனப்படுத்தப்படாத நிலையில், அதற்கான தேர்தல் ஏற்பாடுகளைத் தம்மால் மேற்கொள்ள முடியாது என்று சிறிலங்கா தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். 
சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று காலை 10.30 மணியளவில் தி.மு.க., அவசர செயற்குழு கூட்டம் தொடங்கியது. திமுக தலைவர் கருணாநிதி தலைமையிலான கூட்டத்தில் பொருளாளர் ஸ்டாலின், பொதுச்செயலாளர் அன்பழகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். எதிர்பார்க்கப்பட்டது போல், திமுக தென்மண்டல பொறுப்பாளர் அழகிரி கலந்து கொள்ளவில்லை. செயற்குழு கூட்டத்தில் அனைத்து செயற்குழு உறுப்பினர்களும் கலந்து கொள்ள

இலங்கை தலைநகர் கொழும்பில் நவம்பர் மாதம் நடைபெறும் பொதுநலவாய நாடுகள் மாநாட்டை புறக்கணிக்க வேண்டும் என்று பிரதமர் மன்மோகன்சிங்கை தமிழக முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்
பிரதமர் மன்மோகன்சிங்குக்கு முதல்வர் ஜெயலலிதா இன்று அனுப்பியுள்ள கடிதத்தில்,

தமிழக சட்டப்பேரவையில் இருந்து தே.மு.தி.க., எம்.எல்.ஏ.,க்கள் 6 பேர் ஓராண்டு இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். சட்டப்பேரவை சபாநாயகர் இந்த நடவடிக்கை எடுத்துள்ளார். 
இந்த நடவடிக்கையை கண்டித்து தே.மு.தி.க., -தி.மு.க., -மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் வெளிநடப்பு செய்தனர்.

கூட்டமைப்பு ஒன்றா? இரண்டா? நாளை முடிவு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இப்போதுள்ளதைப் போல ஐந்து கட்சிகளைக் கொண்ட கூட்டமைப்பாகச் செயற்படப்போகின்றதா அல்லது அதில் பிளவு ஏற்படப்போகின்றதா என்ற கேள்விக்கு இன்னும் இரு தினங்களில் பதில் கிடைத்துவிடும்.தமிழ்த் தேசியக் கூட்

தி மு க இல் பிரிவினை மந்திரி பதவி போனதால் அழகிரிக்கு வருத்தம் செயற்குழு கூட்டத்தில் பங்கேற்கவில்லை. சிதம்பரத்தை தனியாக சந்தித்த மர்மம் என்ன
சென்னையில் திமுக தலைமை செயற்குழு அவசரக் கூட்டம் துவங்கியது
சென்னையில் திமுக தலைமை செயற்குழு கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் கலைஞர் தலைமையில் இன்று (25.03.2013) காலை துவங்கியது. பொதுச்செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன், பொருளாளர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர்.

எனக்கு உடல்நிலை சரியில்லை: செயற்குழு கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை: மதுரையில் மு.க.அழகிரி பேட்டி
 கடந்த மூன்று மாத காலமாக சென்னையில் தங்கியிருந்த முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி, இன்று (25.03.2013)
Australia 1st innings india won by 6 wickets

பிரபாகரனின் மனைவி மதிவதனி, மகள் துவாரகா எங்கே? – சரத் பொன்சேகா புதிய தகவல்

மகிந்த, கோத்தா, 14 இராணுவ அதிகாரிகள் போர்க்குற்ற விசாரணையை எதிர்கொள்வர் – இந்திய பாதுகாப்பு ஆய்வாளர்கள்

கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்றின் புதுடெல்லி சிறப்பச் செய்தியாளரான, வெங்கட் நாராயண் இதுகுறித்து எழுதியுள்ளதாவது-போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பாக எந்தவொரு நம்பகமான

சென்னையில் உள்ள தமது துணைத் தூதரகத்தை மூடுவது குறித்து சிறிலங்கா அரசாங்கம் ஆலோசித்து வருவதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

சென்னையில் உள்ள துணைத் தூதரகத்தின பாதுகாப்பு ஆலோசகரான மூத்த காவல்துறை கண்காணிப்பாளர் றொகான் டயஸ் கொழும்புக்குத் திருப்பி அழைக்கப்பட்டதை அடுத்தே இது

தன்னுடன் சேர்ந்து மனைவி, பிள்ளைகளை ஆபாச படத்தை பார்வையிட கூறிய தந்தை கைது

ஆபாசத் திரைப்படங்களை தன்னுடன் சேர்ந்து பார்வையிடுமாறு மனைவி மற்றும் பிள்ளைகளை வற்புறுத்தி வந்த தந்தை ஒருவரை பொலிஸார் கைது செய்த சம்பவம் காலி மாவட்டத்தில் ஹபராதுவ மீபே பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

கொழும்பு செட்டியார் தெரு பகுதியிலுள்ள தங்காபரண விற்பனை நிலையத்திலிருந்து தங்க பிஸ்கட்டுகளை திருடியதாக கூறப்படும் சந்தேகநபர் கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.கொட்டாஞ்சேனை பகுதியைச் சேர்ந்த குறித்த சந்தேகநபர் இந்தியா நோக்கி பயணிக்க இருந்த சந்தர்ப்பத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்புக்கு புறநகரான கொட்டாவை – ஹைலெவல் வீதியில் உள்ள கிறிஸ்தவ பெந்தகோஸ் சபையின் பிரார்த்தனை மண்டபம் ஒன்றினுள் நுழைந்த பௌத்த பிக்குகளின் குழு ஒன்று அங்கு தாக்குதலை நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனைத் தொடர்ந்து குறித்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டிருந்தது. பிரதேச மக்களின் உதவியுடன் குறித்த பிக்குகள் குழு அந்த சபையினை சுற்றி வளைத்தனர்.

24 மார்., 2013

காணாமற்போனோர் தொடர்பில் 3,000 முறைப்பாடுகள் ஜெனிவாவில் சமர்ப்பிப்பு
காணாமற்போனவர்கள் தொடர்பில் எமது அமைப்பிடம் பதிவு செய்யப்பட்ட 5 ஆயிரம் பேர் தொடர்பான முறைப்பாட்டில் 3 ஆயிரம் பேரின் முறைப்பாடுகள் ஜெனிவாவில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
நீண்ட காலமாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவராக இருந்து வரும் சோமவங்சவை அப்பதவியிலிருந்து நீக்கிவிட்டு புதிய ஒருவரை அப்பதவியில் அமர்த்துவதற்கான நடவடிக்கைகளை மக்கள் விடுதலை முன்னணி மேற்கொண்டுவருவதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மக்கள் விடுதலை முன்னணியின் புதிய தலைவர் ஒருவரை நியமிப்பது தொடர்பான கலந்துரையாடல்களும் விவாதங்களும் தற்பொழுது கட்சியின் உயர்பீடத்தில் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

கனிமொழி பொதுக்கூட்டம் திடீர் ரத்து
திண்டிவனத்தில் நேற்று மாலை தி.மு.க. கலை இலக்கிய பேரவை சார்பில் பொதுக்கூட்டம், மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு

கருணா அரசுடன் இணைந்து தகவல் தந்திராவிடில் யுத்தத்தில் வென்றிருக்க முடியாது!- அமைச்சர் ராஜித
கருணா தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திலிருந்து பிரிந்து ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையிலான அரசில் இணைந்திராவிடில் யுத்தத்தில் வெற்றி பெற்றிருக்க முடியாது என கடற்றொழில் நீரியல் வள அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றை நடாத்துமாறு இலங்கைக்கு சர்வதேச நாடுகள் அழுத்தம்
சர்வஜன வாக்கெடுப்பு நடாத்துமாறு இலங்கைக்கு சர்வதேச நாடுகள் அழுத்தம் கொடுக்கத் திட்டமிட்டுள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இலங்கை மக்கள் முன்னோக்கி செல்ல, போர்க்குற்ற விசாரணைகள் அவசியம்!- பிரித்தானிய வெளியுறவு அமைச்சர்
இலங்கை மீது சுமத்தப்பட்டுள்ள போர்க்குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் உரிய விசாரணைகள் நடத்தப்படும் வரை இலங்கைக்கு சர்வதேசத்துடன் முன்னோக்கிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வாய்ப்பில்லை என்று பிரித்தானியா அறிவித்துள்ளது.

இலங்கை அரசை கண்டித்து, சென்னையில் ஏப்ரல் 2ல் நடிகர்-நடிகைகள் உண்ணாவிரதம்!
இலங்கை அரசுக்கு எதிராக தென்னிந்திய நடிகர் சங்கத்தின் சார்பில் அடுத்த மாதம் (ஏப்ரல்) 2-ந்தேதி உண்ணாவிரத போராட்டம் நடைபெறுகிறது. காலை 9 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெறும் இந்த உண்ணாவிரத போராட்டத்தில், ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்பட அனைத்து நடிகர்-நடிகைகளும்

சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்கள் என்று இலங்கை அரசால் ஜெனிவாவுக்குத் தெரியப்படுத்தப்பட்டுள்ள காணாமல்போன 37 பேரின் பெயர் விவரங்கள் வருமாறு:
வைகுந்தகுமார் வைகுந்தராசன் (கொடிகாமம் 840744604V), பரிமேலழகர் கந்தசாமி (மந்துவில் 771014020V), ராஜ்குமார் ராமச்சந்திரன் (கொடிகாமம் 821652928V), பார்த்தீபன் பொன்னம்பலம் (மந்துவில் 841964349V), சிவானந்தன் செல்வரட்ணம் (மந்துவில் NA 565027), ரசிகரன் சோமலிங்கம் (வல்வெட்டித்துறை 840165361V), ஸ்டீபன் ஜயசிங்க (மதவாச்சி 662451479V), புஸ்பகாந்தன் மார்க்கண்டு (மந்துவில் 801202233V), கணேஸ் சுவேந்திரன் (கரணவாய் வடக்கு 838584134V), சுப்பிரமணியம் புஸ்பதீபன் (வல்வெட்டித்துறை  810261560ங), பேரின்பராசா நடராசா (வவுனியா  730174071V), நிசாந்தன் அபிராஜ் (வவுனியா), சற்குணராஜன் ஆனந்தராஜா (வவுனியா  850782555V), சிவபாலன் கதிரேசன் (தெஹிவளை 651451577V), மோகன் நாகரத்தினம் (மந்துவில் 00809), மகிந்தன் பூபாலசிங்கம் (வடலியடைப்பு 820404440V), சுதாகரன் ராசலிங்கம் (வவுனியா 820871111V), தேவராசா ராஜேந்திரம் (மந்துவில் 713503770V), சிவசக்தி சபாபதிப்பிள்ளை (வவனியா 572353508V), சுதாகரன் சக்திவேல் (வவுனியா), சதீஸ் செல்வராசா (சாவகச்சேரி 861312372V), துரைசிங்கம் சின்னத்துரை (வவுனியா  582883860ங), தங்கராசா சிவசுப்பிரமணியம் (யாழ்ப்பாணம் 593321916V), துரைசிங்கம் சோமசுந்தரம் (வவுனியா 592181860V), பற்குணானந்தன் சுகிதன் (யாழ்ப்பாணம்), உதயகுமார் சுப்பையா (வவுனியா), குமாரசிங்கம் தர்சிகன் (மந்துவில் 880400126V), தில்லைராஜன் தில்லையம்பலம் (வாரிக்குட்டியூர்), வாணகாந்தன் வர்ணகுலசிங்கம் (சாவகச்சேரி 853432911V), சதீஸ்வரன் யோகராசா (வவுனியா 812591258V), சிவச்சந்திரன் சுப்பிரமணியம் (பெரியபோரதீவு 790650271V), முகுந்தன் சிவஞானன் இரத்தினம் (கரவெட்டி 760110612V), இராஜேந்திரன் சேகர் (வவுனியா 760143430V), தங்கராசா ரகு (வவுனியா 742372863V), உமாகாந்தன் நாகராசா (வவுனியா  740291068V), கோவிந்தராசா கிருபாகரன் (பருத்தித்துறை 851123938V), உதயகுமார் முருகமூர்த்தி (பழுகாமம் 792074537V),
இவர்கள் தொடர்பில் இலங்கை அரசு கூறிய தகவல்களை உறுதிப்படுத்திக் கொள்ள உறவினர்கள் எம்முடன் தொடர்பு கொண்டு தகவல்களை வழங்க வேண்டும் என்றும் மகேந்திரன் கேட்டுக்கொண்டார்.

Comments

இந்தியாவின் நலன் கருதி தமிழர் பிரச்னைக்கு இலங்கை தீர்வு காண வேண்டும் என தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன் கூறியுள்ளார். மேலும் அவர், இலங்கை நமது நட்பு நாடாக இருக்க வேண்டும் என்பதே இந்தியாவின் விருப்பம். இலங்கையில் தமிழர்களுக்கு சுய நிர்ணய உரிமை, சுதந்திரமாக செயல்படும் உரிமை, நம்பிக்கையுடன் ஒருங்கிணைந்த இலங்கையில் வாழ்வதை உறுதி செய்ய வேண்டும் என கூறினார்.

அடுத்த ஜனாதிபதி தேர்தலில் சந்திரிகா போட்டியிட தீர்மானம்!
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவைச் சந்தித்துள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கியஸ்தர்கள் பலர் பலமிக்க மாற்று அரசியல் சக்தி ஒன்றினை

தமிழ் நாட்டை தமிழன் ஆண்டால் ஈழத்தமிழனுக்கு தீர்வு ஜெனிவாவில் சீமான் முளக்கம்தமிழ் நாட்டை தமிழன் ஆளத் தவறியதன் விளைவே ஈழத் தமிழன் ஏதிலிகளாக அலைவதற்கு காரணம் எதிர்வரும் காலங்களில் இவ்வாரான தவறுகளைக் களைந்து தமிழ் நாட்டை தமிழன் ஆண்டு தனி ஈழம் அமைப்பது உறுதி
என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கினைப்பாளர் சீமான் ஜெனிவா நகரில் ஏற்பாடு செய்த நிகழ்வில் கலந்து சிறப்புரையாற்றுகையில் தெரிவித்தார்

காணாமற் போனோர் 37 பேரின் விபரங்கள் வெளியிட்டுள்ள நிலையில் செய்வதறியாது உறவுகள் அங்கலாய்ப்பு
வடக்கில் காணாமற் போன தமிழர்கள் 37 பேர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக 5 மாதங்களுக்கு முன்னர் இலங்கை அரசு ஜெனிவாவுக்கு அறிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியதையடுத்து, காணாமற் போனோரது ஏனையோரின் உறவினர்கள் பலர் தமது உறவுகள்

டென்மார்க், ஜேர்மனி மக்களோடு கலந்துரையாட சுவிஸிலிருந்து சீமான் பயணம்
நேற்று மாலை ஜநா முன்றலில் பல தமிழ் இன அழிப்பிற்கு நீதி கேட்டு இளையோர் அமைப்பு சுவிஸ் கிளையின் ஏற்பாடு செய்யப்பட்ட மாபெரும் ஒன்று கூடல் நிகழ்வில் கலந்துகொண்ட

ராமேசுவரம் கலவரத்தில் 62 பேர் கைது – தாசில்தார் அலுவலகத்தில் பெண்கள் இன்று முற்றுகை

வேண்டாம் தமிழின உணர்வாஈழம் வேண்டி எதிராஜ் கல்லூரி மாணவி தற்க்கொலை ..?
கௌதமி என்கிற ராசாத்தி ஈழ விடுதலை வேண்டி நஞ்சு அருந்தி தற்க்கொலை செய்து கொண்டுள்ளதாக தகவல் .அதை அறிந்த காவல்துறை அந்த பெண்ணின் உடலை உடனடியாக இன்று மாலையே அடக்கம் செய்ய வற்புறுத்தியதாகவும் அதன் பின்னர் உணர்வாளர்கள் தமிழ் பிள்ளைகள் அந்த இடத்துக்கு விரைந்து சென்றதாகவும் தகவல் மேலதிக விபரங்கள் கிடைக்கவில்லை ..தெரியும் பட்சத்தில் அறிவிக்கின்றோம் 536295_571994606152889_216623272_n

வேண்டாம் தமிழின உணர்வாளர்களே வேண்டாம் ! இத்தோடு நிறுத்திக் கொள்ளுங்கள் ! இதுவே

Australia 262
India 266/8 (68.1 ov)
India lead by 4 runs with 2 wickets remaining in the 1st innings

எந்த நேரத்திலும் காங்கிரஸ் கூட்டணி கவிழும்: நாடாளுமன்றத்திற்கு தேர்தல் வரும்: வெங்கையா நாயுடு
ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு எந்த நேரத்திலும் கவிழலாம் என்பதால், வரும் அக்டோபர் அல்லது நவம்பரில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற வாய்ப்பு உள்ளது என்று பாஜக மூத்த தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.

23 மார்., 2013

Australia 262
India 218/6 (55.4 ov)
India trail by 44 runs with 4 wickets remaining in the 1st innings

             க்கிய முற்போக்கு கூட்டணி அரசிலிருந்து தி.மு.க. முறித்துக்கொண்ட தினத்தன்று தி.மு.க. தொண்டர்கள் மத்தியில் நிலவிய மகிழ்ச்சியையும் கொண்டாட்டத்தையும் பார்த்தபோது அது ஏதோ ஒரு தேர்தல் வெற்றிக்கொண்டாட்டத்தைப் பார்ப்பதுபோல் இருந்தது. மத்தியில் அதிகாரத்திலிருந்து விலகுவது குறித்து அதன் கட்சித் தொண்டர்கள் ஏன் இவ்வளவு மகிழ்ச்சி அடைய வேண்டும்? இந்தக் கொண்டாட்டம் தி.மு.க. தலைமை செல்லவேண்டிய பாதையை சுட்டிக்காட்டுவதாகவே கருதுகிறேன். 

           தொண்டையில் சிக்கிய முள் அகற்றப்பட்ட உணர்வுடன் உரக்கப் பேசும் தி.மு.க தொண்டர்கள், ""காங்கிரஸ் கூட்டணி யிலிருந்து தி.மு.க வெளியேறப் போவதை முதன்முதலில்  சொன்னது நக்கீரன்தான். கலைஞர்  எடுத்திருக்கும் இந்த முடிவு

         ""ஹலோ தலை வரே... தமிழக அரசின் பட்ஜெட் எப்படி?''

""நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வாசிச்சதை டி.வி.யில  பார்த்தேம்ப்பா.. அம்மா.. அம்மாங்கிற வார்த்தைக்கு நடுவுல  சில அறிவிப்புகளை அவர் அறி விச்சதை கவனிச்சேம்ப்பா.. சொல்லிக்கொடுத்தது போல ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.க்கள் மேஜையை தட்டித் தட்டி

          .நா.மனித உரிமை கவுன்சிலில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம் நிறை வேறியிருக்கிறது. நிறைவேறிய தீர்மானத்தால் ஈழத் தமிழர்களுக்கு ஒரு அங்குல நன்மையும் ஏற்பட வாய்ப்பே இல்லை என்கிற துயரம் ஒரு புறமிருக்க... இதில் இந்திய அரசு ஆடிய ஆட்டம் தான் துரோகத்தின்

          ந்திராகாந்தி காலத்தில், காங்கிரஸை தி.மு.க. எதிர்த்தபோது, அதன் விளைவாக உடனடியாகவே ஆட்சிக் கலைப்பு, மிசாக் கொடுமை போன்ற சோதனைகளை தி.மு.க எதிர்கொள்ள நேர்ந்தது

ஈழத்தமிழருக்காக சென்னையில் நடந்த பட்டினிப் போராட்டத்தில் தலைவர்களின் (பழ.நெடுமாறன், வைகோ, நடிகர்கள் மன்சூரலிகான் ராதாரவி) காணொளி காட்சிகள் 

ஈழத்தமிழருக்காக சென்னையில் ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டு இன்று பட்டினிப் போராட்டம் நடைபெற்றது.

ராஜபக்சவைக் காப்பாற்ற தீர்மானத்தைத் திருத்தியது யார்? திருச்சி சிவா சொல்லும் இரகசிய தகவல்
[ விகடன் ]
காங்கிரஸ் கட்சியோடு உறவு முறிந்தது என்று, கருணாநிதி அறிவித்தவுடன் அறிவாலயத்தில் கூடியிருந்த உடன்பிறப்புகள் உற்சாகத்தில் துள்ளிக் குதித்தனர். 'காங்கிரஸ் ஒழிக; சோனியா ஒழிக’ என்ற

தமிழீழ பொதுவாக்கெடுப்பிற்கு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றவும்: ஜெயலலிதாவிடம் வைகோ வேண்டுகோள்
இலங்கையில் சுதந்திரமான பன்னாட்டு விசாரணைக்கும், தமிழ் ஈழத்திற்கான பொது வாக்கெடுப்பிற்கும் தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என

இலங்கை மீது பொருளாதார தடை விதிக்கும் நோக்கம் அமெரிக்காவுக்கு இல்லை என இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் மைக்கேல் ஜெ.சிசன் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் சமாதானத்தை வலியுறுத்தியும் மனித உரிமைகளை பாதுகாக்கும் நோக்கிலுமே ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்பட்ட தீ

பொதுமக்கள் படுகொலை குறித்து விசாரணை மேற்கொள்ளாவிடில் அடுத்த நடவடிக்கை! இலங்கையை எச்சரிக்கிறது அமெரிக்கா
விடுதலைப் புலிகளுக்கு எதிராக இறுதிப்போரின் போது, அரசபடையினரால் 40 ஆயிரம் பொதுமக்கள் கொல்லப்பட்டது குறித்த விசாரணைகளை மேற்கொள்ளும்படி, இலங்கையிடம் அமெரிக்கா மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
தமிழ் இன அழிப்புக்கு நீதி கேட்டும்,எமக்காக குரலெழுப்பும் தமிழ்நாட்டு மாணவர்களின் எழுச்சிப் போராட்டங்களுக்கு அதரவு தெரிவிக்க ஐ . நா முன்றலில் பெரும் தொகையான மக்கள் கூடியிருந்தனர். தமிழீழ விடியலுக்காய் போராடிவரும் தன் மான தமிழன் சீமான்  சிறப்புரையாற்றினார் .http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-seemaninjenebapeechchu%20(5).jpg
அவுஸ்திரேலிய அணி திணறல்: அஷ்வின், ஜடேஜா அசத்தல்
[
இந்தியாவுக்கெதிரான நான்காவது டெஸ்டில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்த அவுஸ்திரேலிய அணி திணறல் ஆட்டத்தை வெளிப்படுத்தியது.
திருமண வாழ்க்கைக்கு தகுதியில்லாதவர் பாடகர் ராஜேஷ் கிருஷ்ணன்: மனைவி குற்றச்சாட்டு
தமிழில் ‘வட்டாரம்‘ உள்ளிட்ட சில படங்களில் பாடிய பிரபல சினிமா பின்னணி பாடகர் ராஜேஷ் கிருஷ்ணன்.
கன்னட திரையுலகில் முன்னணி பாடகராக உள்ள இவர் தெலுங்கிலும் சில பாடல்களை பாடி உள்ளார்.
மூவாயிரம் பாடல்களுக்கு மேல் பாடி இவர் கர்நாடக அரசிடம் சிறந்த பாடகருக்கான நந்தி விருது பெற்றுள்ளார்.
ராஜேஷ் கிருஷ்ணாவுக்கும் கன்னட பாடகி ரம்யாவுக்கும் கடந்த 2011 நவம்பரில் கொல்லூர் முகாம்பிகை கோவிலில் திருமணம் நடைபெற்றது. ராஜேஷ் கிருஷ்ணா ஏற்கனவே இரண்டு தடவை திருமணம் செய்து விவாகரத்து ஆனவர்.
மூன்றாவதாக ரம்யாவை மணந்தார். இவர்கள் திருமண வாழ்க்கையும் ஒரு வருடத்தில் முறிந்தது. கடந்த சில மாதங்களாக இருவரும் பிரிந்து தனித்தனியாக வாழ்ந்தனர்.
இந்த நிலையில் ரம்யா நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு தொடர்ந்துள்ளார். ராஜேஷ் கண்ணா திருமண வாழ்க்கைக்கு பொருத்தமில்லாதவர். மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் அவர் பலகீனமாக இருக்கிறார் என்று ரம்யா குற்றம் சாட்டி உள்ளார்.

இன்று மாலை ஜநா முன்றலில் பல தமிழ் இன அழிப்பிற்கு நீதி கேட்டு இளையோர் அமைப்பு சுவிஸ் கிளையின் ஏற்பாடு செய்யப்பட்ட மாபெரும் ஒன்று கூடல் நிகழ்வு 2:30 மணியளவில் நிகழ்வு ஆரம்பமானது.

இந்நிகழ்வில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழ் சீமான் சட்டத்தரணி தடா சந்திரசேகரன் மற்றும் கட்சி செயற்பாட்டாளர் கிருஸ்ணா ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர். ஆரம்ப நிகழ்வாக தமிழீழழ தேசியக் கொடியினை சுவிஸ் இளையோர் அமைப்பின் ஒருங்கினைப்பாளர் துவாரகன் ஏற்றிவைத்து அகவணக்கம் செய்யப்பட்டது.

சுடரேற்றலும் அதனை தொடர்ந்து முருகதாசன் திடலில் தமிழீழ மண் மீட்பு போரில் தம் உயிர்களை தியாகம் செய்த மாவீரர்கள் பொது மக்கள் மற்றும் தமிழ் நாட்டில் ஈழவிடுதலைக்காக தம் உடலில் தீ மூட்டியவர்களையும் நினைந்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கினைப்பாளர் சீமான் மற்றும் சட்டத்தரணி தடா சந்திரசேகரன் ஈகைச்சுடர் ஏற்றி மலர் வணக்கம் செய்து உணர்வு நிறைந்த நினைவுகளுடன் நிகழ்வு ஆரம்பமானது.

22 மார்., 2013

திருப்பதி : இலவச தரிசன பக்தர்கள் இனி கூண்டுக்குள் காத்திருக்க வேண்டியதில்லை

திருமலையில் தரிசன முறை பற்றிய ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்தில் வைகுண்டம் கியூ காம்ப்ளக்ஸ்-1 மற்றும் 2-ல் பணியாற்றும் அலுவலர்கள், ஊழியர்கள், பாதுகாப்புத்துறை ஊழியர்கள், கண்காணிப்பாளர்கள், உதவி கண்காணிப்பாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

கோவில் துணை அதிகாரி சின்னம்காரி ரமணா கலந்து கொண்டு பேசியதாவது:- 

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆர்ஜித சேவை டிக்கெட், வி.வி.ஐ.பி., வி.ஐ.பி. பிரிவுகளில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். அவர்கள் சாமி

இத்தாலி வீரர்கள் இன்று இந்தியா திரும்பினர்

இந்திய மீனவர்களை சுட்டுக் கொன்ற வழக்கில் கைது செய்யப்பட்ட இத்தாலி கடற்படை வீரர்கள் இரண்டு பேர், பரோலில் தங்க

இது ஒரு தமிழனின் வார்த்தை அல்ல கண்ணீர்...!

காங்கிரஸ் ஆட்சியாளர்களே...., 

உனக்கு உன் கட்சியை நடத்த தமிழனின் வரிப்பணம் தேவை,

ஊழல்கள் செய்ய தமிழனின் வரிப்பணம் தேவை ,

உன் மனைவி, மக்கள் ஆடம்பரமாய் திரிய தமிழனின் வரிப்பணம் தேவை, 

உம்மை முன்னேற்ற இரவு, பகல் பாராது எங்கள் உழைப்பு தேவை.

பாகிஸ்தான், சீனா எல்லைப்பகுதிகளில் தேசத்தை காப்பாற்ற தமிழ் ராணுவ வீரர்களின் உயிர் தேவை...

அணுகுண்டு ஏவுகணைகள் என்று தயாரித்து தேசத்தை வல்லரசாக்க தமிழர்களின் மூளை தேவை. 

உலகமெங்கும் சென்று உழைத்து தேசத்தில் முதலீடு செய்து தேசத்தை வளமாக்க தமிழனின் உழைப்பு தேவை.

தேசம் காக்க ராணுவத்திற்கு ஆயுதங்கள் வாங்க தமிழனின் வரிப்பணம் தேவை,

ஆனால், எனக்கும் என் இன மக்களுக்கும் ஏதாவது ஆபத்து என்று கூறினால், என் எதிரியுடன் சேர்ந்து என் வரிப்பணத்தில் வாங்கப்பட்ட ஆயுதங்களை கொண்டே எனக்கும் என் இனத்திற்கும் குழி பறிப்பீர்......

கடலில் மீன்பிடிக்க செல்லும் எம் மக்களை கொல்லுவான் ... அவனுடன் நீங்கள் விருந்து கொண்டாடுவீர்கள்.... 

அதை நாங்கள் பார்த்து கொண்டிருக்க வேண்டுமா!!

ஒவ்வொரு அறிக்கையிலும் திருக்குறளை எடுத்துக்காட்டாக மேற்கோள் காட்டி, "நான் தமிழன் நான் தமிழன்" என்று தமிழனை ஏமாற்றி என் தமிழினத்தையே காட்டி கொடுத்தாயே....

இனி யாராவது தமிழ்நாட்டில் காங்கிரஸ் என்று கூறட்டும், அவர்களுக்கு கிடைக்கப் போகிற மரியாதையே வேறு....

VIA;சற்றுமுன் செய்திகள்; மாணவர் பிரதீப் கேபி

தமிழீழம் கோரி ஆயிரக்கணக்கான ஈழத் தமிழர்கள் உண்ணாவிரதப் போராட்டம்!

தமிழீழத் தனியரசுக்கான பொதுவாக்கெடுப்பு நடத்தக் கோரி ஆயிரக்கணக்கான ஈழத் தமிழர்கள் சென்னையில் ஒருநாள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இலங்கையில் நிகழ்த்தப்பட்ட திட்டமிட்ட ஒரு இனப்படுகொலை.. இலங்கை அரசின் படுகொலைகளை போர்க் குற்றமாக பிரகடனப்படுத்த வேண்டும்… தமிழீழத் தனியரசுக்கான பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 10 நாட்களாக தமிழகத்தில் மாணவர்கள் பெரும் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

இந்த மாணவர்கள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தும் தமிழீழத் தனியரசுக்கான பொதுவாக்கெடுப்பை உடனே நடத்தக் கோரியும் ஈழத் தமிழர்கள் ஆயிரக்கணக்கானோர் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே ஒருநாள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து பல அரசியல் கச்சி தலைவர்கள், மற்றும் தமிழ் உணர்வாளர்களும் கலந்து கொண்டனர்.

இதேபோல் சென்னை புழல் காவாங்கரையிலும் ஈழத் தமிழர்கள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழீழம் கோரி ஆயிரக்கணக்கான ஈழத் தமிழர்கள் உண்ணாவிரதப் போராட்டம்!
22.03.2013  

"உங்கள் காலை பிடித்து கேட்டுகொள்கிறோம் , உங்கள் கைகளில் எங்கள் கண்ணீரை விட்டு அழுது மன்றாடுகிறோம்"

--------

பொது நண்பர்களே நீங்கள் எந்த கட்சி விருப்பம் கொண்டும் இருந்து கொள்ளுங்கள் அல்லது எந்த இயக்கத்திலும் இருந்து கொள்ளுங்கள் .

மாணவர்களின் ஈழ விடுதலை போராட்டத்திற்கு, அவர்களோடு உடன் வரும் பொழுது ஈழம் விரும்பும் நபராக மட்டுமே வாருங்கள் . கட்சி அடையாளங்களை அப்படியே உங்களிற்குள் வைத்து கொள்ளுங்கள்.

உங்கள் கட்சி விருப்பத்தை மாணவர்களிடம், புதியவர்களிடம் காட்டி அதன் செல்வாக்கை அரசியல் அறியா புதியவர்களிடம் காட்ட நினைத்தீர்கள் என்றால் உங்களுக்கு கிடைப்பது ஏமாற்றமே .

மாணவர் போராட்டம் மாணவர் போராட்டமாகவே இருக்கட்டும் .
அது "அந்த கட்சி "மாணவர் போராட்டம் , "இந்த இயக்கம் " மாணவர் போராட்டம் என்று நமக்குள் நம்மை பிரித்து , அடையாள படுத்த நினைக்கும் யாரையும் முதலில் தூர விலக்கி வையுங்கள்.

போராட வேண்டிய காலமும் , சந்திக்க வேண்டிய களமும் அதிகம் உள்ளது .

ஈழம் வெல்லும் , ஈழம் தமிழர்களின் பூமி அதை இப்போதைக்கு உலகத்தின் அனைத்து உதவியோடு ஆக்கிரமித்து இருக்கும் இலங்கை அந்த மண்ணை விட்டு வெளியேறி அங்கே தமிழர்கள் சுய நிர்ணய உரிமை பெறும் நாள் , நாளைக்கு மறுநாள் நடந்து விட கூடியது அல்ல.

இங்கே நாம் அடிக்கும் ஒவ்வொரு அடியும் போராட்ட விடைகளும் , இந்தியாவை இலங்கையில் இருந்து பிரிக்கும் .

இந்தியா பிரிந்தால் மொத்த உலகம் இலங்கையை விட்டு பிரியும்.

பிரிந்தால் பொது வாக்கெடுப்பு என்ற முழக்கத்தை நாம் அழுத்தலாம் . அழுத்த வேண்டும் .

அப்போது ஈழம் வரும் . வந்தே தீரும் .

எனவே பொதுவான நண்பர்களே எங்களிற்கு உதவுங்கள் ஆனால் உங்கள் கட்சி சாயத்தை எங்கள் மீது பூச நினைக்காதீர்கள் உங்கள் காலை பிடித்து கேட்டுகொள்கிறோம் , உங்கள் கைகளில் எங்கள் கண்ணீரை விட்டு அழுது மன்றாடுகிறோம் எங்களை பிரித்து அரசியல் கூட்டத்திற்குள் எங்களை அமிழ்த்து விடாதீர்கள் அண்ணன்களே !

நாம் அனைவரும் சேர்ந்து தமிழரின் மானத்தை காப்போம் . வீழ்ந்தான் செத்தான் என்ற நிலையில் உள்ள தமிழனின் வாழ்வை , உரிமையை போராடி பெற்றான் என்று மாற்றுவோம் .

வாருங்கள் உன்னத நோக்கத்தோடு கை கொடுங்கள்.

ஆங்காங்கே உள்ள மாணவர்கள் வீறு கொண்டு எழுங்கள் .

உங்களிற்கு அடையாளம் முக்கியம் அல்ல போராட்டமே முக்கியம் .

via - Loyolahungerstrike

Photo

இடிந்தக்கரையில் பாலச்சந்திரனை நெஞ்சில் ஏந்தி ஆயிரக்கணக்கான மாணவர்கள் ஊர்வலமாக சென்று போராட்டத்தில் ஈடுபட்டனர்!

ஈழத் தமிழர்களுக்கு தனி ஈழம் வேண்டியும் அங்கெ நடைபெற்ற போர்க்குற்றங்களை விசாரணை செய்ய வேண்டியும் தமிழக மாணவாகளுக்கு துணையாக இடிந்தகரை பாடசாலைகளது மாணவ மாணவிகள் 1500 மேற்பட்டோர் பலசந்திரனது உரவப்படத்தை நெஞ்சில் ஏந்தி ஊர்வலமாக சென்று தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தியுள்ளார்கள். சிறுவர்கள் தொடக்கம் பெரிய மாணவர்கள் வரை இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இடிந்தக்கரையில் கூடங்குளம் அணுஉலைக்கு எதிரான பிரதான திடலில் அமைக்கப்பட்டுள்ள பாரிய பந்தல்வரை ஊர்வலமாக சென்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இலங்கைத் தமிழர்களுக்கு ஈழம் வேண்டும் – கோஷமிட்டப்படி தமிழகத்தில் வாலிபர் தீக்குளித்தார்! காணொளி இணைப்பு

ஈழத் தமிழருக்காக சென்னையில் தீக்குளித்த இளைஞர் மரணம்

ஈழத் தமிழர் பிரச்சனைக்கு தீர்வாக தமிழீழத் தனியரசு அமைக்க வலியுறுத்தி சென்னையில் நேற்று இரவு தீக்குளித்த இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சென்னை புறநகர் பகுதியான நெற்குன்றத்தில் நேற்று தமிழ் அமைப்புகளின் சார்பில் மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்து போராட்டம் நடத்தப்பட்டது. அந்தப் போராட்டத்தில் கலந்து கொண்ட விக்ரம் என்ற இளைஞர் திடீரென தம் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் பலத்த தீக்காயங்களுடன் விக்ரம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். அவரது உடலுக்கு அரசியல் கட்சிகள் மற்றும் தமிழ் இயக்கங்களின் தலைவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்

.

நாம் தமிழர் கட்சியினர் கைது
இலங்கை அரசை கண்டித்து இந்தியன் ஆயில் நிறுவனத்தை முற்றுகையிட முயன்ற நாம் தமிழர் கட்சியினர் கைது செய்யப்பட்டனர். சென்னை தண்டையார்பேட்டை இந்தியன் ஆயில் நிறுவனத்தை முற்றுகையிட முயன்ற 50 பேர் கைது செய்யப்பட்டனர்.

இலங்கை தமிழர்களுக்காக தீக்குளித்த
விக்ரம் உடலுக்கு அஞ்சலி

பாலச்சந்திரனின் ரத்த துளிகள்தான் எழுச்சிக்கு காரணம்! விக்ரம் உடலுக்கு அஞ்சலி செலுத்திய வைகோ பேட்டி!
21.03.2013 அன்று தமிழர் விடுதலை இயக்கம் சார்பில் சென்னை நெற்குன்றத்தில் பொதுக்கூட்டம் நடந்துள்ளது. அப்போது மேடையின் பின்புறத்தில் ஈழம் வாழ்க ஈழம் வாழ்க, இந்தியா ஒழிக இந்தியா ஒழிக என பலத்த சத்தத்துடன் குரல் கேட்டதை கண்டு

இலங்கை தொடர்பான தீர்மானத்திற்கு பரக் ஒபாமா வரவேற்பு
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கை தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட்டமையை அமெரிக்க ஜனாதிபதி பரக் ஒபாமா வரவேற்றுள்ளார்.

இலங்கை பிரச்சினை: மாணவர்கள் டெல்லியை முற்றுகையிட திட்டம்
இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக மாணவர்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தினார்கள். தமிழகம் முழுவதும் சாலை மறியல், ரெயில் மறியல் போராட்டங்கள், முழக்கங்கள், உண்ணாவிரத அறப்போராட்டம் மூலமும் தங்களது எதிர்ப்புகளை தெரிவித்தனர்.

ராஜபக்சேவை தூக்கிலிடு! 

பால்மணம் மாறா பிஞ்சுகள் போராட்டம்! 

மாணவர்களிடம் தொடங்கி சிறுவர்களிடம் பரவி தற்போது பிஞ்சுகள் கையில் எடுத்துள்ளனர் ராஜபக்சேவிற்கு எதிரான போரை.

சேலம் புதிய பேருந்து நிலையம் முன் உள்ள ஆட்டோ ஸ்டேண்டில் கையில் பதாதைகளுடன், நெஞ்சில் பாலச்சந்திரன் படத்தையும் தாங்கி 20க்கும் மேற்பட்டோர் போராட, ஊரே அவர்களை ஆச்சர்யத்துடன் வேடிக்கை பார்த்தது.

ஆம் அனைவரும் குழந்தைகள். பாலச்சந்திரனிற்கு மெழுகுவர்த்தி அஞ்சலி செலுத்திவிட்டு'ராஜபக்சே ஒழிக அவனை தூக்கிலிடுங்கள்' என முழக்கமிட்டனர். 

குழந்தைகள் ஒருங்கினைப்பாளர் சிறுவன் 'தோழன் தமிழமுதன்' நம்மிடம் பேசியபோது, "எங்களை மாதிரி சின்ன பைய்யனு கூட பார்க்காம எங்க பாலச்சந்திரன் அண்ணனை சுட்டு கொன்னு இருக்காங்க. ஆனா எங்க அண்ணன் சாகும் போது கூட வீரமா தான் இறந்து இருக்காரு. அவரு இந்த உயிரையே தரும் போது நாங்கலாம் சும்மா விளையாடிகிட்டேவா இருக்கிறது? 

நாங்களும் எதவாது செய்யனும்னு தான் இங்க வந்தோம். எங்க அண்ணனை கொன்றது, எங்க சொந்தகாரங்களை எல்லாம் கொன்னது அந்த ராஜபக்சேதான். ராஜபக்சேவை தூக்குல போடணும் அதுவரை நாங்களும் போராடுவோம்' என்றார் உணர்வுப்பூர்வமாய். அதன் பின் மீண்டும் முழக்கமிட தொடங்கினர்.

கைகளில் கருப்பு துணி கட்டி, கைகளை உயர்த்தி கழுத்து நரம்பு புடைக்க முழங்கிய இந்த பிஞ்சுகளின் வீர மொழியை பார்க்கும்போது, இன பகைவர்கள் வீழ்ந்து போகும் நாள் வெகு தொலைவில் இல்லை என்பதை காட்டுகிறது என்றனர் அங்கு கூடியிருந்த பொதுமக்கள்.

தஞ்சையில் 10,000 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்ற பேரணி ......
தஞ்சையில் 10,000 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்ற பேரணி ......

ஏன் படைத்தான் எமை?

கண் படைத்தா னேன் அழுவதற்கா 

கால் படைத்தா னதைத் தொழுவதற்கா 

மண் படைத்தான் கீழ் விழுவதற்கா 

மனம்படைத்தான் அஞ்சி ஒழிவதற்கா 

விண் படைத்தான் ஒளி வருவதற்கா 

வீசுந் தென்றல்உயிர் தருவதற்கா 

கண்கள் மின்னும் பெரு இடியிடித்தே 

கடும்புயலாய் எம்மை வருத்திடவா 

பூக்கள் செய்தானதைப் பறித்திடவா 

பூவித ழேன்கைகள் பிரித்திடவா 

..பூக்கள் வைத்தான்வண்டு குடித்திடவா 

போதை கொண்டேமலர் வருத்திடவா 

பாவை கொண்டாலெழில் பலிகொள்ளவா 

பருவ உடல்தினம் வதைசெய்யவா 

தேவை என்றாலின்பம் துய்த்திடவா 

தேடியதும் அதைத் தீயிடவா 

நாடு என்றால்அது நரகமதா 

நரபலி தானவர் அறநெறியா 

தேடு என்றால்ஒரு திரவியமா 

தீதுசெய்தே வரும் பாவங்களா 

அரசன் என்றால் அவன் அறிவுளனா 

.ஆளைக்கொல்லும் ஒரு எமன்மகனா 

சிரசு கொய்தே அவன் சிரிப்பதற்கா 

சேவை என்றாலுயிர் குடிப்பதுவா 

இனமழித்தால் அது இறைமை என்றா 

இரத்தம் பட்டே செம்மைஅடைந்திடுமா 

தினம்படுபொய் சொல்லத் திறமைஎன்றா 

திருகு தாளம் சன நாயகமா 

உலகமென்றால் அது உழலுவதா 

உயிர்கள் என்றால்ஆடும் ஊஞ்சல்களா 

கலகமென்றால் பெருங்காவியமா 

கண்களில் நீரிடல் அரசாங்கமா 

வெட்டுகிறான் எம்மை விரட்டுகிறான் 

வேடிக்கை பார்ப்பது விரிஉலகா 

கட்டுகிறான் கடல் வீசுகிறான் 

கையறு நிலைகொண்ட கவினுலகா 

எத்துணைநீசரை எதிர்த்து நின்றோம் 

எடுத்தடி வைத்தவர் திகைக்க வைத்தோம் 

நித்திலம்மீதினில்நேர்மைவெல்ல 

நெஞ்சினை முன்னே நிமிர்த்திவந்தோம் 

பூக்களைக் கொய்தனர் இடியிடிக்க 

புதுவிஷம் வைத்தனர் துடிதுடிக்க 

தீக்களை வைத்தனர் தெருமுழுக்க 

தீய்ந்தது ஈழம் தேம்பியழ 

ஒருவனை எதிர்த்தது உலகமெல்லாம்

ஒருநிரைசேர்ந்தது உண்மை கொல்ல 

பெருகி யதோ பேரவலமல்ல 

பேய்களின் பிடியின் ஆழங்களே 

இறந்தது ஈழ தமிழனல்ல 

இயற்கையின் தர்மதிருவுளமே 

எரிந்தது தீயில் ஊர்களல்ல 

இறையவன் கோவில் வாசல்களே

கவிஞர் கிரி காசன்
ஏன் படைத்தான் எமை?

கண் படைத்தா னேன் அழுவதற்கா 

கால் படைத்தா னதைத் தொழுவதற்கா

மண் படைத்தான் கீழ் விழுவதற்கா

மனம்படைத்தான் அஞ்சி ஒழிவதற்கா

விண் படைத்தான் ஒளி வருவதற்கா

வீசுந் தென்றல்உயிர் தருவதற்கா

கண்கள் மின்னும் பெரு இடியிடித்தே

கடும்புயலாய் எம்மை வருத்திடவா

மாணவர்களே, அடுத்தது என்ன, எப்படி?

புரட்சியைத் தொடங்குவது எளிது, ஆனால் தொடர்வது கடினம். ஒரு பெரும் புயலுக்கு நடுவே, ஒரு சின்ன அகல் விளக்கை அணையாமல் எடுத்துச் செல்லும் வித்தை போன்றது அது. அசாத்தியமானதல்ல என்றாலும் அசாதாரணமான சுய ஒழுக்கம், கட்டுப்பாடு அதிகம் தேவைப்படுகிறது.
இன்று போராட்டம் முடிந்து கலைந்த மாணவர்கள், செல்லும் வழியில் KFC கடையை நுங்கம் பாக்கத்தில் பார்த்து உள்ளே சென்று கடையை மூடச் சொல்லி முற்றுகையிட்டுள்ளனர். மணவர்களுக்கு எதிரியை அடையாளம் காட்டினால் போதும். காலையில் ப.சிதம்பரம் வீட்டிற்குள் அதிரடியாக நுழைந்து புலிக்கொடியை வைத்துவிட்டு வந்ததாகட்டும் KFC முற்றுகையாகட்டும் கலக்கி கொண்டுள்ளனர்.
புதிய தலைமுறையிலும் பிறகு கலைஞர் செய்திகளிலும் தொடர் நேரலையில் மனுஷ்ய புத்திரன் பேசிய சில அடிப்படைக் கருத்துக்கள்..
1. அமெரிக்க தீர்மானத்தை கிழித்தெறிந்துவிட்டுத்தான் அதைப்பற்றி இங்கே விவாதிக்க முடியும்.

2. இந்தத் தீர்மானத்தை இலங்கைக்கு எதிரான தீர்மானம் என்று ஊடகங்கள் அழைப்பதை நிறுத்த வேண்டும். 

3. கடைசிவரை மொளனமாக இருந்து, வாய் மொழி திருத்தம் என்றெல்லாம் பொய் சொல்லி இந்தியா மிக அருவருப்பான கபட நாடகத்தை ஆடியது

தூத்துக்குடி மாணவர்கள் 22.03.2013 நாளை போராட்டம் அறிவிப்பு 
மத்திய வருமான வரித்துறை அலுவலகம் முற்றுகை, தூத்துக்குடி மாவட்ட கல்லூரி மாணவர்கள் அனைவரும் கலந்துகொள்ள வேண்டும் , 
( தமிழ் ஈழ விடுதலைகாண மாணவர் கூட்டமைப்பு )
தூத்துக்குடி மாவட்டம்

இன்று நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பு..
இன்று நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பு..

இனி இந்தியாவுக்கு தமிழகத்தில்,தமிழகம் நமது நாடு,நமது தேசம் என்று உணர்கிற எவரும் வரிகட்ட தேவையில்லை.கட்டவேண்டாம்.இந்தியாவுக்கு சொந்தமான,இந்தியாவினை நினைவூட்டக்கூடிய இந்தியர்களின் சிலைகள்,சாதியை நினைவூட்டகூடியவர்களின் சிலைகள்,மதவாதத்தை நினைவூட்டக்கூடியவர்களின் சிலைகள் என்பன,குறிப்பாக,ராஜீவ்,காந்தி,போன்றோரின் சிலைகளை தமிழ்நாடெங்கிலும் அடித்துடைக்க வேண்டும்.

பன்னாட்டு நிறுவனங்களை முற்றுகையிட்டு தொழில் நிகழாவண்ணம் முடக்கவேண்டும்.நாங்களே எத்தனை நாளுக்குத்தான் சாபிடாமல்,தொண்டை தண்ணீர் வற்ற கத்துவது?அரசு திரும்பி பார்த்து,தமிழீழத்தை இந்தியா அங்கீகரிக்கிறது.உலக நாடுகள் அங்கீகரித்து,பொதுவாக்கேடுப்பை நடத்தவேண்டும் என சொல்கிற வரை நமது போராட்டத்தில் வேகம் அதிகரித்துக்கொண்டே போகவேண்டும்.

மாணவர்களுக்கு நிகராக,இல்லை,அதற்கும் மேலாக நேற்றைய போராட்டங்களில் மாணவிகளின்,எங்கள் பெண் புலிகளின் ஆதிக்கம் அதிகமாய் இருந்ததை பார்க்க முடிந்தது வாழ்த்துக்கள்.

வைகோவின் தாயார் தன் 91 வயதில் ஈழ விடியலுக்காக தற்போது உண்ணாநிலை போராட்டத்தில் இருக்கிறார்....

போராளிகளுக்கு உணவு பரிமாறிய அந்த அற்புத தாய்..தற்போது போராட்ட பந்தலில்....

புரட்சி பரவட்டும்....விடியல் கிடைக்கட்டும் !!!

ad

ad