""ஹலோ தலை வரே... தமிழக அரசின் பட்ஜெட் எப்படி?''
""நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வாசிச்சதை டி.வி.யில பார்த்தேம்ப்பா.. அம்மா.. அம்மாங்கிற வார்த்தைக்கு நடுவுல சில அறிவிப்புகளை அவர் அறி விச்சதை கவனிச்சேம்ப்பா.. சொல்லிக்கொடுத்தது போல ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.க்கள் மேஜையை தட்டித் தட்டி நிதியமைச்சரோட அறிவிப்பு களை கேட்கவிடாம செஞ் சிட்டாங்கப்பா..''
நக்கீரன்
""எம்.பி தேர்தலை மனதில் வைத்து வரி எதுவும் போடலை. ஆனா, மக்கள் நலனுக்காக புதுத்திட்டங்கள் எதுவுமே இல்லை. பழைய திட்டங்களை விரிவுபடுத் தும் அறிவிப்புகள் மட்டும் தான் இருக்குது. பொன்னி யின் செல்வின்னு பட்டம் சூட்டிக்கிட்ட ஜெ., காவிரி விவசாயிகளின் மேம் பாட்டுக்காக எந்த திட்டத் தையும் அறிவிக்கலை. தொழிலாளர்கள் நலன், தொழில்வாய்ப்புகள் பற்றியும் பட்ஜெட்டில் பெருசா எதுவுமில்லீங்க தலைவரே..''
""மத்திய அரசுக்கான ஆதரவை தி.மு.க. வாபஸ் வாங்கி, கூட்டணியிலிருந்து வெளியே வந்தது பற்றி ஜெ.வோட உண்மையான ரியாக்ஷன் என்னவாம்?''
""அ.தி.மு.க ஆதரவு நிலையில் இருக்கிற கட்சிகள், தி.மு.க.வின் முடிவை எப்படி பார்க்குதாம்?''
""வியாழக்கிழமை வரைக்கும் வைகோ எந்தக் கருத்தும் சொல்லலை. ம.தி.மு.க. பொதுக்குழு பிப்ரவரி 4-ந்தேதி நடந்ததும் பத்திரிகையாளர் களை சந்தித்த வைகோ, மத்திய அரசுக்கான ஆதரவைத் தி.மு.க. வாபஸ் வாங்கினால், கடந்த கால விஷயங்களை மறந்துடுவோம்னு சொல்லியிருந் தார். அவர் இதுவரைக்கும் கருத்து எதுவும் சொல்லலை. மும்பைத் தமி ழர்கள் புதன்கிழமையன்னைக்கு அங்குள்ள மைதானத்தில் பெருமளவில் திரண்டு, ஈழத்தமிழர்களுக்கு ஆதரவுக் குரல் கொடுத்தாங்க. அந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற வைகோ, பிரதமரையும் சோனியாவையும் கடுமையா விமர்சித்தார். ஆனால், கலைஞர் பற்றி எதுவும் சொல்லலை.''
""இடதுசாரிகள்?''
""சி.பி.எம்.மைப் பொறுத்தவரை, தமிழ்நாட்டு அரசியலை பொறுமையாகக் கவனித்து முடிவெடுப்போம்னு பொலிட்பீரோவில் முடிவு செய்திருக்காங்களாம். மாநிலச் செயலாளரான ஜி.ராம கிருஷ்ணன்கிட்டே மீடியாக்கள் கருத்து கேட்டப்ப, இப்பதானே தி.மு.க. வெளியே வந்திருக்கு, சில்லரை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு விவகாரத்தில் வெளியே வரலையேன்னு சொன்னாரு. இதற்கு கட்சிமேலிடம், அவசரப்பட்டு எதுவும் பேசவேண்டாம். கொஞ்சம் பொறுத்திருங்கன்னு ஜி.ரா.வுக்கு அட்வைஸ் பண்ணியிருக்குதாம்.''
""இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைப் பொறுத்தவரை தா.பா நிலை எப்பவுமே அ.தி.மு.க ஆதரவு நிலைதானே?''
""மதுரையில் நடந்த சி.பி.ஐ. மாநிலக் குழுவில், தி.மு.க.-அ.தி.மு.க. இரண்டிடமும் ஓப்பன் மைன்டுடன் இருக்கணும்னு முடிவெடுக் கப்பட்டிருக்காம். அதனால, தி.மு.க.வின் ஆதரவு வாபஸ் முடிவை வரவேற்பதா தா.பா. சொல்லி யிருக்காரு. அதே நேரத்தில், அவர் எதிர்பார்க் கும் ராஜ்யசபா சீட்டை ஜெ. இன்னும் கன் ஃபார்ம் பண்ணலை. அதுவும் கை நழுவிவிடக் கூடாதுங்கிறதால, பட்ஜெட் மீதான உரையில் ஆளுந்தரப்பை அமோகமா பாராட்டும்படி சி.பி.ஐ. சட்டமன்றக் கட்சித் தலை வருக்கு தா.பா. உத்தர விட்டிருக்காரு''
""கலைஞரின் முடிவு குறித்து வைகோ போல் பா.ம.க. ராமதாஸும் எதுவும் சொல்லவில்லை. தே.மு. தி.க.வின் நிலை என்ன?''
""இலங்கைப் பிரச் சினையில் காங்கிரஸை சமீப நாட்களா கண்டிக்காமல் மென்மையா இருந்த விஜய காந்த், அமெரிக்கத் தீர்மான விஷயத்தில் இந்தியாவின் நிலைப்பாட்டையும் காங்கிரசோட அணுகுமுறை யையும் கடுமையா கண்டிச் சிருந்தாரு. அவரும் தன் னோட கட்சி நிர்வாகிகள் கிட்டே தி.மு.க. எடுத்தது சரியான முடிவுன்னு சொல்றாராம். ரொம்ப நொந்து போயிருக்கிறவங்க தமிழக காங்கிரஸ் எம்.பி.க்கள்தான்.''
""வரும் எம்.பி. எலெக்சனில் எந்தப் பக்கம் சேருறதுன்னு தெரியாம இருக்காங்களே.''…
""தி.மு.க வாபஸ் வாங்குனதும், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனும் மத்திய அரசுக்கான ஆதரவை வாபஸ் வாங்கிட்டாரு. ஏற் கனவே மம்தாவோட கட்சியும் வெளியே போயிடிச்சி. இப்படிப் பட்ட நிலையில் மத்திய அரசு தாக்குப் பிடிக்குமாங்கிற கேள்வி பரவலா இருக்குதே?''
""ஆமாங்க தலைவரே.. … மெஜா ரிட்டிக்குத் தேவை 270 எம்.பி.க்கள். காங்கிரஸ் கூட்டணி யில் இருப்பவர்கள் 232 பேர்தான். சமாஜ் வாடி கட்சியின் 22 எம்.பி.க்களும் மாயா வதி கட்சியின் 21 எம்.பி.க்களும்தான் இப்ப மத்திய அரசுக்கு வெளியி லிருந்து ஆதரவு தந்து முட்டுக் கொடுத்துக்கிட்டிருக் காங்க. இந்த இரண்டு கட்சியில் ஒரு கட்சியின் ஆதரவு விலகினாலும் ஆட்சிக்கு ஆபத்துதான். அத னால, மம்தாவோட ஆதரவுக்கு மறுபடியும் காங்கிரஸ் தரப்பில் ஒரு மூவ் நடந்தது. ஆனா, மம்தா மறுத்துட்டாரு. காங்கிரசின் பேனி பிரசாத் வர்மா, சமாஜ்வாடி கட்சித்தலைவர் முலா யம்சிங் யாதவ்வை விமர்சித்த தால அந்தக் கட்சியினர் செம டென் ஷனா இருக் காங்க. வியாழக்கிழமை யன்னைக்கு சமாஜ்வாடி எம்.பிக்கள் கூட்டம் நடந்ததால மத்திய அரசு ரொம்ப டென்ஷனா இருந்தது.''
""மத்திய அரசு நித்ய கண்டம், பூரண ஆயுசுங்கிற நிலைமையில்தான் இருக்குன்னு சொல்லு.''
""டெல்லியில் உள்ள காங்கிரஸ் எம்.பி.க்களே, கலைஞரை காங்கிரஸ் தலைமை ரொம்ப சாஃப்டா ஹேண்டில் பண்ணி, தன் பக்கம் வச்சிருக்கணும்னு சொல்றாங்க. முலாயமும் மாயாவதியும் ஒரே மாநிலத்தில் உள்ள எதிர்எதிர் கட்சிகள். அவங்க இரண்டுபேரும் எத்தனை காலம் ஒற்றுமையா ஒரு கட்சியை ஆதரிப்பாங்கன்னு கேட்கும் டெல்லி காங்கிரஸ் எம்.பி.க்கள், மாயாவதி மூன்று ஜெயலலிதாவுக்கு சமமானவர். சுயவிருப்பத்தின் அடிப்படையில் ஆட்சியை ஆட்டி வைப்பார். அவரை சமாளிப்பது சோனியாவுக்கு ரொம்ப கஷ்டம். தி.மு.க. வெளியேறும் சூழலை ஏன் உருவாக்கினோம்னு சோனியாவும் ராகுலும் வருத்தப்படும் நிலை உருவாகும் பாருங்கன்னு சொல்றாங்க. இந்திய அரசியலை நீண்டகாலமா உற்றுக்கவனிக்கிற அரசியல் பார்வையாளர்களோ, 1991-ல் விடுதலைப்புலிகளுக்கு கலைஞர் ஆதரவு தந்தார்னு சொல்லி ஜெ.வுடன் சேர்ந்து காங்கிரஸ் தலைவர் ராஜீவ்காந்தி தமிழகத்தில் தி.மு.க அரசைக் கலைத்தார். இப்ப ஈழத்தமிழர் நலன் விஷயத்துக்காக தி.மு.க. தன்னுடைய ஆதரவை வாபஸ் வாங்கியதால் 2013-ல் மத்தியில் காங்கிரஸ் அரசு கவிழும் நிலை ஏற்பட்டிருக்குன்னு சொல்றாங்க.''
""காலச்சக்கரம் சுழன்றுகிட்டேதானே இருக்குது.''…
""தலைவரே.. 2ஜி விவகாரத்தில் பா.ஜ.க. ஆட்சியில் நடந்த முறை கேடுகள் தொடர்பா ஏர்டெல் சுனில் மிட்டலை ஏ-1ஆக சேர்க்கலாம்னு சி.பி.ஐ. விசாரணை அதிகாரிகளே சொல்லியும், பிரதமர் மன்மோகன்சிங்கின் அலு வலகம் சுனில் மிட்டல் மேலே நடவடிக்கை எடுக்க வேண்டாம்னு சி.பி.ஐ.யை அடக்கிவச்சதை நம்ம நக்கீரன்தான் தெளிவா எழுதியிருந்தது. ஆங்கில- வடஇந்திய மீடியாக்களே இந்தத் தகவலை பெரியள வில் வெளியிடாத நிலையில், தென்னிந்தியாவில் இந்த செய்தியை பெருசா வெளியிட்டது நம்ம நக்கீரன்தான். இப்ப அந்த சுனில் மிட்டல் மேலே எஃப்.ஐ.ஆர். போடப்பட்டிருப்பதோடு அவருக்கு சம்மனும் அனுப்பப்பட்டிருக்கு. கனிமொழியையும் இப்படித்தான் சம்மன் அனுப்பி கூப்பிட்டு அரெஸ்ட் செஞ்சாங்க. அதுபோல சுனில் மிட்டலுக்கும் நடக்குமான்னு டெல்லி வட்டாரத்தில் விசாரிச்சேங்க தலைவரே.. பிரதமர் அலுவலகத்தின் சப்போர்ட்டில் இருப்பவர் மேலே அந்தளவுக்கு வேகமான நடவடிக்கை இருக்காதுன்னு சொல் றாங்க.''
""இந்தியாவில் அரசியல் லாபியைவிட, தொழிலதிபர்கள் லாபி பலமானதாச்சே.. நீரா ராடியா மேலே இதுவரை கைவைக்க முடிய லையே…!''
""தமிழகத்தில் கூட்டுறவு சங்கத் தேர்தலை நடத்தி மொத்த இடங்களையும் பிடிச்சிடணும்னு ஆளுந்தரப்பு செய்கிற லாபி பற்றி நான் சொல்றேன். அ.தி.மு.க. மெம்பர்கள் மட்டுமே கூட்டுறவுத் தேர்தலில் ஓட்டுப் போடணும்னு ரகசிய உத்தரவு போடப்பட்டிருக்காம். உள்ளாட்சித் தேர்தல் மாதிரிதான் இதுவும் நடக்கும் என்பதால், கூட்டுறவுத் தேர்தலைப் புறக் கணிப்பதா தி.மு.க. அறிவித்திருக்கு. ஆனா, அந்தந்தப் பகுதியில் செல்வாக்கு உள்ள தி.மு.க.வினர் தனிப்பட்ட முறையில் களமிறங்க ரெடியா இருக்காங்க. மற்ற எதிர்க் கட்சிகளெல்லாம் இந்தத் தேர்தலில் போட்டியிடுவதா வேண்டாமான்னு ஆலோசனை பண்ணிக்கிட்டிருக்கு.''
லாஸ்ட் புல்லட்!
சங்கரராமன் கொலை வழக்கில் 3-வது குற்றவாளியாக இருந்து வந்த கதிரவனை சென்னை கே.கே.நகர் அருகே ஒரு கும்பல் காரை உடைத்து வெளியே இழுத்துப் போட்டு கொலை செய்தது.
2011 ஏப்ரல் 30 அன்று பூந்தமல்லி கோர்ட் வளாகத்தில் தாதா சென்ன கேசவன் மற்றும் வக்கீல் பகத்சிங்கை நில பஞ்சாயத்து தகராறில் கொன்றதில் கதிரவன் ரோல் பிரதானமாய் இருந்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்குப் பழிக்குப் பழியாக கதிரவன் கதை முடிக்கப்பட்டுள்ளது. சென்னகேசவனின் டீமை தற்போது லீட் செய்யும், வியாசர்பாடி தாதா ஆர்க்காடு சுரேஷ் மற்றும் கூட்டாளிகள் ஓட்டேரி ராஜேஷ், குட்கா நாகபூஷணம், மதுரை மாட்டுத்தாவணி சுந்தரம் உள்ளிட்ட 8 பேரை பிடித்து விசாரிக்கும் முடிவில் போலீஸ் இருக்க இந்த |