புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

23 மார்., 2013




          ந்திராகாந்தி காலத்தில், காங்கிரஸை தி.மு.க. எதிர்த்தபோது, அதன் விளைவாக உடனடியாகவே ஆட்சிக் கலைப்பு, மிசாக் கொடுமை போன்ற சோதனைகளை தி.மு.க எதிர்கொள்ள நேர்ந்தது. நக்கீரன் 

அதேபோல் இப்போது சோனியாகாந்தி காலத்தில், காங்கிரஸின் நடவடிக்கைகளை எதிர்த்து அதன் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இருந்து தி.மு.க. வெளியேறியதால், காங்கிரஸின் கோப நடவடிக்கைகள், எந்த நேரத்திலும் தி.மு.க.தரப்பின் மீது பாயலாம் என்ற எதிர்பார்ப்பு பரவலாக நிலவியது. எதிர்பார்த்தது போலவே, ராஜினாமா கடிதங்களை கொடுத்த மறுநாள் அதிகாலையிலேயே  சி.பி.ஐ. தி.மு.க.வின் நம்பிக்கை நட்சத்திரமான மு.க.ஸ்டாலின் பங்களா வாசலில் நின்றது.

அதன்பின் என்ன நடந்தது? நடந்ததன் பின்னணிதான் என்ன?


வழக்கம் போல அன்று காலை 6 மணிக்கு வீட்டை விட்டு ட்ராக் ஷூட்டில் வாக்கிங் கிளம்பினார் ஸ்டாலின். அவரோடு முன்னாள் சென்னை மேயர் மா.சு.வும் இருந்தார். அவர்கள் அருகில் இருக்கும் ஐ.ஐ.டி. மைதானத்தில் வாக் போய்க் கொண்டிருந்த நேரத்தில், சரியாக 6.15-க்கு ஒரு ஏ.எஸ்.பி., ஒரு டி.எஸ்.பி., மூன்று இன்ஸ்பெக்டர்கள் அடங்கிய சி.பி.ஐ. டீம், சித்தரஞ்சன் சாலையில் இருக்கும் ஸ்டாலின் பங்களா கேட்டைத் தட்டியது. சி.பி.ஐ. அதிகாரிகள் வந்திருக்கிறார்கள் என்றதுமே 2ஜி விவகாரமோ என இல்லத்தரப்பு அதிர்ந்தது. காரணம்,  கலைஞர் டி.வி. தொடர்பான வழக்கில் சிக்கிய தொழில் அதிபர் சாகித் பால்வா, ஸ்டாலினை சந்தித்தார் என்றும் அதனால், ஸ்டாலினுக்கு எதிரான நடவடிக்கை இருக்கும் என்ற பேச்சு இரண்டு வருடத்திற்கு முன்பே அடிபட்டது. எனினும் சுதாரித்துக்கொண்டு அவர்களுக்குக் கதவைத் திறந்தனர். தகவல் ஸ்டாலினுக்கும் பாஸ் ஆனது.

அவர் உடனடியாக கட்சியின் அமைப்புச் செயலாளரான பெ.கல்யாணசுந்தரத்துக்குத் தகவல் கொடுத்தார். அவர் ஸ்டாலின் வீட்டுக்கு வரும் போதே வழக்கறிஞர்களுக்குத் தகவல் கொடுக்க, அடுத்த கொஞ்ச நேரத்தில் வழக்கறிஞர்கள் அருண் கிரிராஜன், அரசகுமார் உள்ளிட்ட பலர் ஸ்டாலின் வீட்டில் ஆஜர் ஆகிவிட்டனர். அவர்களில் சிலர் ""யார் வீட்டுக்கு வந்திருக்கீங்க தெரியுமா?'' என்று சி.பி.ஐ. அதிகாரிகளிடம் கேட்க, ""யாராக இருந்தாலும் சட்டத்தின் முன் சமம்தான்'' என்றார்கள் சளைக்காத அதிகாரிகள். இந்த விசயம், உ.பி.க்கள் மத்தியில் தீயாய்ப் பரவ, பலரும் ஸ்டாலின் வீட்டை நோக்கிப் படையெடுக்க ஆரம்பித்தனர். துரைமுருகன், பொன்முடி, எ.வ.வேலு போன்றவர்களும் ஸ்டாலின் வீட்டுக்கு வந்துசேர்ந்தனர்.

இதற்குள் சி.பி.ஐ. டீம் வெளிநாட்டு கார் இறக்குமதி தொடர்பாகத்தான் வந்திருக்கிறது என்கிற தகவல் ஸ்டாலினுக்குச் சென்றது. உடனே வாக்கிங் முடித்து ஸ்டாலின் வர, முகப்பில் திரண்டிருந்த உ.பி.க்கள் "தளபதி ஸ்டாலின் வாழ்க! சோனியா ஒழிக! சோனியாவின் கைக்கூலியாய் வந்திருக்கும் சி.பி.ஐ.யே வெளியேறு!'’’என்றெல்லாம் கோஷம் எழுப்பினர். காத்திருந்த பத்திரிகையாளர்களிடம் ஸ்டாலின் ""நான் எந்த வழக்கிற்கும் ரெய்டிற்கும் பயப்படமாட்டேன். இது திட்டமிட்ட அரசியல் பழிவாங்கும் செயல். இதை சட்டப்படி சந்திப்பேன்''’என்று சொல்லிவிட்டு வீட்டிற்குள் நுழைந்தார். அவரிடம் வழக்கறிஞர்கள் ‘""நீங்க வந்து அந்த அதிகாரிகளிடம் பேசுங்க. அவங்க கிளம்பிடுவாங்க'' என்று சொல்ல, ஸ்டாலினோ ""நான் எதுக்கு அவங்கக்கிட்ட பேசணும்? கார் பத்தி விசாரிக்கணும்ன்னா அதன் டாக்குமெண்ட்டுகளை அலுவலகத்தில் போய் பார்த்துக்கொள்ளச் சொல்லுங்க. எக்காரணம் கொண்டும் யாரையும் வீட்டுக்குள் அனுமதிக்காதீங்க'' என்றார் கறாராய்.

இந்த நிலையில் சி.பி.ஐ. அதிகாரிகள், உதயநிதி ஸ்டாலி னைப் பார்க்கவேண்டும் என்று சொல்ல, அவர்கள் விசிட்டர்ஸ் ஹாலில் உட்காரவைக்கப்பட்டனர். அவர்கள் முன் வந்த உதயநிதி கொஞ்சம் நெர்வஸாகவே இருந்தார். அவரிடம் அதிகாரிகள் ‘""நீங்கள் வாங்கியிருக்கும் ஹம்மர் கார் விவகாரத்தில் மோசடி நடந்திருக்கிறது. அதுபற்றி விசாரிக்கத்தான் வந்திருக்கிறோம். கார் தொடர்பான ஆவணங்களை எடுங்கள்'' என்றனர். வழக்கறிஞர்களோ, ‘""அந்தக் காரின் செகண்ட் ஓனர்தான் உதய நிதி. நீங்கள் முதல் ஓனரைத்தான் விசாரிக்க வேண்டும்.  அப்படியே இவரை விசாரிக்கவேண்டுமென்றால் கார் வாங்கப்பட்ட முகவரியான ரெட்ஜெயண்ட் மூவீஸ் அலுவலகத்துக்குத்தான் நீங்கள் வந்திருக்க வேண்டும். நீங்கள் நேராக இங்கு வந்திருக்கக் கூடாது'' என்றனர் காட்டமாக. 

""சரி, அந்த ஹம்மர் காருக்கான ஆவணங்கள் எங்கே? காரையும் நாங்கள் பார்க்கவேண்டும்'' என்று அதிகாரிகள் கேட்க, ""பொதுவாக எந்த ஆவணத்தையும் நான் வீட்டில் வைக்கமாட்டேன். எல்லாம் ரெட் ஜெயண்ட் அலுவலகத்தில்தான் இருக்கிறது. காலை 10 மணிக்கு அலுவலகம் திறக்கப்படும். நீங்கள் அங்கு சென்றால் நீங்கள் கேட்கும் ஆவணங்கள் தரப்படும்'' என்றார் உதயநிதி. 

9.45-மணிக்கு சி.பி.ஐ. அதிகாரிகள் வெளியே வர, "சோனியாவின் கைக்கூலி சி.பி.ஐ.யே ஓடிப்போ' என்றபடி உ.பி.க்கள் அவர்களைத் துரத்த, மிரட்சியான அதிகாரிகள் காரில் ஓடிப்போய் ஏறினர். கார் மீது விழுந்த கற்கள் கண்ணாடியை உடைத்தன.

அங்கிருந்து உதயநிதியின் சினிமா அலுவலகமான ரெட் ஜெயண்ட் அலுவலகத்துக்கு சி.பி.ஐ. அதிகாரிகள் போக, கார் டாக்குமெண்ட்டு களை அங்கிருந்தவர்கள் எடுத்துக்கொடுத்தனர். அதேநேரம், டெல்லி நாடாளுமன்றத்தில் டி.ஆர்.பாலு, ""ஸ்டாலின் வீட்டில் ரெய்டா? நெருப்போடு விளை யாடுகிறீர்கள்'' என குரல் எழுப்பினார். சோனியாவும் அப்போது அங்கே இருந்தார். இது நாடாளு மன்றத்தை பரபரப்பாக்க, விசாரணை அதி காரிகளுக்கு போன் வந்தது. "ஓகே சார், ஓ.கே சார்'’என்றபடி அவசரமாகக் கிளம்பினர். ‘"ஹம்மர் காரைப் பார்க்கணும்ன்னு சொன்னீங்களே?'’என உதயநிதி ஆட்கள் கேட்க, ""அதெல்லாம் வேண்டாம். மேலேயிருந்து உத்தரவு வந்துவிட்டது கிளம்பறோம்'' என்றபடி புறப்பட்டு விட்டனர்.

இதேபோலவே ஸ்டாலின் நண்பரான ராஜாசங்கரின் தி.நகர் திருமூர்த்தித்தெரு வீட்டிற்குள்ளும் ஒரு சி.பி.ஐ. டீம் அதிகாலையில் நுழைந்திருந்தது. ராஜாசங்கரும் அப்போது வாக்கிங் போயிருந்தார். வீட்டில் இருந்த அவரது மகன் அர்ஜுனிடம் ’"எத்தனை வெளிநாட்டுக்கார்கள் வைத்திருக்கிறீர்கள்?'’ என்று கேட்க ‘""ஒரு கோடி மதிப்பிலான லக்ஸஸ் கார் ஒன்றும் 65 லட்சம் மதிப்பிலான இன்னொரு லக்ஸஸ் கார் ஒன்றும்தான் இருக்கிறது'' என்றார். அதன் ஆவணங்களைப் பார்த்த அதிகாரிகள், ஆவணங் களில் உள்ளபடி என்ஜி னின் நம்பர் இருக்கிறதா என்று பார்க்கவேண்டும் என்று காருக்குக் கீழ் குனிந்தனர். அவர்களால் சரியாக பார்க்க முடிய வில்லை. அர்ஜுனே ஒரு மெக்கானிக்கை வர வழைத்து என்ஜினின் சீஸ் எண்ணைக்காட்ட, ‘"ஓ.கே.சரியாகத்தான் இருக்கு'’ என்றபடி கிளம் பினர். அங்கும் கட்சிக் காரர்கள் திரண்டிருந்தனர். சோனியாவையும் சி.பி.ஐ. யையும் எதிர்த்து கோஷங் கள் எழுப்பினர்.


எதற்காக இந்த விசாரணை என்று ஸ்டாலின் நண்பர்கள் தரப்பில் விசாரித்தபோது ""இது பெரிய விசயமே இல்லை. இந்த விசாரணை வெளிநாட்டுக் கார்களை வாங்கி, இங்குள்ள வி.ஐ.பி.க்களுக்கு விற்கும் ஒரு மும்பை ஏஜெண்டை மையமாக்கிதான் நடந்திருக்கிறது. அவர் தான் இறக்குமதி  செய்த கார்களுக்கு உரிய டாக்ஸ் கட்டலை. அப்படிப்பட்ட கார்களை இந்தியா முழுக்க இருக்கும் வி.ஐ.பி.க்களுக்கு வித்திருக்கார். அந்த வகையில்தான் இப்போது இங்கு வந்திருக்கிறார்கள். ஏற்கனவே 2 கோடி மதிப்பிலான மஸிராட்டி காரை ஒரு ஏஜெண்டிடம்  ஒயிட் கேஷாகக் கொடுத்து வாங்கி, உதயநிதி பயன்படுத்திவந்தார் அந்த ஏஜெண்ட் மாட்டியதும், ரெவின்யூ இண்டலிஜென்ஸ் விசாரித்ததும், உடனே உதயநிதி தரப்பு அந்தக் காரை அவர்கள் அலு வலகத்தில் கொண்டுபோய் நிறுத்திவிட்டது. இன்றும் அந்த வண்டி அங்கேதான் நிற்கிறது'' என்றனர் விளக்கமாக.  

இந்த விவகாரம் டெல்லியிலும் பலத்த பரபரப்பு சூறாவளியை ஏற்படுத்தியதால் சங்கடமடைந்த நிதி அமைச்சர் ப.சி. ‘""இந்த ரெய்டு சரியல்ல'' என்றார். லேசில் வாய்திறக்காத பிரதமர் மன்மோகன்சிங்கோ ""ரெய்டு, பொருத்தமற்ற நேரத்தில் நடத்தப்பட்டிருக்கிறது'' என்றார்.

எதிர்க்கட்சிகள் அனைத்தும் காங்கிரஸின் செயல்பாட்டை கடுமையாக விமர்சித்தன. 

தி.மு.க. மேல்மட்டத் தரப்போ ‘""காங்கிரஸ் தன் பழிவாங் கும் நடவடிக்கையை  ஆரம்பித்துவிட்டது. அடுத்து கலைஞர் டி.வி.யை முடக்க முயற்சிக்கலாம். கனிமொழி மீது நடவடிக்கை எடுக்கலாம். மத்திய அமைச்சரவையில் இடம்பெற்ற அழகிரி உள்ளிட்ட ஐவரையும் குடையலாம். எல்லாவற்றையும் எதிர்பார்த்துதான் காத்திருக்கிறோம். எதையும் சமாளிக்கும் தெம்பு எங்களுக்கு உண்டு''’ என்கிறார்கள் அழுத்தமாகவே.

-நமது நிருபர்கள்

ad

ad