புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

25 மார்., 2013

சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று காலை 10.30 மணியளவில் தி.மு.க., அவசர செயற்குழு கூட்டம் தொடங்கியது. திமுக தலைவர் கருணாநிதி தலைமையிலான கூட்டத்தில் பொருளாளர் ஸ்டாலின், பொதுச்செயலாளர் அன்பழகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். எதிர்பார்க்கப்பட்டது போல், திமுக தென்மண்டல பொறுப்பாளர் அழகிரி கலந்து கொள்ளவில்லை. செயற்குழு கூட்டத்தில் அனைத்து செயற்குழு உறுப்பினர்களும் கலந்து கொள்ள
வேண்டிய அவசியம் இல்லை என அழகிரி விளக்களித்துள்ளார். சுமார் ஒன்றரை மணி நேரம் செயற்குழு கூட்டம் நடைபெற்றது.

திமுக செயற்குழு கூட்ட தீர்மானங்கள்: திமுக செயற்குழு கூட்டத்தில் மொத்தம் 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
*இலங்கையில் இறுதி யுத்தத்தின் போது நடைபெற்றது திட்டமிட்ட இனப்படுகொலை. அது குறித்து சர்வதேச விசாரணை நடத்த இந்தியா ஐ.நா.,வில் வலியுறுத்த வேண்டும்.
*இலங்கையில் தமிழர் வாழும் பகுதியில் பொது வாக்கெடுப்பு நடத்துவதற்கான தீர்மானத்தை மத்திய அரசு ஐ.நா., மன்றத்திற்கு முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.
*நவம்பர் மாதம் இலங்கையில் நடைபெறும் பொதுநலவாய மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது போன்ற தீர்மானங்கள் நிறைவேற்ப்பட்டன.
*இவை தவிர செயற்குழு கூட்டத்தில் அதிமுக., கண்டித்து கண்டன தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.
*இலங்கைத் தமிழர்களுக்காக போராடும் மாணவர்களுக்கு முட்டுக்கட்டை போடும் வகையில் அதிமுக அரசு கல்லூரிகளுக்கு காலவரையற்ற விடுமுறை அளித்துள்ளதற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
*இலங்கைத் தமிழர் பிரச்னையில் அதிமுக இரட்டை வேடம் போடுவதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டது.
*மத்திய அரசின் கெயில் நிறுவனம் தமிழகத்தில் விளைநிலங்களின் கீழ் எரிவாயு குழாய்கள் பதிக்கக்கூடாது என கண்டனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
*சேது சமுத்திர திட்டத்தை அமல் படுத்த வேண்டும் என வலியுறுத்தியும் தீர்மானம் நிறைவேறப்பட்டது.
கடந்த வாரம் ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இருந்து திமுக வெளியேறியது. அதன் பின்னர் நடைபெறும் முதல் செயற்குழு கூட்டம் என்பதால் கூடுதல் எதிர்பார்ப்பு ஏற்றபட்டது. திமுக மத்திய அமைச்சர்கள் ராஜினாமா கடிதம் கொடுத்த மறுநாளே ஸ்டாலின் வீட்டில் சிபிஐ ரெய்டு நடைபெற்றது.
எனவே மத்திய அரசைக் கண்டித்து காரசார தீர்மானங்கள் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தி.மு.க., ஏனோ சற்றே அடக்கி வாசித்த மாதிரியாகவே தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளன.
அதே போல் வரவிருக்கும் பாராளுமன்ற தேர்தல் குறித்தும் ஏதும் விவாதிக்கப்படவில்லை.

ad

ad