புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 மார்., 2013

"உங்கள் காலை பிடித்து கேட்டுகொள்கிறோம் , உங்கள் கைகளில் எங்கள் கண்ணீரை விட்டு அழுது மன்றாடுகிறோம்"

--------

பொது நண்பர்களே நீங்கள் எந்த கட்சி விருப்பம் கொண்டும் இருந்து கொள்ளுங்கள் அல்லது எந்த இயக்கத்திலும் இருந்து கொள்ளுங்கள் .

மாணவர்களின் ஈழ விடுதலை போராட்டத்திற்கு, அவர்களோடு உடன் வரும் பொழுது ஈழம் விரும்பும் நபராக மட்டுமே வாருங்கள் . கட்சி அடையாளங்களை அப்படியே உங்களிற்குள் வைத்து கொள்ளுங்கள்.

உங்கள் கட்சி விருப்பத்தை மாணவர்களிடம், புதியவர்களிடம் காட்டி அதன் செல்வாக்கை அரசியல் அறியா புதியவர்களிடம் காட்ட நினைத்தீர்கள் என்றால் உங்களுக்கு கிடைப்பது ஏமாற்றமே .

மாணவர் போராட்டம் மாணவர் போராட்டமாகவே இருக்கட்டும் .
அது "அந்த கட்சி "மாணவர் போராட்டம் , "இந்த இயக்கம் " மாணவர் போராட்டம் என்று நமக்குள் நம்மை பிரித்து , அடையாள படுத்த நினைக்கும் யாரையும் முதலில் தூர விலக்கி வையுங்கள்.

போராட வேண்டிய காலமும் , சந்திக்க வேண்டிய களமும் அதிகம் உள்ளது .

ஈழம் வெல்லும் , ஈழம் தமிழர்களின் பூமி அதை இப்போதைக்கு உலகத்தின் அனைத்து உதவியோடு ஆக்கிரமித்து இருக்கும் இலங்கை அந்த மண்ணை விட்டு வெளியேறி அங்கே தமிழர்கள் சுய நிர்ணய உரிமை பெறும் நாள் , நாளைக்கு மறுநாள் நடந்து விட கூடியது அல்ல.

இங்கே நாம் அடிக்கும் ஒவ்வொரு அடியும் போராட்ட விடைகளும் , இந்தியாவை இலங்கையில் இருந்து பிரிக்கும் .

இந்தியா பிரிந்தால் மொத்த உலகம் இலங்கையை விட்டு பிரியும்.

பிரிந்தால் பொது வாக்கெடுப்பு என்ற முழக்கத்தை நாம் அழுத்தலாம் . அழுத்த வேண்டும் .

அப்போது ஈழம் வரும் . வந்தே தீரும் .

எனவே பொதுவான நண்பர்களே எங்களிற்கு உதவுங்கள் ஆனால் உங்கள் கட்சி சாயத்தை எங்கள் மீது பூச நினைக்காதீர்கள் உங்கள் காலை பிடித்து கேட்டுகொள்கிறோம் , உங்கள் கைகளில் எங்கள் கண்ணீரை விட்டு அழுது மன்றாடுகிறோம் எங்களை பிரித்து அரசியல் கூட்டத்திற்குள் எங்களை அமிழ்த்து விடாதீர்கள் அண்ணன்களே !

நாம் அனைவரும் சேர்ந்து தமிழரின் மானத்தை காப்போம் . வீழ்ந்தான் செத்தான் என்ற நிலையில் உள்ள தமிழனின் வாழ்வை , உரிமையை போராடி பெற்றான் என்று மாற்றுவோம் .

வாருங்கள் உன்னத நோக்கத்தோடு கை கொடுங்கள்.

ஆங்காங்கே உள்ள மாணவர்கள் வீறு கொண்டு எழுங்கள் .

உங்களிற்கு அடையாளம் முக்கியம் அல்ல போராட்டமே முக்கியம் .

via - Loyolahungerstrike

ad

ad