புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

23 மார்., 2013




             க்கிய முற்போக்கு கூட்டணி அரசிலிருந்து தி.மு.க. முறித்துக்கொண்ட தினத்தன்று தி.மு.க. தொண்டர்கள் மத்தியில் நிலவிய மகிழ்ச்சியையும் கொண்டாட்டத்தையும் பார்த்தபோது அது ஏதோ ஒரு தேர்தல் வெற்றிக்கொண்டாட்டத்தைப் பார்ப்பதுபோல் இருந்தது. மத்தியில் அதிகாரத்திலிருந்து விலகுவது குறித்து அதன் கட்சித் தொண்டர்கள் ஏன் இவ்வளவு மகிழ்ச்சி அடைய வேண்டும்? இந்தக் கொண்டாட்டம் தி.மு.க. தலைமை செல்லவேண்டிய பாதையை சுட்டிக்காட்டுவதாகவே கருதுகிறேன். 
நக்கீரன் நன்றி 
தி.மு.க.வின் அடையாளமும் அஸ்திவாரமும் அதனுடைய தமிழ் உணர்வும் தமிழர் உரிமை சார்ந்த போராட்டங்களுமே. மிக நீண்ட காலமாக இந்த தமிழ் அடையாளம் தி.மு.க.வின் தனிச் சொத்தாக இருந்தது. வேறு எந்தக் கட்சிகளும் அந்த அடையாளத்தை நெருங்கக் கூட முடியவில்லை. சர்வதேச தமிழ்ச் சமூகத் தைப் பொறுத்தவரை தமிழினத் தலைவர் என்ற அடையாளத்தை கருணாநிதி மிக நீண்டகாலமாக தன் கையில் வைத்திருந்தார். இந்தி எதிர்ப்புப் போராட்டம், எமெர்ஜென்சியை எதிர்த்து நின்றது, மாநில உரிமைகளுக் காகத் தொடர்ந்து குரல் கொடுத்தது, ராஜீவ் காந்தி படுகொலைக்காக தி.மு.க. அரசு டிஸ்மிஸ் செய்யப்பட்டது என பல சந்தர்ப்பங்களில் தி.மு.க. அதன் தனித்துவமான கொள்கைகளின் பால் உறுதியுடன் போராடியிருக்கிறது. ஆனால் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் தி.மு.க. கடந்த 9 ஆண்டுகளாக நீடித்த காலம் என்பது அரசியல் ரீதியாக அதனுடைய இருண்ட காலம் என்றுதான் சொல்லவேண்டும்.

கடந்த 9 ஆண்டுகளுக்கு மேலாக தி.மு.க.வைப் போன்ற ஒரு நம்பகமான, இணக்க மான கூட்டணிக்கட்சியை காங்கிரஸ் பெற்றதில்லை. அது இடதுசாரிகள் (ஐ.மு.கூ-1), திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் போன்ற கட்சிகளுடன் பதட்டமும் சந்தேகமும் நிறைந்த உறவுகளையே வைத்துக் கொண்டி ருந்தது என்று சொல்லலாம். உண்மையில் தி.மு.க. விரும்பத்தகாத அளவிற்கு காங்கிரஸிடம் விட்டுக்கொடுத்தது, அனுசரித்துப் போனது. இதற்கான கடும் கண்டனங்களையும் பரவலாக சம்பாதித்தது. ஆனால் தனது நம்பகமான இந்தக் கூட்டாளிக்கு காங்கிரஸ் செய்தது என்ன?


2009ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் படுகொலை யின் போது தி.மு.க.வை செயல்பட விடாமல் முடக்கு வதற்காக பெரும் சதிவலையை காங்கிரஸ் பின்னியது. 2ஜி விவகாரத்தின் முழுப் பொறுப்பு தி.மு.க.வின் தலை யில் சுமத்தப்பட்டது. இன்று 2 ஜி விவகாரம் முழுக்க பிரதமருக்குத் தெரியும் என்ற உண்மை உலகிற்குத் தெரிய ஆரம்பித்திருக்கிறது. ஆனால் அன்று இதை ஆ.ராசா சொன்னபோது கேட்பதற்கு ஒரு செவிகூட இல்லை. ப.சிதம்பரம் போன்றவர்களின் சம்பந்தம் பற்றிய கேள்விகள் கண்டுகொள்ளப்படவில்லை. ஆ.ராசா வையும் கனிமொழியையும் சி.பி.ஐ. மூலம் காங்கிரஸ் ஜெயிலுக்கு அனுப்பியது. காரணம் 2ஜி-யில் தி.மு.க.வை முழுக்க பலிகொடுத்து தான் தப்பிப்பதற்காக மட்டுமல்ல. இலங்கைப் பிரச்சினையில் தி.மு.க. எடுத்திருக்கக்கூடிய இயல்பான நிலைப்பாடுகளை எடுக்கவிடாமல் பெரும் நெருக்கடிக்கு ஆளாக்கும் சதித் திட்டத்தை காங்கிரஸ் வெற்றி கரமாக நிறைவேற்றியது. 

இதன்மூலம்  தமி ழகத்தில் தி.மு.க.வின் செல்வாக்கு பெருமளவு நிர் மூலமாக்கப்பட்டது. உண்மை யில் தி.மு.க.விற்கு எதிராக ஜெயலலிதா செய்ததைவிட பல மடங்கு அழிவு வேலையை காங்கிரஸே செய்தது. தி.மு.க. தொண்டர்களின் மனதில் அது ஆறாத ரணத்தை ஏற்படுத்தியது. இனப்படுகொலைக்கு துணைபோன காங்கிரஸ் அரசாங்கத்திற்கு எதிராக முன்னணிப் படையாக நின்று போராட வேண்டிய தி.மு.க. தடுமாறு வதைக் கண்டு தி.மு.க. தொண்டர்கள் மௌனமாக கண்ணீர் சிந்தினார்கள். தமிழுணர்வின் அடிப்படையில் வளர்ந்த ஒரு இயக்கம் தமிழின விரோதியாகச் சித்தரிக்கப்படும் அவலத்தைக் கண்டு மனமுடைந்து போனார்கள். கடந்த பத்தாண்டுகளில் தி.மு.க.வில் எந்தப் போராட்டமும் இன்றி முன்னணிக்கு வந்த சக்திகளால் தொண்டர்களின் இந்தக் குமுறலை புரிந்துகொள்ள முடியவில்லை. கட்சித் தொண்டர்களின் உணர்வுகளுக் கும் கட்சியின் மேல் மட்டத்திற்கும் இடையே ஒரு இடைவெளி உருவானது. காங்கிரஸ் தி.மு.க.வின் எதிர்ப்புக் குணத்தையும் தமிழ் அடையாளத்தையும் அழிக்கும் சதிச்செயலை  வெற்றிகரமாக நிறைவேற்றியது மட்டுமல்ல, கருணாநிதியின் மிக நியாயமான கோரிக்கை களைக்கூட தனது பிளாக் மெயில் அரசியலால் புறம் தள்ளியதன் மூலம் அவரை தமிழக அரசியலில் பெரிய  அளவிற்குப் பலவீனப்படுத்தியது. தமிழகத்தில் இருக்கக்கூடிய சிறு கட்சி கள் இந்த விவகாரத்தில் ராஜபக்சே வைவிட கடுமையாக கரு ணாநிதியைப் பழித்தன. கருணாநிதி அவரது அரசியல் வாழ்க்கையில் எந்த காலத்திலும் சந்திக்காத விமர்சனங்களை இந்தப் பிரச்சினையில் சந்தித்தார்.

இந்தச் சூழலில்தான் கூட்டணி அரசிலிருந்து தி.மு.க. விலகும் முடிவு தொண்டர்களிடையே இவ்வளவு பெரிய உற்சாகத்தை ஏற்படுத்தியிருக் கிறது. எந்தக் காரணத்தைக்கொண்டும் தி.மு.க . காங்கிரசுடன் மீண்டும் ஒரு முறை சமரசம் செய்துகொள்ளக் கூடாது என்று தமிழுணர்வு கொண்ட ஒவ்வொரு தி.மு.க. தொண்டனும் விரும்புகிறான். அவன் இன்னொரு முறை காங்கிரஸ் என்ற தமிழின விரோதக் கட்சிக்காக அவமானத்தையும் பழிச்சொல்லையும் சுமக்கத் தயாராக இல்லை. 

மாணவர் போராட்டம் என்பது காங்கிரசிற்கு எதிரான -மத்திய அரசிற்கு எதிரான மக்கள் போராட்டமாக மாறிவிட்டது. இந்த நிலையில் காங்கிரசுடன் நீடிக்கும் ஒவ்வொரு நாளும் தி.மு.க.விற்கும் தமிழர் நலனுக்கும் பேரழிவையே கொண்டுவரும் என்று கருணா நிதி  இந்த முடிவை எடுத்திருக்கிறார். அமெரிக் காவின் தீர்மானத்தில் சர்வதேச விசாரணக்கும் அங்கு நிகழ்ந்ததை இனப்படுகொலை என அறிவிக்கவும் இந்திய அரசாங்கம் திருத்தம் கொண்டுவர வேண்டும் என்றும் பாராளுமன்றத் தில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்றும் கருணாநிதி முன்வைத்த கோரிக்கையை காங்கிரஸ் நிராகரித்துவிட்டதன் மூலம் தி.மு.க. இந்த முடிவை எடுத்திருக்கிறது. இந்த முடிவு காங்கிரசின் தமிழின விரோதப் போக்கு, மோசமான அயலுறவுக் கொள்கை ஆகியவற்றின் மீது தமிழகம் காட்டியிருக்கும் மிகப்பெரிய எதிர்ப்பு என்பதில் சந்தேகமில்லை. 


இலங்கைக்கு எதிரான அமெரிக்க தீர்மானம் என்பது அந்த தீர்மானத்தை ராஜபக்சேவே தயாரித்திருந்தால் எவ்வளவு மோசமாக இருக்குமோ அதைவிட மோசமாக இருக்கிறது. தீர்மானத்தின் இரண்டாம் வரைவில் இருந்த அழுத்தம்கூட இறுதி வரைவில் கைவிடப்பட்டு விட்டது. ‘இனப்படு கொலை’,‘சுதந்திரமான சர்வதேச விசாரணை‘ என்பதெல்லாம் நீக்கப்பட்டுவிட்டன. சுப்பிரமணிய சுவாமி இந்தியாவிற்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் அமெரிக்க அரசாங்கத்திற்கும் இடையே நடத்திய ரகசிய தரகு வேலைகளுக்கு உண்மையில் பலன் இருக்கத்தான் செய்திருக்கிறது. இலங்கையுடனான உறவில் தனது அதிகாரத்தை சீனாவுடன் சம நிலைப்படுத்திக்கொள்வதற்காக அமெரிக்கா ஆடிய நாடகத்தைக் கண்டு உலகத் தமிழர்கள் மீண்டும் ஏமாந்துதான் போனார்கள். ஒரு வேளை இலங்கையில் பெட்ரோல் கிடைப்பதாக இருந்தால் அமெரிக்கா வளைகுடா நாடுகளில் நடத்தியதுபோல தனது மனித உரிமைப் போராட்     டத்தை இதைவிட தீவிர மாக நடத்தியிருக்கும். பெரிய நாடுகளின் சர்வதேச பூகோள அரசியல் சூதாட் டத்தில் இலங்கையில் நடந்த இனப்படுகொலையும் தமிழர்களின் உரிமையும் இன்று பந்தயப் பொருளாகியிருக்கிறது. உண்மையில் இந்த தீர்மானம் கடுமையாக எதிர்க்கப்பட வேண்டிய ஒன்று. இந்தியா இதை ஆதரிக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. 

இந்த நிலையில் இலங்கைத் தமிழர்கள் விவ காரத்தில் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையை மாற்றுவதற்கான பெரும் அழுத்தத்தை மத்திய அரசிற்கு அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்து வெளிப்படுத்த வேண்டும். கருணாநிதியின் இந்த முடிவு காங்கிரஸைவிட ஜெயலலிதாவையும் வைகோவையும் சீமானையும் ஏமாற்றமடையச் செய்யும் என்பதில் எந்த சந்தேகமுமில்லை. ‘தி.மு.க. எதிர்ப்பு‘ என்ற புள்ளியில் தங்களது ஈழஅரசியலை நடத்திவந்த அவர்கள் இப்போது புதிய ஆயுதங்களைத் தேட நிர்பந்திக்கப்பட்டிருக்கிறார்கள். இது உண்மையில் ஒரு அர்த்தமற்ற அரசியல் சூழல் என்று சொல்லவேண்டும். இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பாகவும், தமிழக மீனவர் பிரச்சினை தொடர்பாகவும் தமிழ்ச் சமூகத்திற்கு கடும் அநீதியும் அவமானமும் இழைக்கப்பட்டு வரும் சூழலில் அவர்கள் தொடர்ந்து தி.மு.க. எதிர்ப்பு என்ற நிலையை முன்னெடுப்பதன் மூலமாக தமிழர்களுக் கான போராட்டத்தைப் பலவீனப்படுத்தவே செய்கிறார்கள். தமிழக அரசியல் இயக்கங்களுக் கிடையிலான இந்த முரண்பாட்டின் வழியாகத் தான் மத்திய அரசு தமிழகத்தின் உணர்ச்சிகளை யும் நலன்களையும் எந்தத் தயக்கமுமின்றி எட்டி உதைக்கிறது. அது தமிழ்நாட்டிலிருந்து கட்சிகளின் குரலைத்தான் கேட்கிறதேயொழிய ஒருபோதும் ஒன்றுபட்ட தமிழகத்தின் குரலைக் கேட்பதில்லை.

தி.மு.கவின் கடந்தகால தவறுகளை ஆவேசமாக விமர்சிப்பவர்களின் குரல் ஜெய லலிதாவிடம் பம்மிவிடுகிறது. "போர் என்றால் மக்கள் சாகத்தான் செய்வார்கள்' என்று சொன்ன வர், விடுதலைப் புலிகளுக்கு எதிரான மிகக் கடுமை யான நடவடிக்கைகள் எடுத்தவர் ஜெயலலிதா..  தமிழகத்தின் விடுதலைப் புலி ஆதரவுப் போ ராளிகளுக்கு இந்தக் கடந்த காலம் மட்டும் எப்படியோ மறந்துவிடு கிறது. ஜெயலலிதா திடீரென ஒரு நாள் தமிழீழ ஆதரவு முகமூடி யை எடுத்து அணிந்த போது கண்ணை மூடிக் கொண்டு நம்பியவர்கள் கருணாநிதி என்ன சொன் னாலும் நம்பத் தயாராக இல்லை. ஈழத்தை அவர் கள் பெற்றுத் தருகிறார் களோ இல்லையோ கருணாநிதி எதிர்ப்பின் மூலம் கிடைக்கும் வெற்றிக்கனியை அம்மாவின் காலடியில் சமர்ப்பிப்பதில் மட்டும் அவர்கள் கில்லாடிகளாக இருக்கிறார்கள். ஜெயலலிதா அரசாங்கம் மாணவர் போராட்டத்தை ஒடுக்குகிற சந்தர்ப்பத்தில்கூட தி.மு.க. அரசு என்ன செய்தது என்பதைப் பற்றி மட்டும்தான் பேசுகிறார்கள். மென்மையாகக் கண்டிக்கும்போதுகூட தமிழக போலீசாரைக் கண்டிக்கிறார்களே ஒழிய ஜெயலலிதா பேரைக்கூட சொல்ல மறுக்கிறார்கள். தி.மு.க. அதிகாரத்தில் இருக்கக்கூடாது என்பதுதான் இந்த கருணாநிதி வெறுப்பின் முதன்மையான குறிக்கோள். 

தி.மு.க. இன்று எதிர்ப்பு அரசியல், கொள்கை சார்ந்த அரசியல் என்ற தனது பழைய வரலாற் றிற்குத் திரும்ப ஒரு வரலாற்று சந்தர்ப்பத்தை பெற்றிருக்கிறது. அடுத்த தேர்தலில் எந்த தேசிய கட்சி ஈழத்தமிழர் ஆதரவு நிலைப்பாட்டை எடுக் கிறதோ அதனுடன் மட்டும்தான் கூட்டு என்கிற ஒரு நிலைப்பாட்டை தி.மு.க. எடுப்பதற்கான ஒரு துவக்கமாக இது இருக்

ad

ad