புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 மார்., 2013

புதிய தலைமுறையிலும் பிறகு கலைஞர் செய்திகளிலும் தொடர் நேரலையில் மனுஷ்ய புத்திரன் பேசிய சில அடிப்படைக் கருத்துக்கள்..
1. அமெரிக்க தீர்மானத்தை கிழித்தெறிந்துவிட்டுத்தான் அதைப்பற்றி இங்கே விவாதிக்க முடியும்.

2. இந்தத் தீர்மானத்தை இலங்கைக்கு எதிரான தீர்மானம் என்று ஊடகங்கள் அழைப்பதை நிறுத்த வேண்டும். 

3. கடைசிவரை மொளனமாக இருந்து, வாய் மொழி திருத்தம் என்றெல்லாம் பொய் சொல்லி இந்தியா மிக அருவருப்பான கபட நாடகத்தை ஆடியது



4. இந்தத் தீர்மானம் இந்தியாவும் அமெரிக்காவும் கூட்டாக தயாரித்தது. சுப்பிரமணிய சாமி போன்றவர்கள் இதற்கான தரகு வேலையை செய்தார்கள்.இந்தியாவும் அமெரிகாவும் அணு ஆயுதம், பன்னாடு வர்த்தகம் என பல ஒப்பந்தங்களை செய்துகொண்டு கூட்டாக செயல்பட்டு வருகின்றன. இந்தியா விரும்பாத ஒரு தீர்மானத்தை அமெரிக்கா கொண்டு வராது. தீர்மானத்தின் இரண்டாம் வரைவில் அமெரிக்கா இலங்கைக்கு ஆதரவாக செய்த பல திருத்தங்களின் பிண்னனியில் இந்தியாவே இருக்கிற்து.

5. இந்தத் தீர்மானத்தை இலங்கையின் பிரதிநிதி எதிர்த்துப் பேசியது ஒரு நாடகம்.

6. தேசிய மைய நீரோட்டத்தில் தமிழகம் தனித்தீவுபோல இருக்கிறது. தமிழர்களின் எந்தப் பிரச்சினை தொடர்பாகவும் தேசிய ஊடகங்களுக்கோ தேசிய கட்சிகளுக்கோ எந்த அக்கறையும் கிடையாது. தமிழகம் மிகப்பெரிய அரசியல் தனிமையில் நின்று கொண்டிருக்கிறது.

7. வெளியுறவுத்துறை சார்ந்த விவகாரங்களில் அதிகார மட்டத்தில் தமிழர்களின் நலன்களை முன்னிறுத்தக் கூடியவர்கள் யாரும் இல்லை.

8. தேசிய அரசியலில் தமிழகத்தின் நலன்களை முன்னிறுத்த தமிழக கட்சிகள் முற்றிலுமாக தவறி விட்டன.

9. இந்திய அரசின் துரோகம் தமிழகத்தில் பிரிவினைவாத இயக்கதிற்கு வித்திடும்

10. ஈழத் தமிழர்களுக்கு கிடைக்க வேண்டிய நீதி. இயற்கையான நீதி. அமெரிக்காவோ இந்தியாவோ அதை தடுத்து நிறுத்த முடியாது.

ad

ad