புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

29 ஜன., 2014

ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த முயற்சி!- பந்துல குணவர்தன
ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக போர் குற்றங்களை சுமத்தும் திட்டமிட்ட முயற்சியின் முதல்படியாகவே மார்ச் மாதம் ஐ.நா மனித உரிமை ஆணைக்குழுவில் இலங்கைக்கு எதிரான யோசனை கொண்டு வரப்படுவதாக கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன குற்றம் சுமத்தினார்.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்த சர்வதேச சமூகம் எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறினார்.
விடுதலைப் புலிகளிடம் இருந்து நாட்டை விடுவித்த ஜனாதிபதி, நாட்டுக்காக உயிரை தியாகம் செய்யவும் தயாராகவே இருக்கின்றார்.
சர்வதேச சதித்திட்டம் முன்னெடுக்கப்படும் நிலையில் ஜெனிவா அமர்வுகள் தொடர்பில் இலங்கை ஒரு நெருக்கடியான காலகட்டத்தை தற்போது எதிர்நோக்கியுள்ளது.
ஜனாதிபதியை தூக்கு மேடைக்கு கொண்டு செல்வதற்கான அடிப்படை வேலைகளை அவர்களை முன்னெடுத்துள்ளனர்.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவினாலேயே இராணுவம் வழிநடத்தப்பட்டதாக அவரை இலக்கு வைத்து பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.
மக்கள் அச்சமின்றி வாழும் சூழ்நிலையை ஜனாதிபதி நாட்டில் ஏற்படுத்திக் கொடுத்தார் என பந்துல குணவர்தன கூறினார்.

ad

ad