புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

29 ஜன., 2014


சுவிஸின் டென்னிஸ் விளையாட்டு வீரர் ரோஜர் பெடரர் ஸ்டிபன், எட்பேர்கை தன் பயிற்சியாளராய் தேர்ந்துதெடுத்துள்ளார்.
2014ம் ஆண்டில் வரவிருக்கும் டென்னிஸ் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெறும் நோக்கத்தில் கடந்த 1980ம் ஆண்டின் தலைசிறந்த டென்னிஸ் வீரர் என்ற பெயர் பெற்ற சுவிடன் நாட்டை சேர்ந்த ஸ்டிபன் எட்பர்கை முக்கிய கோச்சாக தன் பயிற்ச்சிகுழுவில் நியமித்துள்ளார்.

இதுகுறித்து ரோஜர் கூறுகையில், ஸ்டிபன் எட்பர்க் என் சிறு வயதிலிருந்து நான் நினைத்து பார்க்கும் சிறந்த ஆட்டநாயகன். இத்தகைய சிறப்பு மிகுந்த வீரர் என்னுடைய பயிற்ச்சியாளராக அவுஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் போட்டிகளில் தொடங்கி 10 வாரங்கள் எங்களுடன் பணிப்புரிவது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது என பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.
மேலும் 2012ம் ஆண்டின் விம்பிள்டன் போட்டியையும் சேர்த்து ரோஜர் பெடரர் 17 முறை டென்னிஸில் “கிராண்ட் ஸ்லாம்” என்ற பட்டத்தை ரோஜர் பெடரர் பெற்று சாதனை படைத்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது.

ad

ad