புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

29 ஜன., 2014

11ம் வகுப்பு பள்ளி மாணவியை கடத்திய அரசுப்பள்ளி ஆசிரியர் கைது! மாணவி மீட்பு!
சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே உள்ள கொண்டையம்பள்ளி கிராமத்தை சேர்ந்த மாணவி பெயர் பிரபா (16). (பெயர் மாற்றப்பட்டுள்ளது) இவர் ஆணையம்பட்டியில் உள்ள தனியார் பள்ளியில்
ப்ளஸ் 1 படித்து வருகிறார்.

மாணவி பிரபா பத்தாம் வகுப்பு படிக்கும்போது, மூலப்புதூர் நடுநிலைப் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்த ரமேஷ் (34) என்பவர் கொண்டையம்பள்ளியில் உள்ள தனி வகுப்பில் சேர்ந்து படித்துள்ளார்.
இதன் மூலம் மாணவியுடன் ஏற்பட்ட நெருக்கத்தால், கடந்த 20-ம் தேதி பள்ளிக்கு சென்ற மாணவி பிரபாவை கடத்திச் சென்றார் அந்த ஆசிரியர். இதுகுறித்து, மாணவியின் பெற்றோர், தம்மம்பட்டி போலீஸில் புகார் கொடுத்தனர்.
போலீஸார், வழக்கு பதிவு செய்து, தலைமறைவான ஆசிரியர் மற்றும் மாணவியை தேடிவந்தனர். இந்நிலையில், ஆசிரியர் ரமேஷ் மொபைல் ஃபோனுக்கு, மற்றொரு ஆசிரியர் ரமேஷ்குமார், தொடர்பு கொண்டு பேசியது தெரியவந்தது. (இந்த ஆசிரியர் ஏற்க்கனவே, பக்கத்து வீட்டுக்காரரின் மனைவியை கூட்டிக்கொண்டு ஓடியவர்) அதையடுத்து, நேற்று மதியம், கெங்கவல்லி ஏ.இ.இ.ஓ., அலுவலகத்துக்கு வந்த ஆசிரியர் ரமேஷ்குமாரை, போலீஸார் பிடித்து விசாரணை செய்தனர்.
இதில், பள்ளி மாணவியுடன் சென்ற ஆசிரியர், கன்னியாகுமரியில் உள்ள ஒரு விடுதியில் பகுதியில் தங்கியிருப்பது தெரியவந்தது. அதையடுத்து, ஆசிரியர் ரமேஷ்குமாருடன், தனிப்படை போலீஸார் நாகர்கோவில் சென்று, அங்கு தங்கியிருந்த ஆசிரியர் ரமேஷ் மற்றும் மாணவி பிரபா ஆகியோரை ஆத்தூருக்கு அழைத்து வந்தனர்.
பின்னர், கைது செய்யப்பட்ட ஆசிரியர் ரமேஷ் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். அவரிடமிருந்து மீட்கப்பட்ட மாணவி பிரபா மகளீர் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டார்.

ad

ad