யாழ்ப்பாணம் கிரிக்கெட் சங்கத்தின் ஆதரவுடன் யாழ்ப்பாணம் நியூஸ்ரார் விளையாட்டுக் கழகம், யாழ். மாவட்ட விளையாட்டுக்கழகங்களுக்கு இடையே நடத்தி வரும் லீக் முறையிலான 20/20
கிரிக் கெட் போட்டியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம் பெற்ற ஆட்டம் ஒன்றில் இதில் யாழ்ப்பாணம் சென்ரல் விளையாட்டுக்கழகம் 2 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.
போட்டியில் யாழ்ப்பாணம் சென்ரல். விளையாட்டுக்கழகமும் தெல்லிப்பழை கிறாஸ் கொப்பர்ஸ் விளையாட்டுக்கழகமும் மோதிக்கொண்டன.
போட்டியில்முதலில் துடுப்பெடுத்தாடிய சென்ரல் விளையாட்டுக் கழகம் 20 பந்துப் பரிமாற்றங்கள் நிறைவில் 4 இலக்குகளை இழந்து 150 ஓட்டங்களைப் பெற்றது.
ரஜீவ்குமார் ஆட்டமிழக்காது நான்கு சிக்ஸர்கள், ஒன்பது பவுண்டரிகள் அடங்கலாக 85, ஓட்டங்களையும் றொசான் 42 ஓட்டங்களையும் பெற்றதுடன் உதிரிகளாக 10 ஓட்டங் களும் பெறப்பட்டன.
கிறாஸ்கொப்பர்ஸ் விளையாட்டுக்கழகத்தைச் சோந்த அஜித் 4 பந்துப்பரிமாற்றங்கள் பந்து வீசி 30 ஓட்டங்களுக்கு 2 இலக்குகளையும், கபிலன் ,மதுசன் ஆகியோர் தலா 4 பந்துப்பரிமாற்றங்கள் பந்து வீசி முறையே 23, 31 ஓட்டங்களைக்கொடுத்து தலா ஓர் இலக்கையும் கைப்பற்றினார்கள்.
பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய கிறாஸ்கொப்பர்ஸ் விளையாட்டுக் கழகம் 20 பந்துப்பரி மாற்றங்கள் நிறைவில் 8 இலக்குகளை இழந்து 148 ஓட்டங்களை மட்டுமே பெற்றது.
கபிலன் நான்கு பவுண்டரிகள், இரண்டு சிக்ஸர்கள் அடங்கலாக 56 ஓட்டங்களையும், நிலோசன் 34 ஓட்டங்களையும், ரகீம் 20 ஓட்டங்களையும் பெற்றதுடன் உதிரிகளாக 10 ஓட்டங்களும் பெறப்பட்டன.
சென்ரல் விளையாட்டுக்கழகத்தைச் சேர்ந்த ரஜீவ்குமார் 4 பந்துப்பரிமாற்றங்கள் பந்து வீசி 24 ஓட்டங்களுக்கு 3 இலக்குகளையும் றொசான் 4 பந்துப்பரிமாற்றங்கள் பந்து வீசி 30 ஓட்டங்களுக்கு 3 இலக்குகளையும், ஜெசிந்தன் 4 பந்துப்பரிமாற்றங்கள் பந்து வீசி 21 ஓட்டங்களுக்கு 2 இலக்குகளையும் கைப்பற்றினார்கள்.
|