புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

29 ஜன., 2014

சர்வதேச போர்க்குற்ற விசாரணைக்கு இலங்கைக்கு இந்தியா அழுத்தம் கொடுக்க வேண்டும்! மன்னிப்புச் சபை
சர்வதேச போர்க்குற்ற விசாரணையை ஏற்குமாறு இலங்கைக்கு இந்தியா அழுத்தம் கொடுக்க வேண்டும் என சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது.போர்க்குற்ற விசாரணை அவசியம் என வட மாகாண சபையில் 27ம் திகதி பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளமை சர்வதேச மன்னிப்புச் சபை சுட்டிக்காட்டியுள்ளது.
மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஒரு மாகாண சபை சர்வதேச போர்க்குற்ற விசாரணை கோருகிற போது உள்நாட்டு விசாரணையில் எப்படி நம்பிக்கை வைக்க முடியும் என சர்வதேச மன்னிப்புச் சபையின் இந்திய தலைமை நிர்வாகி ஜி.ஆனந்தபத்மநாபன் தெரிவித்துள்ளார்.
இத்தீர்மானத்தை கவனத்தில் கொண்டு இறுதிக் கட்டப் போரில் இலங்கை அரச படைகள் மற்றும் புலிகள் அமைப்பு மீது சர்வதேச போர்க்குற்ற விசாரணை நடத்த இணங்குமாறு இலங்கைக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
சரியானதை செய்ய இந்தியா, இலங்கை மீது அழுத்தம் பிரயோகிக்க வேண்டும் எனவும் சர்வதேச விசாரணையை ஏற்று அதற்கு ஒத்துழைப்பு வழங்க இலங்கையை வலியுறுத்த வேண்டும் எனவும் அவர் கோரியுள்ளார்.

ad

ad