புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

29 ஜன., 2014

ஆனந்தி சசிதரனின் யோசனை நிராகரிப்பு! - புலிகளின் நினைவுத் தூபி குறித்த யோசனைக்கு அரசாங்கம் எதிர்ப்பு
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாணசபை உறுப்பினர் ஆனந்தி சசிதரனின் யோசனைத் திட்டம் நிராகரிக்கப்பட்டுள்ளது.ஜெனீவா மனித உரிமைப் பேரவை மாநாட்டில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் பங்கேற்க வேண்டுமென ஆனந்தி சசிதரன் யோசனை ஒன்றை முன்வைத்துள்ளார்.
எனினும், இந்த யோசனைத் திட்டத்திற்கு அனுமதி கிட்டவில்லை என சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த யோசனையை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும், தேவையென்றால் தனிப்பட்ட ரீதியில் ஜெனீவா செல்லுமாறு முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளதாகவும் சிங்கள ஊடகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
புலிகளின் நினைவுத் தூபி குறித்த யோசனைக்கு அரசாங்கம் எதிர்ப்பு
தமிழீழ விடுதலைப் புலிகளின் நினைவுத் தூபிகளை அமைக்கும் யோசனைக்கு அரசாங்கம் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.
வடக்கின் முள்ளிவாய்க்காலில் தமிழீழ விடுதலைப் புலிகளின் நினைவுத் தூபிகள் அமைக்கப்பட வேண்டுமென வட மாகாணசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
2009ம் ஆண்டு மே மாதம் 19ம் திகதி உயிரிழந்தவர்களுக்காக இவ்வாறு நினைவுத் தூபி அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
இது தேசியப் பாதுகாப்பு தொடர்பிலான பிரச்சினையாகும்.
எனவே நினைவுத் தூபி அமைக்க அனுமதிக்க முடியாது என பாதுகாப்பு அமைச்சுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நினைவுத் தூபி அமைக்கும் யோசனையின் பின்னணியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் புலி ஆதரவாளர்கள் செயற்பட்டு வருகின்றனர் என புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த புலி உறுப்பினர்களுக்காக தமிழகத்தின் தஞ்சாவூரில் நினைவுத் தூபி அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ad

ad