புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

29 ஜன., 2014

 ரொறன்ரோவில்; அதிகரித்த குளிர் நிலவும் எனக் காலநிலை அவதானநிலையம் மக்களுக்கு அறியத் தந்துள்ளது.
பனியும் அதிகரித்த குளிர் நிலையும் இணைந்துள்ள இக்கட்டான தருணத்தில் கடந்த கிழமை 1,600ற்கு மேற்பட்ட வாகனவிபத்துக்களி; ஏற்பட்டுள்ளன எனத் தெரியவருகிறது. அதிகரித்த குளிர் நிலவுவதற்கான காரணம் குளிர்ந்த காற்று வீசுகின்றது
எனத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
குறிப்பாக ரொறன்ரோப் பெரும்பாகத்தில் மிகமிக அதிகமான குளிர் நிலவும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திங்கட்கிழமை மாலையில் -25ஆகவிருக்கின்ற வெப்ப நிலையானது இரவு -30ற்குச் செல்கின்றது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் சிறிதளவு பனிப்பொழிவு நடைபெறுவதற்கான சாத்தியக்கூறுகளும் இருப்பதாகவும் அத்துடன் காற்று 60 கிலோமீற்றர் வேகத்தில் வீசும் எனவும் வானிலை அவதான நிலையம் தெரிவித்திருக்கின்றது.
அதீத குளிர் வானிலை நிலவுவதன் காரணமாக ரொறன்ரோ நகர சபை அலுவலர்கள் வீடற்ற மக்களுக்கான சேவையை அதிகரித்திருப்பதாவும் தெரியவருகிறது.
வீதிகளில் வழுக்கும் தன்மை காணப்படுவதால் பொலிசார் வாகன ஓட்டுனர்களை தத்தமது வேகத்தைக் குறைத்து ஓட்டும்படியும், ஒவ்வொரு வாகனங்களுக்கிடையிலான இடைவெளிகளை அதிகரிக்கும்படியும், அறிவுறுத்தியிருக்கின்றார்கள்.
திங்கட்கிழமை கிட்டத்தட்ட ஒவ்வொரு 4.5 நிமிடங்களுக்கு ஒரு வாகன விபத்து நடைபெற்றதாகவும், திங்கள் மாலையில் கிட்டத்தட்ட 125 விபத்துக்கள் நடைபெற்றதாகவும் ரொறன்ரோப் பொலிசார் தெரிவித்திருக்கின்றார்கள்.
விமான நிpலையங்கள் பயணிகளை தத்தமது பயணங்களுக்கான விமான சேவைகளின் விபரங்களைப் பரிசீலித்த பின்பே விமான நிலையங்களுக்குச் சமுகமளிக்கும்படி கோரியுள்ளனர்.
இவ்வாறான அதீத குளிர் நிலமை செவ்வாய்க்கிழமையும் தொடரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ad

ad