புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

29 ஜன., 2014

யாழ்ப்பான பல்கலை கழகத்தின் புதிய துணை வேந்தருக்காகான தேர்தல் நடை பெற இருக்கின்றது . தற்போது துணை வேந்தராக உள்ள பேராசிரியர் வசந்தி அரசரட்ணம் அவர்கள் மீண்டும் தேர்தலில் நிற்க முடிவெடுத்துள்ளார் . மீண்டும் பல்கலைகழகத்தில் இவருடைய தலைமையை கணிசமானளவு விரிவுரையாளர்களும் மாணவர்களும் கல்விசார்ந்த, கல்விசாரா ஊழியர்களும் விரும்ப வில்லை . அந்தளவிற்கு பல்கலைகழகத்தை ஆட்டி படைத்தவர் இவர் . தமிழ் சமூகத்தின்,தனித்துவமிக்க கலை கலாசாரத்தின் அடையாளமாக ,சின்னமாக கருதபடுகின்ற யாழ்ப்பான பல்கலை கழகத்தினை இவருக்கு முன்னர் இருந்த துணைவேந்தர்கள் நல்ல முறையிலும் ஓரளவென்றாலும் கட்டி காத்திருந்தார்கள். அவர்களுடைய காலங்களில் உலக தமிழர்களும் மாணவர்களும் பெருமையுடன் எமது பல்கலைகழகத்தை பற்றி பேசுமளவிற்கு சகல துறைகளிலும் வலிமையும் சிறப்பும் கொண்டிருந்தது யாழ்ப்பான பல்கலைகழகம் . யாருக்கும் மண்டியிட்டாத சவால் நிறைந்த எமது பல்கலைக்கழகத்தில் தனது சுயநலத்திற்காக தீய சக்திகள் தலைவிரித்தாட அனுமதி கொடுத்து எல்லாத்தியும் சீரழித்த பெருமை இந்த அக்காவையே சாரும் அரசியல் செல்வாக்குடன் பதவிக்கு வந்த இவர், தனது காலத்தில் பல வசந்தா லீலைகளை அரங்கேற்றியிருக்கின்றார். அவற்றையும் ஒருமுறை பார்க்கலாம் 1-பதவிக்கு வந்ததும் பலகலை கழக மாணவர் ஒன்றிய தலைவர் தவபாலனை பதவி நீக்கி பலகலை கழகத்தில் இருந்து இடைநீக்கி தனது வில்லத்தனத்தை அறிவித்தமை 2.கலை பீட மாணவர்களை மந்தைகள் என்று முக்கியமான கூட்டம் ஒன்றில் உரையாற்றி பின்னர் மன்னிப்பு கோரியமை 3.ஒரே தடவையில் குற்றங்கள் விசாரிக்க படாமல் 2௦ அப்பாவி மாணவர்களை பல்கலைகழகத்தில் இருந்து கண்மூடித்தனமாக இடைவிலக்கியமை 4. குற்றம் செய்த தமிழ் மாணவர்களுக்கு தண்டனை ,சிங்கள மாணவர்களுக்கு புன்னகையும் மன்னிப்பும் 5. பல்கலை கழகத்திற்குள் தசாப்தங்களுக்கு பின்னர் இராணுவத்தை வரவேற்றமை, பல கூட்டங்களுக்காக கைலாசபதி கலையரங்கை சீருடையினர் பயன்படுத்த அனுமதி கொடுத்தமை 6.பலகை கழக வரலாற்றில் பொலிஸ் முதன் முதலாக பல்கலை கழகத்திற்குள் புகுந்து இரவு வேளை வரவேற்பு நிகழ்வுக்காக மேடையலங்காரம் செய்துகொண்டு இருந்த மாணவர்களை மிலேச்சத்தனமாக விரட்டி விரட்டி தாக்கியமை. ஆனால் அதற்கும் தனக்கும் சம்மந்தம் இல்லை என்று மிக சாதரணமாக கூறியமை 7. மாவீரர் தின நிகழ்வுகளுடன் தொடர்பு படுத்தி மாணவர் ஒன்றிய தலைவர்களையும் பல மாணவர்களையும் இராணுவம் போலிஸ் பிடித்து கொண்டு போகும் வரை கண்மூடிக்கொண்டு இருந்து விட்டு பின்னர் மாணவர்களை விடுவிக்க பாடுபடுவது போல நடித்தமை 8.மாணவர் விடுதிக்குள் புகுந்து பெண் மாணவிகளையும் மாணவர்களையும் சப்பாத்து கால்களாலும் தடிகளாலும் தாக்கியமைக்கு கூட கண்டனமே தெரிவிக்காத இரக்கமற்ற பிறவி என்பதை நிரூபித்தமை 9.சிங்கள மானவிகள் அரைகுறையான உடைகளுடன் விரிவுரைகளுக்கு வருவதை தடுக்க முடியாது என கை விரித்து பல்கலைகழகத்தின் தமிழ் பண்பாட்டை கேவல படுத்துகின்றமை 1௦. இரவு களியாட்ட விடுதியில் பாடி ஆடப்படும் அபாசம் நிறைந்த நடன நிகழ்வை பல்கலை சிங்கள மாணவர்கள் நிகழ்த்த அனுமதித்து தமிழ் கலாசார நிகழ்வுகளை சீரழித்தமை 1 1. மூன்று தசாப்தங்களாக பலகலை கழகத்திற்குள் கால் வைக்காமல் இருந்த டக்களஸ் ஐயா அவர்களை வர வைத்தமை 12.இதுவரை காலமும் தனது சுய நலத்துக்காக பதவி ஆசைக்காக பல்கலைகழகத்தை நாறடித்துகொண்டு இருக்கின்றமை . இவ்வாறு அடிக்கி கொண்டே போகலாம் ............. எனவே யாரை அடுத்து தெரிவு செய்ய வேண்டும் என்று பொருத்தமானவர்கள் தான் தீர்மானித்து பல்கலை கழகத்தை மீள மீட்டெடுக்க வேண்டும்

ad

ad