இலங்கைக்கு எதிரான தீர்மானம் தயாரிக்கப்பட்டுள்ளது!
ஜெனீவா மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராக சமர்ப்பிக்கப்பட உள்ள தீர்மானம் தயாரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.எதிர்வரும் மார்ச் மாதம் 26ம் திகதி இலங்கை தொடர்பான தீர்மானம் முன்வைக்கப்பட உள்ளது.
பிரிட்டனும் அமெரிக்காவும் கூட்டாக இணைந்து இந்த தீர்மானத்தை தயாரித்துள்ளன.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவைவயின் ஆணையாளர் நவனீதம்பிள்ளை இலங்கை தொடர்பிலான பத்தாயிரம் சொற்களைக் கொண்ட அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்க உள்ளார்.
இந்த அறிக்கையின் பின்னர், இலங்கை தொடர்பான தீர்மானம் சமர்ப்பிக்கப்பட உள்ளது.
போர்க் குற்றச் செயல்கள் தொடர்பில் சுயாதீன சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டுமென வலியுறுத்தப்படும் என பிரிட்டன் தெரிவித்துள்ளது,