புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

29 ஜன., 2014

முருகன், சாந்தன், பேரறிவாளன் மனு மீது நாளை விசாரணை
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப் பெற்ற முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூவரின் சார்பில் தண்டனையை குறைக்க வலியுறுத்தி தாக்கல் செய்யப்பட்ட மனு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருவதாக இருந்த நிலையில், விசாரணை நாளை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில், சிறையில் இருக்கும் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோருக்கு கடந்த 2000ம் ஆண்டு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது.
இதையடுத்து அவர்களின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட கருணை மனுவை, கடந்த 2011ம் ஆண்டு குடியரசுத் தலைவர் நிராகரித்தார்.
கருணை மனு நீண்ட காலம் நிலுவையில் வைக்கப்பட்டிருந்த காரணத்தால், அவர்களின் மரண தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில், மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு இன்று விசாரணைக்கு வருகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சதாசிவம் தலைமையிலான அமர்வு, வீரப்பன் கூட்டாளிகளுக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை, ஆயுள் தண்டனையாக குறைத்தது.
கருணை மனு மீது முடிவெடுப்பதில் தாமதம் ஏற்பட்டால், அதை கருத்தில் கொண்டு மரணத் தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்கலாம் என நீதிபதிகள் தீர்ப்பில் தெரிவித்தனர்.
இதனடிப்படையில், சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோரின் மரண தண்டனையும் குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இன்று விசாரணைக்கு வருவதாக இருந்த முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூவரின் மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக் கொள்வதற்கு முன்னர், மற்றொரு வழக்கின் விசாரணை நீண்ட நேரம் நடைபெற்றதால், மூவரின் மனுக்கள் மீதான விசாரணை நாளை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முதலில் முருகனின் வழக்கறிஞர் ராம்ஜெத் மலானி தனது வாதத்தை தொடங்குகிறார்.

ad

ad